LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-109

2.109.திருக்கோட்டூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர். 
தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை. 
2648 நீல மார்தரு கண்டனே நெற்றியோர் 
கண்ணனே யொற்றைவிடைச் 
சூல மார் தரு கையனே துன்றுபைம் 
பொழில்கள் சூழ்ந்தழகாய 
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
சால நீடல மதனிடைப் புகழ்மிகத் 
தாங்குவர் பாங்காவே.
2.109. 1
நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வதுமாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர். 
2649 பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு 
மெல்விர லரவல்குல் 
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென 
மிழற்றிய மொழியார்மென் 
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு 
அருள்பெறல் எளிதாமே.
2.109. 2
தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும், அரவு போன்ற அல்குலையும் உடையவரும். மயில் குயில் கிளி போன்ற மொழியினரும், மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர். 
2650 நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் 
அடியவர் தமக்கெல்லாம் 
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் 
செல்வமல் கியநல்ல 
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் 
கொழுந்தே யென்றெழுவார்கள் 
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ 
டமர்ந்தினி திருப்பாரே.
2.109.3
நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும், செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும், செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர். 
2651 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா 
மாங்கனி பயில்வாய 
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் 
அன்னஞ்சேர்ந் தழகாய 
குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் 
கொழுந்தே யென்றெழுவார்கள் 
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை 
நீடிய புகழாரே.
2.109. 4
அடியாவர் தமக்கு எல்லாம் நம்பனார் பொன்னுலகில் தேவரோடும் குனிதிருப்பர் பாலச்சுளை, மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில்களையும், கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர். 
2652 உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் 
அன்பராம் அடியார்கள் 
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு 
பத்திசெய் தெத்திசையும் 
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் 
அவனருள் பெறலாமே.
2.109. 5
உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும், என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து, குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும். அவனது திருவருளைப் பெறலாம். 
2653 துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் 
துன்னெருக் கார்வன்னி 
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் 
புலியுரி யுடையாடை 
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் 
கொழுந்தே யென்றெழுவாரை 
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை 
ஏதம்வந் தடையாவே.
2.109. 6
நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி, ஊமத்தை, வெள்எருக்கமலர், வன்னியிலை, ஆகியவற்றைச் சூடியும், தலைமாலைகளை மேனியில் அணிந்தும், கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும், புலித்தோலை இடையில் உடுத்தும், கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடம், கேடும் ஏதமும் இல்லை. 
2654 மாட மாளிகை கோபுரங் கூடங்கண் 
மணியரங் கணிசாலை 
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் 
பரிசொடு பயில்வாய 
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
கேட தொன்றில ராகிநல் லுலகினிற் 
கெழுவுவர் புகழாலே.
2.109. 7
மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம், அழகியசாலை, புகழ்தற்குரியமதில், பொன் மண்டபம் ஆகியவற்றோடு, அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே, என்று எழுவார் கேடில்லாதவராய் உலகலொம் விளங்கிய புகழ் உடையவராவர். 
2655 ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை 
யெடுத்தலும் உமையஞ்சிச் 
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு 
நாளவற் கருள்செய்த 
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் 
கொழுந்தினைத் தொழுவார்கள் 
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் 
தவமுடை யவர்தாமே.
2.109. 8
ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது உமையம்மை அஞ்ச, இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட, அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய, பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர். 
2656 பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செய்யும் 
முத்தினைப் பவளத்தைத் 
தேடி மாலயன் காணவொண் ணாதவத் 
திருவினைத் தெரிவைமார் 
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் 
நிகழ்தரு புகழாரே.
2.109. 9
பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும் முத்தும் பவளமும் போன்றவனை, திருமாலும், நான்முகனும் தேடியறிய முடியாத திருவை, மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில் விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வமும், உலகெலாம் நிகழும் புகழும் அடைவர். 
2657 கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் 
கொழுந்தினைச் செழுந்திரளைப் 
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா 
மெய்யன்நல் லருளென்றும் 
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் 
டாக்கர்சொற் கருதாதே 
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் 
பெருமையைப் பெறுவாரே.
2.109. 10
வளைந்த வெண்பிறையை அணிந்த சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்திதுசராகிய, செழுமையின் திரட்சியை, மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின். பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவர். 
2658 பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் 
பாவையோ டுருவாரும் 
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் 
கொழுந்தினைச் செழும்பவளம் 
வந்து லாவிய காழியுள் ஞானசம் 
பந்தன்வாய்ந் துரைசெய்த 
சந்து லர்ந்தமிழ் மாலைகள் வல்லவர் 
தாங்குவர் புகழாலே.
2.109. 11
பந்தாடும் மெல் விரலையும், பவளவாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை, கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

2.109.திருக்கோட்டூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர். தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை. 

