LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-108

2.108.திருவிற்குடிவீரட்டானம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். 
தேவியார் - மைவார்குழலியம்மை. 
2638 வடிகொள் மேனியர் வானமா மதியினர் 
நதியினர் மதுவார்ந்த 
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் 
உடைபுலி யதளார்ப்பர் 
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை 
விற்குடி வீரட்டம் 
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை 
அருவினை யடையாவே.
2.108. 1
தௌவான திருமேனியினரும், வானத்துப்பிறை மதியைச் சூடியருவம், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற உமையம்மை மணாளரும் புலித்தோலை உடுத்தவரும் ஆகிய விடை ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா. 
2639 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் 
கடிகமழ் சடைக்கேற்றி 
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் 
பொருகரி யுரிபோர்த்து 
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை 
விற்குடி வீரட்டம் 
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் 
வருத்தம தறியாரே.
2.108.2
களர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும், கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம் பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமையரும், யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச் செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம் அறியார். 
2640 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி 
மார்பினர் வலங்கையில் 
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் 
தாடிய வேடத்தர் 
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி 
விற்குடி வீரட்டம் 
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் 
பேணுவ ருலகத்தே.
2.108. 3
கரிய கண்டத்தினரும், வெண்மையான திருநீற்றை அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள் நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத்தினரும், ஆகிய சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கைசூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப் பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர். 
2641 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் 
பொலிதர நலமார்ந்த 
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு 
கடலெழு விடமுண்டார் 
வேதம் ஓதிய நாவுடை யானிடம் 
விற்குடி வீரட்டம் 
சேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி 
தீவினை கெடுமாறே.
2.108. 4
பூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர், அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர். மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர். வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி கெடும் வழி உண்டோ? 
2642 கடிய ஏற்றினர் கனலன மேனியர் 
அனலெழ வூர்மூன்றும் 
இடிய மால்வரை கால்வளைத் தான்றன 
தடியவர் மேலுள்ள 
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை 
விற்குடி வீரட்டம் 
படிய தாகவே பரவுமின் பரவினாற் 
பற்றறும் அருநோயே.
2.108.5
விரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர். கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி வீரட்டத்தைப் பண்போடு பரவுமின், பரவினால் அரிய நோய்கள் பற்றறும். 
2643 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் 
கையினர் மெய்யார்ந்த 
அண்ண லன்புசெய் வாரவர்க் கௌயவர் 
அரியவர் அல்லார்க்கு 
விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி 
விற்குடி வீரட்டம் 
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் 
கிடர்கள்வந் தடையாவே.
2.108.6
மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா. 
2644 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை 
யிகலழி தரவூன்று 
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு 
பொருளினன் இருளார்ந்த 
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி 
விற்குடி வீரட்டம் 
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் 
துன்பநோ யடையாவே.
2.108. 8
இடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர் மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர். இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம் நோய்கள் அடையா. 
2645 செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் 
திருவ டியறியாமை 
எங்கு மாரெரி யாகிய இறைவனை 
யறைபுனன் முடியார்ந்த 
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் 
விற்குடி வீரட்டம் 
தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர் 
தவமல்கு குணத்தாரே.
2.108.9
திருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி மற்றும் திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப் போர்த்து உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர். 
2646 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ 
ராடைய ரவர்வார்த்தை 
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் 
பரிவுறு வீர்கேண்மின் 
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் 
விற்குடி வீரட்டம் 
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் 
கருத்துறுங் குணத்தாரே.
2.108. 10
அன்புடையவர்களே! கேளுங்கள்: சோற்றுத்திரளை உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும், பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க குணமுடையோர் ஆவர். 
2647 விலங்க லேசிலை யிடமென வுடையவன் 
விற்குடி வீரட்டத் 
திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை 
எழில்திகழ் கழல்பேணி 
நலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம் 
பந்தனற் றமிழ்மாலை 
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரமாமே.
2.108. 11
மேருமலையேவில். கயிலாய மலையே தங்குமிடம் எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை, எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள், மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும். 
திருச்சிற்றம்பலம்

2.108.திருவிற்குடிவீரட்டானம் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். தேவியார் - மைவார்குழலியம்மை. 

2638 வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர் விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம் அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.2.108. 1
தௌவான திருமேனியினரும், வானத்துப்பிறை மதியைச் சூடியருவம், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற உமையம்மை மணாளரும் புலித்தோலை உடுத்தவரும் ஆகிய விடை ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா. 

2639 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் கடிகமழ் சடைக்கேற்றி உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி யுரிபோர்த்து விளங்கு மேனியர் எம்பெரு மானுறை விற்குடி வீரட்டம் வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் வருத்தம தறியாரே.2.108.2
களர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும், கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம் பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமையரும், யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச் செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம் அறியார். 

2640 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர் விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவ ருலகத்தே.2.108. 3
கரிய கண்டத்தினரும், வெண்மையான திருநீற்றை அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள் நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத்தினரும், ஆகிய சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கைசூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப் பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர். 

2641 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு கடலெழு விடமுண்டார் வேதம் ஓதிய நாவுடை யானிடம் விற்குடி வீரட்டம் சேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி தீவினை கெடுமாறே.2.108. 4
பூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர், அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர். மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர். வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி கெடும் வழி உண்டோ? 

2642 கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ வூர்மூன்றும் இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம் படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே.2.108.5
விரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர். கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி வீரட்டத்தைப் பண்போடு பரவுமின், பரவினால் அரிய நோய்கள் பற்றறும். 

2643 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த அண்ண லன்புசெய் வாரவர்க் கௌயவர் அரியவர் அல்லார்க்கு விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம் எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் கிடர்கள்வந் தடையாவே.2.108.6
மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா. 

2644 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை யிகலழி தரவூன்று திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு பொருளினன் இருளார்ந்த விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி விற்குடி வீரட்டம் தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் துன்பநோ யடையாவே.2.108. 8
இடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர் மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர். இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம் நோய்கள் அடையா. 

2645 செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் திருவ டியறியாமை எங்கு மாரெரி யாகிய இறைவனை யறைபுனன் முடியார்ந்த வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் விற்குடி வீரட்டம் தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர் தவமல்கு குணத்தாரே.2.108.9
திருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி மற்றும் திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப் போர்த்து உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர். 

2646 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ ராடைய ரவர்வார்த்தை பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் பரிவுறு வீர்கேண்மின் விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் விற்குடி வீரட்டம் கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் கருத்துறுங் குணத்தாரே.2.108. 10
அன்புடையவர்களே! கேளுங்கள்: சோற்றுத்திரளை உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும், பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க குணமுடையோர் ஆவர். 

2647 விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத் திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை எழில்திகழ் கழல்பேணி நலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்மற்றது வரமாமே.2.108. 11
மேருமலையேவில். கயிலாய மலையே தங்குமிடம் எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை, எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள், மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.