LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-111

2.111.திருவாய்மூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர். 
தேவியார் - பாலினுநன்மொழியம்மை. 
2670 தளிரிள வளரென வுமைபாடத் 
தாளம் மிடவோர் கழல்வீசிக் 
கிளரிள மணியர வரையார்த் 
தாடும் வேடக் கிறிமையார் 
விளரிள முலையவர்க் கருணல்கி 
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல் 
வளரிள மதியமொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 1
தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல, உமையம்மை அருகிருந்து பாடவும், தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்களை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திருநீறுபூசி, முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். வாய்மூரடிகளாகிய அவர் வருவார் காணீர். 
2671 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி 
விரிதரு கோவண வுடைமேலோர் 
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் 
பலபல கடைதொறும் பலிதேர்வார் 
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் 
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ 
வந்தனை பலசெய இவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 2
தழல் போன்ற திருமேனியராய், திருநீறுபூசி, விரித்தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக் கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று பலியேற்பவர். செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை புகுந்து எனக்கு அருளை நல்கி ப்புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு செய்யுமாறு வருவார் காணீர். 
2672 பண்ணிற் பொலிந்த வீணையர் 
பதினெண் கணமு முணராநஞ் 
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் 
உள்ளம் உருகில் உடனாவார் 
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் 
சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற 
வண்ணப் பிறையோ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 3
பண்ணிசை பொருந்திய வீனைய உடையவர். பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு விளங்கும் திருமிடற்றை உடையவர். திருநீற்றுச் சுண்ணம் அணிந்த மார்பினர். அழகிய சடைமீது இளம்பிறை சூடியவர். வாய்மூரில் விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர். 
2673 எரிகிளர் மதியமொ டெழினுதன்மேல் 
எறிபொறி யரவினொ டாறுமூழ்க 
விரிகிளர் சடையினர் விடையேறி 
வெருவவந் திடர்செய்த விகிர்தனார் 
புரிகிளர் பொடியணி திருவகலம் 
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும் 
வரியர வரைக்கசைத் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 4
சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும் பிறை மதியையும், அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும், கங்கையையும் அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர். திருநீறணிந்த மார்பினர். சத்திய வடிவினர். வாய்மூரில் விளங்கும் அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வருவார். காணீர். 
2674 அஞ்சன மணிவணம் எழில்நிறமா 
வகமிட றணிகொள வுடல்திமில 
நஞ்சினை யமரர்கள் அமுதமென 
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க 
வெஞ்சின மால்களி யானையின்தோல் 
வெருவுறப் போர்த்ததநிறமு மஃதே 
வஞ்சனை வடிவினொ டிவராணீர் 
வாய்மூரடிகள் வருவாரே.
2.111. 5
நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும் கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறு நுதலை உடைய உமையம்மை நடுங்க யானையின் தோலைக் கண்டோர் அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின் மனம் கவர வஞ்சனைவடிவோடு வருவார். அவரைக் காணீர். 
2675 அல்லிய மலர்புல்கு விரிகுழலார் 
கழலிணை யடிநிழ லவைபரவ 
எல்லியம் போதுகொண் டெரியேந்தி 
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார் 
சொல்லிய அருமறை யிசைபாடிச் 
சூடிள மதியினர் தோடுபெய்து 
வல்லியந் தோலுடுத் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111.6
அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில் எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவு தலை ஏற்றருளுபவர். வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து புலித்தோலுடுத்துவருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர். 
2676 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் 
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர் 
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் 
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார் 
பொடியணி வடிவொடு திருவகலம் 
பொன்னென மிளிர்வதொர் அரவினொடும் 
வடிநுனை மழுவினொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 7
மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழு மணிகளின் ஒளி சிதறும் திருவடியினர். வீதிகளில் பெண்கள் பலியிடலைக் கண்டு முறுவல் செய்பவர். திருநீறு அணிந்த வடிவோடும், பொன்போல் மிளிரும் பாம்பணிந்த மார்போடும், கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர். 
2677 கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் 
கண்ணியர் வீணையர் தாமுமஃதே 
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா 
இறைவனா ருறைவதொர் இடம்வினவில் 
பட்டிணை யகலல்குல் விரிகுழலார் 
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய 
வட்டணை யாடலொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 8
இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். வீணை வாசிப்பவர். அவ்விறைவர் சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும். பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய்மூர் இறைவராகிய அப்பெருமானார் வருவார். காணீர். 
2678 ஏனருப்பினொ டெழிலாமை 
யிசையப் பூண்டோ ரேறேறிக் 
கானம திடமா வுறைகின்ற 
கள்வர் கனவிற் றுயர்செய்து 
தேனுண மலர்கள் உந்திவிம்மித் 
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற 
வானநன் மதியினொ டிவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 9
பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும் அணிந்து எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம் உள்ளங்களைக் கவரும் கள்வராவர். கனவிடைத் தோன்றி நமக்குத் துயர் விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது பிறையணிந்து அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர். 
2679 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் 
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர் 
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் 
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக் 
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் 
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய 
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
2.111. 10
பிறைசூடியவராய், சுடர்முடியவராய், திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றைமாலை சூடியவராய், பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி, தாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார். காணீர். 
2680 திங்களொ டருவரைப் பொழிற்சோலைத் 
தேனலங் கானலந் திருவாய்மூர் 
அங்கமொ டருமறை யொலிபாடல் 
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி 
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல 
ஞானசம் பந்தன் தமிழ்மாலை 
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் 
தமர்நெறி யுல்குக்கோர் தவநெறியே.
2.111. 11
சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும் சோலைகளையும் உடையதிருவாய்மூரிலுள்ள, வேதங்கள், வேதாங்கங்கள் ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடிகளைப் பரவி நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறி, உலகில் மேலான தவநெறியாகும். 
திருச்சிற்றம்பலம்

2.111.திருவாய்மூர் 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர். தேவியார் - பாலினுநன்மொழியம்மை. 

