LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-112

2.112.திருஆடானை 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர். 
தேவியார் - அம்பாயிரவல்லியம்மை. 
2681 மாதோர்கூறுகந் தேறதேறிய 
ஆதியானுறை யாடானை 
போதினாற்புனைந் தேத்துவார்தமை 
வாதியாவினை மாயுமே. 2.112. 1
அம்பிகையை ஒருபாகமாக உகந்து கொண்டு விடைமேல் ஏறியருளும் முதல்வன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்களால் அலங்கரித்தும் அர்ச்சித்தும் வழிபடுபவர்களின் வினைகள் அவர்களை வருத்தமாட்டாதனவாய் மாய்ந்துவிடும். 
2682 வாடல்வெண்டலை யங்கையேந்திநின் 
றாடலானுறை யாடானை 
தோடுலாமலர் தூவிக்கைதொழ 
வீடுநுங்கள் வினைகளே. 2.112. 2
உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி நின்று ஆடுதலை உடைய சிவபிரானது திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்தூவித் தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும். 
2683 மங்கைகூறினன் மான்மறியுடை 
அங்கையானுறை யாடானை 
தங்கையாற்றொழு தேத்தவல்லவர் 
மங்குநோய்பிணி மாயுமே. 2.112. 3
மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில் ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின் நோய்கள் கெடும் பிணிகள் (வினைகள் மாயும்). 
2684 சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை 
அண்ணலானுறை யாடானை 
வண்ணமாமலர் தூவிக்கைதொழ 
எண்ணுவாரிட ரேகுமே. 2.112. 4
சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த மார்பில் பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவுளாகிய சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து, அவ்விறைவனை அழகும் மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர் ஏகும். 
2685 கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய 
ஐயன்மேவிய வாடானை 
கையணிம்மல ரால்வணங்கிட 
வெய்யவல்வினை வீடுமே. 2.112. 5
கொய்யப் பெற்றதும் அழகியதுமாகிய கொன்றை மலர் மாலையைச் சூடிய தலைவன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனைக் கைகளால் மலர்தூவித்தொழுது வணங்குபவர்களின் கொடிய வல்வினைகள் அவர்களை விட்டொழியும். 
2686 வானிளம்மதி மல்குவார்சடை 
ஆனஞ்சாடல னாடானை 
தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த 
ஊனமுள்ள வொழியுமே. 2.112. 6
வானில் விளங்கும் இளம்பிறையைத் தமது திருமுடியில் சூடியவரும் நீண்ட சடைமுடியை உடையவரும், பஞ்ச கௌவியத்தை விரும்பி ஆடுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய திரு ஆடானையை அடைந்து அவ்விறைவர் திருவடிகளில் தேன் பொருந்திய அழகிய மலர்களைச் சேர்ப்பவர்களின் முன் வினைகளாக உள்ளனயாவும் ஒழியும். 
2687 துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை 
அலங்கலானுறை யாடானை 
நலங்கொண்மாமலர் தூவிநாடொறும் 
வலங்கொள்வார்வினை மாயுமே. 2.112. 7
விளங்குகின்ற வெண்மழுவைக் கையில் ஏந்தி, சுற்றிய சடைமுடிமீது கொன்றை வில்வமாலைகளை அணிந்துள்ள 148 சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனை அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும் அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும். 
2688 வெந்தநீறணி மார்பிற்றோல்புனை 
அந்தமில்லவ னாடானை 
கந்தமாமலர் தூவிக்கைதொழும் 
சிந்தையார்வினை தேயுமே. 2.112. 8
தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின் கண் மான்தோலை அணிந்தவரும், தோற்றக் கேடு இல்லாதவருமான சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள் தேயும். 
2689 மறைவலாரொடு வானவர்தொழு 
தறையுந்தண்புன லாடானை 
உறையும்ஈசனை யேத்தத்தீவினை 
பறையுநல்வினை பற்றுமே. 2.112. 9
வேதங்களில் வல்ல அந்தணர்களோடு விண்ணில் உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திருவாடானையில் உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும். நல்வினைகள் வந்துசேரும். 
2690 மாயனும்மல ரானுங்கைதொழ 
ஆயவந்தண னாடானை 
தூயமாமலர் தூவிக்கைதொழத் 
தீயவல்வினை தீருமே. 2.112. 10
மாயவனாகிய திருமாலும், தாமரைமலர் மேலுறையும் நான்முகனும் கைகளால் தொழுது வழிபடுதற்குரியவனாகிய அந்தணன் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தூய மலர்களைத் தூவிக்கைகளால் தொழுபவர்களின் தீய வல் வினைகள் தீரும். 
2691 வீடினார்மலி வெங்கடத்துநின் 
றாடலானுறை யாடானை 
நாடிஞானசம் பந்தனசெந்தமிழ் 
பாடநோய்பிணி பாறுமே. 2.112. 11
ஊழிக்காலத்து இறந்தவர்களின் உடல்கள் நிறைந்து எரிந்து வேகும் சுடுகாட்டுள் நின்று உருத்திரதாண்டவமாடும் இறைவன் உறையும் திருவாடானையை அடைந்து ஞானசம்பந்தன் அருளிய இச்செந் தமிழ் மாலையைப் பாடி வழிபடுபவர்களின் நோய்களும் பிணிகளும் நீங்கும். 
திருச்சிற்றம்பலம்

2.112.திருஆடானை 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர். தேவியார் - அம்பாயிரவல்லியம்மை. 