2648 நீல மார்தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே யொற்றைவிடைச் சூல மார் தரு கையனே துன்றுபைம் பொழில்கள் சூழ்ந்தழகாய கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் சால நீடல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காவே.2.109. 1
நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வதுமாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர். 

2649 பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு மெல்விர லரவல்குல் மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார்மென் கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு அருள்பெறல் எளிதாமே.2.109. 2
தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும், அரவு போன்ற அல்குலையும் உடையவரும். மயில் குயில் கிளி போன்ற மொழியினரும், மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர். 

2650 நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாம் செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல் கியநல்ல கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவார்கள் அம்பொ னார்தரு முலகினில் அமரரோ டமர்ந்தினி திருப்பாரே.2.109.3
நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும், செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும், செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர். 

2651 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் அன்னஞ்சேர்ந் தழகாய குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவார்கள் நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை நீடிய புகழாரே.2.109. 4
அடியாவர் தமக்கு எல்லாம் நம்பனார் பொன்னுலகில் தேவரோடும் குனிதிருப்பர் பாலச்சுளை, மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில்களையும், கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர். 

2652 உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள் பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு பத்திசெய் தெத்திசையும் குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவனருள் பெறலாமே.2.109. 5
உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும், என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து, குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும். அவனது திருவருளைப் பெறலாம். 

2653 துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் துன்னெருக் கார்வன்னி பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடை கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவாரை என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே.2.109. 6
நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி, ஊமத்தை, வெள்எருக்கமலர், வன்னியிலை, ஆகியவற்றைச் சூடியும், தலைமாலைகளை மேனியில் அணிந்தும், கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும், புலித்தோலை இடையில் உடுத்தும், கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடம், கேடும் ஏதமும் இல்லை. 

2654 மாட மாளிகை கோபுரங் கூடங்கண் மணியரங் கணிசாலை பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாய கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் கேட தொன்றில ராகிநல் லுலகினிற் கெழுவுவர் புகழாலே.2.109. 7
மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம், அழகியசாலை, புகழ்தற்குரியமதில், பொன் மண்டபம் ஆகியவற்றோடு, அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே, என்று எழுவார் கேடில்லாதவராய் உலகலொம் விளங்கிய புகழ் உடையவராவர். 

2655 ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை யெடுத்தலும் உமையஞ்சிச் சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு நாளவற் கருள்செய்த குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தினைத் தொழுவார்கள் தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் தவமுடை யவர்தாமே.2.109. 8
ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது உமையம்மை அஞ்ச, இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட, அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய, பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர். 

2656 பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செய்யும் முத்தினைப் பவளத்தைத் தேடி மாலயன் காணவொண் ணாதவத் திருவினைத் தெரிவைமார் கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள் நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழாரே.2.109. 9
பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும் முத்தும் பவளமும் போன்றவனை, திருமாலும், நான்முகனும் தேடியறிய முடியாத திருவை, மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில் விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வமும், உலகெலாம் நிகழும் புகழும் அடைவர். 

2657 கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழுந்திரளைப் பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன்நல் லருளென்றும் காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் டாக்கர்சொற் கருதாதே பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.2.109. 10
வளைந்த வெண்பிறையை அணிந்த சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்திதுசராகிய, செழுமையின் திரட்சியை, மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின். பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவர். 

2658 பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோ டுருவாரும் கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழும்பவளம் வந்து லாவிய காழியுள் ஞானசம் பந்தன்வாய்ந் துரைசெய்த சந்து லர்ந்தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.2.109. 11
பந்தாடும் மெல் விரலையும், பவளவாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை, கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.