LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-110

2.110.திருமாந்துறை 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஐராவணேசுவரர். 
தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை. 
2659 செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் 
செருந்திசெண் பகமானைக் 
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை 
குருந்தலர் பரந்துந்தி 
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைகின்ற 
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் 
ஏத்துதல் செய்வோமே.
2.110. 1
வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம். 
2660 விளவு தேனொடு சாதியின் பலங்களும் 
வேய்மணி நிரந்துந்தி 
அளவி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைவானத் 
துளவ மான்மக னைங்கணைக் காமனைச் 
சுடவிழித் தவனெற்றி 
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை 
யன்றிமற் றறியோமே.
2.110. 2
விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில், மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை, அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம். 
2661 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் 
கூந்தலின் குலைவாரி 
ஓடு நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைநம்பன் 
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் 
வானவர் மகிழ்ந்தேத்தும் 
கேடி லாமணி யைத்தொழல் அல்லது 
கெழுமுதல் அறியோமே.
2.110. 3
தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந்துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம். 
2662 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை 
யிளமரு திலவங்கம் 
கலவி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைகண்டன் 
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் 
ஆடர வுடன்வைத்த 
மலையை வானவர் கொழுந்தினை அல்லது 
வணங்குதல் அறியோமே.
2.110. 4
இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை, பிறை, அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம். 
2663 கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி 
குரவிடை மலருந்தி 
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைவானைப் 
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் 
பாட்டவி மலர்சேர்த்தித் 
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் 
தலைப்படுந் தவத்தோரே.
2.110. 5
கோங்கு, செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை, தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர். 
2664 பெருகு சந்தனங் காரகில் பீலியும் 
பெருமரம் நிமிர்ந்துந்திப் 
பொருது காவிரி வடகரை மாந்துறைப் 
புனிதனெம் பெருமானைப் 
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் 
பார்மன்னர் பணிந்தேத்த 
மருத வானவர் வழிபடு மலரடி 
வணங்குதல் செய்வோமே.
2.110. 6
சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி, மதி, மன்னர்கள், மருத்துக்கள் அன்போடு வழிபடும் திருவடிகளை வணங்குவோம். 
2665 நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் 
நாண்மல ரவைவாரி 
இறவில் வந்தெறி காவிரி வடகரை 
மாந்துறை யிறையன்றங் 
கறவ னாகிய கூற்றினைச் சாடிய 
அந்தணன் வரைவில்லால் 
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் 
நிரைகழல் பணிவோமே.
2.110.7
மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந்தவனும், மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம். 
2666 மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட 
மந்திகள் மாணிக்கம் 
உந்தி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைவானை 
நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை 
நெரித்திடு விரலானைச் 
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது 
தீநெறி யதுதானே.
2.110.8
மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை, நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர். 
2667 நீலமாமணி நித்திலத் தொத்தொடு 
நிரைமலர் நிரந்துந்தி 
ஆலி யாவரு காவிரி வடகரை 
மாந்துறை யமர்வானை 
மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா 
மலரடி யிணைநாளும் 
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் 
கூற்றுவன் நலியானே.
2.110.9
நீல மணிகளையும், முத்துக்களையும், மலர்களையும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள். நம்மைக் கூற்றுவன் நலியான். 
2668 நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் 
நெடுங்கழை நறவேலம் 
நன்று மாங்கனி கதலியின் பலங்களு 
நாணலின் நுரைவாரி 
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யொருகாலம் 
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது 
அதுவவர்க் கிடமாமே.
2.110. 10
சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர். நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேலமரம், மாங்கனி, வாழைக்கனி, நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ள திருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே மேலானது. 
2669 வரைவ ளங்கவர் காவிரி வடகரை 
மாந்துறை யுறைவானைச் 
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் 
செழுமறை நிறைநாவன் 
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் 
பந்தன்அன் புறுமாலை 
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் 
பாவமும் இலர்தாமே.
2.110. 11
மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத்தனாய், சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத்தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

2.110.திருமாந்துறை 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஐராவணேசுவரர். தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை. 

2659 செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக் கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.2.110. 1
வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம். 

2660 விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்தி அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானத் துளவ மான்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றி அளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.2.110. 2
விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில், மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை, அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம். 

2661 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் கூந்தலின் குலைவாரி ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைநம்பன் வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும் கேடி லாமணி யைத்தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே.2.110. 3
தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந்துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம். 

2662 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை யிளமரு திலவங்கம் கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகண்டன் அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடர வுடன்வைத்த மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே.2.110. 4
இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை, பிறை, அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம். 

2663 கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானைப் பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித் தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படுந் தவத்தோரே.2.110. 5
கோங்கு, செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை, தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர். 

2664 பெருகு சந்தனங் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப் பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப் பரிவி னாலிருந் திரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே.2.110. 6
சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி, மதி, மன்னர்கள், மருத்துக்கள் அன்போடு வழிபடும் திருவடிகளை வணங்குவோம். 

2665 நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை யிறையன்றங் கறவ னாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரைவில்லால் நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் நிரைகழல் பணிவோமே.2.110.7
மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந்தவனும், மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம். 

2666 மந்த மார்பொழின் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச் சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே.2.110.8
மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை, நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர். 

2667 நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளும் கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.2.110.9
நீல மணிகளையும், முத்துக்களையும், மலர்களையும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள். நம்மைக் கூற்றுவன் நலியான். 

2668 நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம் நன்று மாங்கனி கதலியின் பலங்களு நாணலின் நுரைவாரி ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யொருகாலம் அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது அதுவவர்க் கிடமாமே.2.110. 10
சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர். நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேலமரம், மாங்கனி, வாழைக்கனி, நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ள திருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே மேலானது. 

2669 வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச் சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன் அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தன்அன் புறுமாலை பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.2.110. 11
மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத்தனாய், சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத்தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.