2681 மாதோர்கூறுகந் தேறதேறிய ஆதியானுறை யாடானை போதினாற்புனைந் தேத்துவார்தமை வாதியாவினை மாயுமே. 2.112. 1
அம்பிகையை ஒருபாகமாக உகந்து கொண்டு விடைமேல் ஏறியருளும் முதல்வன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்களால் அலங்கரித்தும் அர்ச்சித்தும் வழிபடுபவர்களின் வினைகள் அவர்களை வருத்தமாட்டாதனவாய் மாய்ந்துவிடும். 

2682 வாடல்வெண்டலை யங்கையேந்திநின் றாடலானுறை யாடானை தோடுலாமலர் தூவிக்கைதொழ வீடுநுங்கள் வினைகளே. 2.112. 2
உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி நின்று ஆடுதலை உடைய சிவபிரானது திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்தூவித் தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும். 

2683 மங்கைகூறினன் மான்மறியுடை அங்கையானுறை யாடானை தங்கையாற்றொழு தேத்தவல்லவர் மங்குநோய்பிணி மாயுமே. 2.112. 3
மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில் ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின் நோய்கள் கெடும் பிணிகள் (வினைகள் மாயும்). 

2684 சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை அண்ணலானுறை யாடானை வண்ணமாமலர் தூவிக்கைதொழ எண்ணுவாரிட ரேகுமே. 2.112. 4
சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த மார்பில் பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவுளாகிய சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து, அவ்விறைவனை அழகும் மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர் ஏகும். 

2685 கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய ஐயன்மேவிய வாடானை கையணிம்மல ரால்வணங்கிட வெய்யவல்வினை வீடுமே. 2.112. 5
கொய்யப் பெற்றதும் அழகியதுமாகிய கொன்றை மலர் மாலையைச் சூடிய தலைவன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனைக் கைகளால் மலர்தூவித்தொழுது வணங்குபவர்களின் கொடிய வல்வினைகள் அவர்களை விட்டொழியும். 

2686 வானிளம்மதி மல்குவார்சடை ஆனஞ்சாடல னாடானை தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த ஊனமுள்ள வொழியுமே. 2.112. 6
வானில் விளங்கும் இளம்பிறையைத் தமது திருமுடியில் சூடியவரும் நீண்ட சடைமுடியை உடையவரும், பஞ்ச கௌவியத்தை விரும்பி ஆடுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய திரு ஆடானையை அடைந்து அவ்விறைவர் திருவடிகளில் தேன் பொருந்திய அழகிய மலர்களைச் சேர்ப்பவர்களின் முன் வினைகளாக உள்ளனயாவும் ஒழியும். 

2687 துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை அலங்கலானுறை யாடானை நலங்கொண்மாமலர் தூவிநாடொறும் வலங்கொள்வார்வினை மாயுமே. 2.112. 7
விளங்குகின்ற வெண்மழுவைக் கையில் ஏந்தி, சுற்றிய சடைமுடிமீது கொன்றை வில்வமாலைகளை அணிந்துள்ள 148 சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனை அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும் அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும். 

2688 வெந்தநீறணி மார்பிற்றோல்புனை அந்தமில்லவ னாடானை கந்தமாமலர் தூவிக்கைதொழும் சிந்தையார்வினை தேயுமே. 2.112. 8
தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின் கண் மான்தோலை அணிந்தவரும், தோற்றக் கேடு இல்லாதவருமான சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள் தேயும். 

2689 மறைவலாரொடு வானவர்தொழு தறையுந்தண்புன லாடானை உறையும்ஈசனை யேத்தத்தீவினை பறையுநல்வினை பற்றுமே. 2.112. 9
வேதங்களில் வல்ல அந்தணர்களோடு விண்ணில் உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திருவாடானையில் உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும். நல்வினைகள் வந்துசேரும். 

2690 மாயனும்மல ரானுங்கைதொழ ஆயவந்தண னாடானை தூயமாமலர் தூவிக்கைதொழத் தீயவல்வினை தீருமே. 2.112. 10
மாயவனாகிய திருமாலும், தாமரைமலர் மேலுறையும் நான்முகனும் கைகளால் தொழுது வழிபடுதற்குரியவனாகிய அந்தணன் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தூய மலர்களைத் தூவிக்கைகளால் தொழுபவர்களின் தீய வல் வினைகள் தீரும். 

2691 வீடினார்மலி வெங்கடத்துநின் றாடலானுறை யாடானை நாடிஞானசம் பந்தனசெந்தமிழ் பாடநோய்பிணி பாறுமே. 2.112. 11
ஊழிக்காலத்து இறந்தவர்களின் உடல்கள் நிறைந்து எரிந்து வேகும் சுடுகாட்டுள் நின்று உருத்திரதாண்டவமாடும் இறைவன் உறையும் திருவாடானையை அடைந்து ஞானசம்பந்தன் அருளிய இச்செந் தமிழ் மாலையைப் பாடி வழிபடுபவர்களின் நோய்களும் பிணிகளும் நீங்கும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.