2670 தளிரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக் கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார் விளரிள முலையவர்க் கருணல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல் வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 1
தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல, உமையம்மை அருகிருந்து பாடவும், தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்களை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திருநீறுபூசி, முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். வாய்மூரடிகளாகிய அவர் வருவார் காணீர். 

2671 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி விரிதரு கோவண வுடைமேலோர் பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார் சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ வந்தனை பலசெய இவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 2
தழல் போன்ற திருமேனியராய், திருநீறுபூசி, விரித்தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக் கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று பலியேற்பவர். செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை புகுந்து எனக்கு அருளை நல்கி ப்புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு செய்யுமாறு வருவார் காணீர். 

2672 பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணராநஞ் சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார் சுண்ணப் பொடிநீ றணிமார்பர் சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற வண்ணப் பிறையோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 3
பண்ணிசை பொருந்திய வீனைய உடையவர். பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு விளங்கும் திருமிடற்றை உடையவர். திருநீற்றுச் சுண்ணம் அணிந்த மார்பினர். அழகிய சடைமீது இளம்பிறை சூடியவர். வாய்மூரில் விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர். 

2673 எரிகிளர் மதியமொ டெழினுதன்மேல் எறிபொறி யரவினொ டாறுமூழ்க விரிகிளர் சடையினர் விடையேறி வெருவவந் திடர்செய்த விகிர்தனார் புரிகிளர் பொடியணி திருவகலம் பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும் வரியர வரைக்கசைத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 4
சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும் பிறை மதியையும், அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும், கங்கையையும் அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர். திருநீறணிந்த மார்பினர். சத்திய வடிவினர். வாய்மூரில் விளங்கும் அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வருவார். காணீர். 

2674 அஞ்சன மணிவணம் எழில்நிறமா வகமிட றணிகொள வுடல்திமில நஞ்சினை யமரர்கள் அமுதமென நண்ணிய நறுநுதல் உமைநடுங்க வெஞ்சின மால்களி யானையின்தோல் வெருவுறப் போர்த்ததநிறமு மஃதே வஞ்சனை வடிவினொ டிவராணீர் வாய்மூரடிகள் வருவாரே.2.111. 5
நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும் கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறு நுதலை உடைய உமையம்மை நடுங்க யானையின் தோலைக் கண்டோர் அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின் மனம் கவர வஞ்சனைவடிவோடு வருவார். அவரைக் காணீர். 

2675 அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார் சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111.6
அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில் எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவு தலை ஏற்றருளுபவர். வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து புலித்தோலுடுத்துவருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர். 

2676 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர் முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் முறைமுறை பலிபெய முறுவல்செய்வார் பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதொர் அரவினொடும் வடிநுனை மழுவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 7
மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழு மணிகளின் ஒளி சிதறும் திருவடியினர். வீதிகளில் பெண்கள் பலியிடலைக் கண்டு முறுவல் செய்பவர். திருநீறு அணிந்த வடிவோடும், பொன்போல் மிளிரும் பாம்பணிந்த மார்போடும், கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர். 

2677 கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதே எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதொர் இடம்வினவில் பட்டிணை யகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய வட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 8
இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். வீணை வாசிப்பவர். அவ்விறைவர் சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும். பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய்மூர் இறைவராகிய அப்பெருமானார் வருவார். காணீர். 

2678 ஏனருப்பினொ டெழிலாமை யிசையப் பூண்டோ ரேறேறிக் கானம திடமா வுறைகின்ற கள்வர் கனவிற் றுயர்செய்து தேனுண மலர்கள் உந்திவிம்மித் திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற வானநன் மதியினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 9
பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும் அணிந்து எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம் உள்ளங்களைக் கவரும் கள்வராவர். கனவிடைத் தோன்றி நமக்குத் துயர் விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது பிறையணிந்து அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர். 

2679 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர் பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக் கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.2.111. 10
பிறைசூடியவராய், சுடர்முடியவராய், திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றைமாலை சூடியவராய், பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி, தாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார். காணீர். 

2680 திங்களொ டருவரைப் பொழிற்சோலைத் தேனலங் கானலந் திருவாய்மூர் அங்கமொ டருமறை யொலிபாடல் அழல்நிற வண்ணர்தம் மடிபரவி நங்கள்தம் வினைகெட மொழியவல்ல ஞானசம் பந்தன் தமிழ்மாலை தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி யுல்குக்கோர் தவநெறியே.2.111. 11
சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும் சோலைகளையும் உடையதிருவாய்மூரிலுள்ள, வேதங்கள், வேதாங்கங்கள் ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடிகளைப் பரவி நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறி, உலகில் மேலான தவநெறியாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.