LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-106

2.106.திருவலஞ்சுழி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சித்தீசநாதர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
2616 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே 
யிருங்கடல் வையத்து 
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை 
முழுமணித் தரளங்கள் 
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி 
வாணனை வாயாரப் 
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் 
வழிபடு மதனாலே.
2.106. 1
முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்? 
2617 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை 
விரிகடல் வருநஞ்சம் 
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய 
விறைவனை யுலகத்தில் 
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை 
வலஞ்சுழி யிடமாகக் 
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ 
டினிதிருந் தமையாலே.
2.106. 2
கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவனை, உமைகேள்வனை, இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந்தனவாகும். 
2618 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன 
விறலின்கண் அடியாரைப் 
பரிந்து காப்பன பத்தியில் வருவன 
மத்தமாம் பிணிநோய்க்கு 
மருந்து மாவன மந்திர மாவன 
வலஞ்சுழி யிடமாக 
இருந்த நாயக னிமையவ ரேத்திய 
விணையடித் தலந்தானே.
2.106. 3
திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ளவனும், இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன. அடியவர்களை அன்புடன் காப்பன. பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன. உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன. 
2619 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் 
அறத்திற முனிவர்க்கன் 
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் 
தினிதருள் பெருமானார் 
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி 
யிடமகிழ்ந் தருங்கானத் 
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய 
வற்புத மறியோமே.
2.106.4
நீலகண்டரும், செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளியவரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தையாம் இன்னதென அறியேம்.
2620 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா 
மெரியுரு வொருபாகம் 
பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர் 
பெருங்கடற் பவளம்போல் 
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் 
பரிபவர் மனம்புக்க 
எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ 
ரிணையடி தொழுவாரே.
2.106.5
சிவபிரான் மண், விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர். பெண்ணும், ஆணும் கலந்த திருவுருவினர். கடற் பவளம்போலும் திருமேனியர். வலஞ்சுழியில் நீங்காது உறைபவர். தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர் அவர்தம் இணையடி தொழபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர். 
2621 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் 
மேனியர் மடமாதர் 
இருவ ராதரிப் பார்பல பூதமும் 
பேய்களு மடையாளம் 
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் 
தகந்தொறும் பலிக்கென்று 
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே 
வரிவளை கவர்ந்தாரே.
2.106.6
அகப்பொருட்டுறை; தலைவி கூற்று. ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர். உமை, கங்கை இருவர் பால் அன்பு செய்பவர். பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர். வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர். 
2622 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் 
குலவிய நெய்த்தானம் 
என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ 
ரிமையவர் பணிகேட்பார் 
அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம் 
வலஞ்சுழி யரனார்பால் 
சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று 
சேயிழை தளர்வாமே.
2.106.7
அகப்பொருட்டுறை; தோழி கூற்று. குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல் வருபவர். இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர். மேற்குறித்த ஊர்களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம். பல ஊர் களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள். 
2623 குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் 
குலவரைப் பரப்பாய 
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி 
தோளிரு பதுமூன்றி 
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் 
வலஞ்சுழி யெம்மானைப் 
பயில வல்லவர் பரகதி காண்பவர் 
அல்லவர் காணாரே.
2.106. 8
குயில் மொழியும் கொடியிடையும், மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர். அல்லவர் காணார். 
2624 அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு 
மரவணைத் துயின்றானும் 
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் 
மாண்பமர் தடக்கையில் 
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி 
வலங்கொடு பாதத்தால் 
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு 
துன்பங்கள் களைவாரே.
2.106.9
நான்முகனும், திருமாலும் திருமுடியையும், திருவடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான். மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர். அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடைவார் தொல்வினைகளும் துன்பங்களும் நீங்கப்பெறுவர். 
2625 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் 
தவம்புரிந் தவஞ்செய்வார் 
நெறிய லாதன கூறுவர் மற்றவை 
தேறன்மின் மாறாநீர் 
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி 
மருவிய பெருமானைப் 
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி 
லளவறுப் பொண்ணாதே.
2.106. 10
அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர். அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர். வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும். 
2626 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய 
மருந்தினை வயற்காழி 
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் 
நவிற்றிய தமிழ்மாலை 
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் 
கேட்டுகந் தவர்தம்மை 
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் 
வருத்தம்வந் தடையாவே.
2.106.11
மாதொருகூறனை, திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை, காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத்திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார். அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா. இம்மை, மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா. 
திருச்சிற்றம்பலம்

2.106.திருவலஞ்சுழி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சித்தீசநாதர். தேவியார் - பெரியநாயகியம்மை. 

2616 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.2.106. 1
முழுமையான மணிகளும், முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும், அன்பு செய்தும், பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத்தலால், கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில், நெஞ்சே! நீ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்? 

2617 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம் உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய விறைவனை யுலகத்தில் வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக் கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந் தமையாலே.2.106. 2
கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர்களைக் காத்தருளிய இறைவனை, உமைகேள்வனை, இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந்தனவாகும். 

2618 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப் பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு மருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி யிடமாக இருந்த நாயக னிமையவ ரேத்திய விணையடித் தலந்தானே.2.106. 3
திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ளவனும், இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன. அடியவர்களை அன்புடன் காப்பன. பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன. உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன. 

2619 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன் றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார் மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத் தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய வற்புத மறியோமே.2.106.4
நீலகண்டரும், செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளியவரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தையாம் இன்னதென அறியேம்.

2620 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா மெரியுரு வொருபாகம் பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர் பெருங்கடற் பவளம்போல் வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்க எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ ரிணையடி தொழுவாரே.2.106.5
சிவபிரான் மண், விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர். பெண்ணும், ஆணும் கலந்த திருவுருவினர். கடற் பவளம்போலும் திருமேனியர். வலஞ்சுழியில் நீங்காது உறைபவர். தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர் அவர்தம் இணையடி தொழபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர். 

2621 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் மேனியர் மடமாதர் இருவ ராதரிப் பார்பல பூதமும் பேய்களு மடையாளம் அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்று வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே வரிவளை கவர்ந்தாரே.2.106.6
அகப்பொருட்டுறை; தலைவி கூற்று. ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர். உமை, கங்கை இருவர் பால் அன்பு செய்பவர். பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர். வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர். 

2622 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் குலவிய நெய்த்தானம் என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ ரிமையவர் பணிகேட்பார் அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால் சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று சேயிழை தளர்வாமே.2.106.7
அகப்பொருட்டுறை; தோழி கூற்று. குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல் வருபவர். இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர். மேற்குறித்த ஊர்களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம். பல ஊர் களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள். 

2623 குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றி மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப் பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.2.106. 8
குயில் மொழியும் கொடியிடையும், மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர். அல்லவர் காணார். 

2624 அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு மரவணைத் துயின்றானும் கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில் மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே.2.106.9
நான்முகனும், திருமாலும் திருமுடியையும், திருவடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான். மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர். அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடைவார் தொல்வினைகளும் துன்பங்களும் நீங்கப்பெறுவர். 

2625 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார் நெறிய லாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர் மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப் பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி லளவறுப் பொண்ணாதே.2.106. 10
அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர். அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர். வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும். 

2626 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே.2.106.11
மாதொருகூறனை, திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை, காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத்திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார். அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா. இம்மை, மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.