LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-114

2.114.திருக்கேதாரம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் வடதேசத்திலுள்ளது. 
சுவாமிபெயர் - கேதாரேசுவரர். 
தேவியார் - கௌரியம்மை. 
2703 தொண்டரஞ்சு களிறும் 
அடக்கிச் சுரும்பார்மலர் 
இண்டைகட்டி வழிபாடு 
செய்யு மிடமென்பரால் 
வண்டுபாட மயிலால 
மான்கன்று துள்ளவரிக் 
கெண்டைபாயச் சுனைநீல 
மொட்டலருங் கேதாரமே.
2.114. 1
அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு, நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம், வண்டுகள் பாடவும், மயில்கள் ஆர்ப்பரிக்கவும், மான் கன்றுகள் துள்ளவும், சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும். 
2704 பாதம்விண்ணோர் பலரும் 
பரவிப் பணிந்தேத்தவே 
வேதநான்கும் பதினெட்டொ 
டாறும் விரித்தார்க்கிடம் 
தாதுவிண்ட மதுவுண்டு 
மிண்டிவரு வண்டினம் 
கீதம்பாட மடமந்தி 
கேட்டுகளுங் கேதாரமே.
2.114. 2
விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும் விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம், மலரின் மது உண்ட வண்டுகள் கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும். 
2705 முந்திவந்து புரோதாய 
மூழ்கி முனிகள்பலர் 
எந்தைபெம்மா னெனநின்றி 
றைஞ்சும் மிடமென்பரால் 
மந்திபாயச் சரேலச் 
சொரிந்தும் முரிந்துக்கபூக் 
கெந்தநாறக் கிளருஞ் 
சடையெந்தை கேதாரமே.
2.114. 3
முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம், மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும். 
2706 உள்ளமிக்கார் குதிரைம் 
முகத்தார் ஒருகாலர்கள் 
எள்கலில்லா இமையோர்கள் 
சேரும் மிடமென்பரால் 
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ 
கேட்டுப் பிரியாதுபோய்க் 
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து 
வாய்ப்பெய்யுங் கேதாரமே.
2.114. 4
தியான பலம் உடையோரும், குதிரை முகமுடைய கின்னரரும், ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும் சிவபிரானை வழிபடக் கூடுமிடம், தம்குஞ்சுகள் பசியோடு தம்மை அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும். 
2707 ஊழியூழி யுணர்வார்கள் 
வேதத்தினொண் பொருள்களால் 
வாழியெந்தை யெனவந்தி 
றைஞ்சும் இடமென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள் 
போலவ்விரை தேரிய 
கேழல்பூழ்தி கிளைக்க 
மணிசிந்துங் கேதாரமே.
2.114. 5
பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை உணரும் அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம், உணவு பெற விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள் கிடைக்கும் திருக்கேதாரமாகும். 
2708 நீறுபூசி நிலத்துண்டு 
நீர்மூழ்கி நீள்வரைதன்மேல் 
தேறுசிந்தை யுடையார்கள் 
சேரும் இடமென்பரால் 
ஏறிமாவின் கனியும்பலா 
வின்இருஞ் சுளைகளும் 
கீறிநாளும் முசுக்கிளையோ 
டுண்டுகளுங் கேதாரமே.
2.114. 6
நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து, நிலத்திடை உண்டு, நீண்ட மலையின்மேல் தௌந்த சிந்தை உடையவர்களான தாபதர்கள் வாழும் இடம், குரங்குகள் மா,பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும். 
2709 மடந்தைபாகத் தடக்கிம் 
மறையோதி வானோர்தொழத் 
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க 
நின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை 
பூத்துதிரக்கல் லறைகண்மேல் 
கிடந்தவேங்கை சினமாமுகஞ் 
செய்யுங் கேதாரமே.
2.114. 7
சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும், மங்கை பங்கராகியும், வேதாகமங்களை அருளியும், அடியவர் வினைகளைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம், காற்றடிக்கப் பூத்த வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும். 
2710 அரவமுந்நீர் அணியிலங்கைக் 
கோனையரு வரைதனால் 
வெருவவூன்றி விரலா 
டலர்த்தார்க் கிடமென்பரால் 
குரவங்கோங்கங் குளிர்பிண்டி 
ஞாழல்சுர புன்னைமேல் 
கிரமமாக வரிவண்டு 
பண்செய்யுங் கேதாரமே.
2.114. 8
கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம், குரவம், கோங்கு, அசோகு, ஞாழல், சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும். 
2711 ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த 
கில்லார் அலமந்தவர் 
தாழ்ந்துதந்தம் முடிசாய 
நின்றார்க் கிடமென்பரால
வீழ்ந்து செற்றுந் நிழற்கிரங்கும் 
வேழத்தின்வெண் மருப்பினைக் 
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண 
முத்துதிருங் கேதாரமே.
2.114. 9
பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத திருமாலும், அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும் தாழ்ந்துதம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய இடம், சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும் கேதாரமாகும். 
2712 கடுக்கள்தின்று கழிமீன் 
கவர்வார்கண் மாசுடம்பினர் 
இடுக்கணுய்ப்பா ரவரெய்த 
வொண்ணா விடமென்பரால் 
அடுக்கநின்றவ் வறவுரைகள் 
கேட்டாங் கவர்வினைகளைக் 
கெடுக்கநின்ற பெருமான் 
உறைகின்ற கேதாரமே.
2.114. 10
துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும் அறியாமல் கவர்ந்து உண்பவரும், மாசு பொருந்திய உடலினரும் மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத இடம், அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடியவர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும். 
2713 > வாய்ந்தசெந்நெல் விளைகழனி 
மல்கும்வயற் காழியான் 
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் 
உறைகின்ற கேதாரத்தை 
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் 
பத்தும்மிசை வல்லவர் 
வேந்தராகி யுலகாண்டு 
வீடுகதி பெறுவரே.
2.114. 11
வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், நீர் அருவிகளை உடையதும், இமையோர்கள் உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ் பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர். வேந்தராய் உலகை ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள். 
திருச்சிற்றம்பலம்

