LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-115

2.115.திருப்புகலூர் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர். 
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 
2714 வெங்கள்விம்மு குழலிளைய 
ராடவ்வெறி விரவுநீர்ப் 
பொங்குசெங்கட் கருங்கயல்கள் 
பாயும்புக லூர்தனுள் 
திங்கள்சூடித் திரிபுரம்ஓர் 
அம்பால்எரி யூட்டிய 
எங்கள்பெம்மான் அடிபரவ 
நாளும்இடர் கழியுமே.
2.115. 1
விரும்பத்தக்க தேன் விம்மும் மலர்கள் கூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட, மணம் விரவும் நீர்நிலையில் வாழும் செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப் பாயும் புகலூரில் விளங்கும் திங்கள் சூடித் திரிபுரங்கள் ஓரம்பால் எரியூட்டிய எங்கள் பெருமான் திருவடிகளைப்பரவ இடர் கெடும். 
2715 வாழ்ந்தநாளும் இனிவாழு 
நாளும்இவை யறிதிரேல் 
வீழ்ந்தநாளெம் பெருமானை 
யேத்தாவிதி யில்லிகாள் 
போழ்ந்ததிங்கட் புரிசடையி 
னான்றன் புகலூரையே 
சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள் 
உங்கள்துயர் தீருமே.
2.115. 2
இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும் நாளையும் அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள் என்றறிந்தும், எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே! பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம் உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும். 
2716 மடையின்நெய்தல் கருங்குவளை 
செய்யமலர்த் தாமரை 
புடைகொள்செந்நெல் விளைகழனி 
மல்கும்புக லூர்தனுள் 
தொடைகொள்கொன்றை புனைந்தானொர் 
பாகம்மதி சூடியை 
அடையவல்லவர் அமருலகம் 
ஆளப்பெறு வார்களே.
2.115. 3
மடைகளில் நெய்தல், குவளை, செந்தாமரைமலர் ஆகியன விளங்க, அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமையோடு விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர். 
2717 பூவுநநீரும் பலியுஞ் 
சுமந்து புகலூரையே 
நாவினாலே நவின்றேத்த 
லோவார்செவித் துளைகளால் 
யாவுங்கேளார் அவன்பெருமை 
யல்லால்அடி யார்கடாம் 
ஓவும்நாளும் உணர்வொழிந்த 
நாளென் றுள்ளங்கொள்ளவே.
2.115. 4
பூவும், நீரும், நிவேதனப் பொருள்களும் எடுத்துவந்து புகலூரை அடைந்து, அங்குள்ள பெருமானை நாவினால் நவின்று, ஏத்த வல்லவராய், செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும் கேளாதவராய்த் தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத நாள்களைப் பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள் என்றும் கருதுவர். 
2718 அன்னங்கன்னிப் பெடைபுல்கி 
யொல்கியணி நடையவாய்ப் 
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன 
மாலும்புக லூர்தனுள் 
முன்னம்மூன்று மதிலெரித்த 
மூர்த்திதிறங் கருதுங்கால் 
இன்னரென்னப் பெரிதரியர் 
ஏத்தச் சிறிதௌயரே.
2.115. 5
அன்னங்கள் கன்னிப் பெடைகளைத் தழுவி ஒதுங்கி அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின் நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில், முன் நாளில் முப்புரங்களை எரித்த மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர் என்னப் பெரிதும் அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர். 
2719 குலவராகக் குலமிலரும் 
மாகக்குணம் புகழுங்கால் 
உலகினல்ல கதிபெறுவ 
ரேனும்மலர் ஊறுதேன் 
புலவமெல்லாம் வெறிகமழும் 
அந்தண்புக லூர்தனுள் 
நிலவமல்கு சடையடிகள் 
பாதம் நினைவார்களே.
2.115. 6
உயர் குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி பெறுவர். ஆதலின், அடியவர்கள் மலர்களில் விளைந்த தேனால், புலால் நாறும் இடங்களிலும் மணம் வீசுகின்ற, அழகிய புகலூரில் பிறையணிந்த சடையுடைய அடிகளின் திருவடிகளையே நினைவார்கள். 
2720 ஆணும்பெண்ணும் மெனநிற்ப 
ரேனும்அர வாரமாப் 
பூணுமேனும் புகலூர்தனக் 
கோர்பொரு ளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை 
யேற்றுண்டுடை கோவணம் 
பேணுமேனும் பிரானென்ப 
ரால்எம்பெரு மானையே.
2.115. 7
புகலூரைத் தமக்குரிய இடமாகக் கொண்ட இறைவர் ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும், பாம்புகளை உடல் முழுதும் அணிகலன்களாகப் பூண்பவரேனும், ஊரார் இடும்பிச்சையை ஏற்று உண்பவரேனும், கோவணம் ஒன்றையே உடையாகக் கொண்டவரேனும், அடியவர் அவரையே பிரான் என்பர். 
2721 உய்யவேண்டில் எழுபோத 
நெஞ்சேயுயர் இலங்கைக்கோன் 
கைகளொல்கக் கருவரை 
யெடுத்தானை யோர்விரலினால் 
செய்கைதோன்றச் சிதைத்தருள 
வல்லசிவன் மேயபூம் 
பொய்கைசூழ்ந்த புகலூர் 
புகழப் பொருளாகுமே.
2.115. 8
நெஞ்சே! உய்தி பெற வேண்டில் எழுக, போதுக; உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை, கைகளால் கயிலை மலையைப் பெயர்த்தவனை ஓர் விரலால் தன் வன்மை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய, பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப் புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும். 
2722 நேமியானும் முகநான் 
குடையந்நெறி யண்ணலும் 
ஆமிதென்று தகைந்தேத்தப் 
போயாரழ லாயினான் 
சாமிதாதை சரணாகு 
மென்றுதலை சாய்மினோ 
பூமியெல்லாம் புகழ்செல்வம் 
மல்கும் புகலூரையே.
2.115. 9
சக்கராயுதம் உடைய திருமாலும், நான்முகனும் இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு தேட அழலுரு ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன் ஆவன், என்று தலைதாழ்த்தி வணங்குமின் உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும். 
2723 வேர்த்தமெய்யர் உருவத் 
துடைவிட் டுழல்வார்களும் 
போர்த்தகூறைப் போதிநீழ 
லாரும் புகலூர்தனுள் 
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த 
தேவன்திறங் கருதுங்கால் 
ஓர்த்துமெய்யென் றுணராது 
பாதந்தொழு துய்ம்மினே.
2.115. 10
வியர்வை தோன்றிய உடலினோரும், உடலில் உடையின்றித்திரிபவரும், ஆடையைப் போர்த்திக் கொண்டு அரசமரநிழலில் உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து, புகலூரில் கங்கைசூடிய பெருமான் திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன் திருவடிகளை வணங்கி உய்மின். 
2724 புந்தியார்ந்த பெரியோர்கள் 
ஏத்தும் புகலூர்தனுள் 
வெந்தசாம்பற் பொடிப்பூச 
வல்லவிடை யூர்தியை 
அந்தமில்லா அனலாட 
லானையணி ஞானசம் 
பந்தன்சொன்ன தமிழ்பாடி 
யாடக்கெடும் பாவமே.
2.115. 11
அறிவார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூரில் நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் விடையூர்த்தியனும்,, அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய பெருமானை ஞான சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி, ஆடிப் போற்ற, பாவம் கெடும். 
திருச்சிற்றம்பலம்