2.114.திருக்கேதாரம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் வடதேசத்திலுள்ளது. 
சுவாமிபெயர் - கேதாரேசுவரர். தேவியார் - கௌரியம்மை. 

2703 தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால் வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக் கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.2.114. 1
அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு, நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம், வண்டுகள் பாடவும், மயில்கள் ஆர்ப்பரிக்கவும், மான் கன்றுகள் துள்ளவும், சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும். 

2704 பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம் தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம் கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.2.114. 2
விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும் விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம், மலரின் மது உண்ட வண்டுகள் கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும். 

2705 முந்திவந்து புரோதாய மூழ்கி முனிகள்பலர் எந்தைபெம்மா னெனநின்றி றைஞ்சும் மிடமென்பரால் மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக் கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.2.114. 3
முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம், மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும். 

2706 உள்ளமிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள் எள்கலில்லா இமையோர்கள் சேரும் மிடமென்பரால் பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ கேட்டுப் பிரியாதுபோய்க் கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.2.114. 4
தியான பலம் உடையோரும், குதிரை முகமுடைய கின்னரரும், ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும் சிவபிரானை வழிபடக் கூடுமிடம், தம்குஞ்சுகள் பசியோடு தம்மை அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும். 

2707 ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால் வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் இடமென்பரால்மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.2.114. 5
பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை உணரும் அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம், உணவு பெற விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள் கிடைக்கும் திருக்கேதாரமாகும். 

2708 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன்மேல் தேறுசிந்தை யுடையார்கள் சேரும் இடமென்பரால் ஏறிமாவின் கனியும்பலா வின்இருஞ் சுளைகளும் கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.2.114. 6
நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து, நிலத்திடை உண்டு, நீண்ட மலையின்மேல் தௌந்த சிந்தை உடையவர்களான தாபதர்கள் வாழும் இடம், குரங்குகள் மா,பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும். 

2709 மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத் தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க் கிடமென்பரால்உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக்கல் லறைகண்மேல் கிடந்தவேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.2.114. 7
சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும், மங்கை பங்கராகியும், வேதாகமங்களை அருளியும், அடியவர் வினைகளைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம், காற்றடிக்கப் பூத்த வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும். 

2710 அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால் வெருவவூன்றி விரலா டலர்த்தார்க் கிடமென்பரால் குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல் கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.2.114. 8
கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம், குரவம், கோங்கு, அசோகு, ஞாழல், சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும். 

2711 ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர் தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பராலவீழ்ந்து செற்றுந் நிழற்கிரங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக் கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.2.114. 9
பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத திருமாலும், அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும் தாழ்ந்துதம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய இடம், சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும் கேதாரமாகும். 

2712 கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கண் மாசுடம்பினர் இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணா விடமென்பரால் அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங் கவர்வினைகளைக் கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.2.114. 10
துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும் அறியாமல் கவர்ந்து உண்பவரும், மாசு பொருந்திய உடலினரும் மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத இடம், அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடியவர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும். 

2713 > வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான் ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர் வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே.2.114. 11
வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், நீர் அருவிகளை உடையதும், இமையோர்கள் உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ் பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர். வேந்தராய் உலகை ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.