2.115.திருப்புகலூர் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர். தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 

2714 வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப் பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள் திங்கள்சூடித் திரிபுரம்ஓர் அம்பால்எரி யூட்டிய எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்இடர் கழியுமே.2.115. 1
விரும்பத்தக்க தேன் விம்மும் மலர்கள் கூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட, மணம் விரவும் நீர்நிலையில் வாழும் செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப் பாயும் புகலூரில் விளங்கும் திங்கள் சூடித் திரிபுரங்கள் ஓரம்பால் எரியூட்டிய எங்கள் பெருமான் திருவடிகளைப்பரவ இடர் கெடும். 

2715 வாழ்ந்தநாளும் இனிவாழு நாளும்இவை யறிதிரேல் வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள் போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன் புகலூரையே சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள் உங்கள்துயர் தீருமே.2.115. 2
இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும் நாளையும் அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள் என்றறிந்தும், எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே! பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம் உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும். 

2716 மடையின்நெய்தல் கருங்குவளை செய்யமலர்த் தாமரை புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள் தொடைகொள்கொன்றை புனைந்தானொர் பாகம்மதி சூடியை அடையவல்லவர் அமருலகம் ஆளப்பெறு வார்களே.2.115. 3
மடைகளில் நெய்தல், குவளை, செந்தாமரைமலர் ஆகியன விளங்க, அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமையோடு விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர். 

2717 பூவுநநீரும் பலியுஞ் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால் யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கடாம் ஓவும்நாளும் உணர்வொழிந்த நாளென் றுள்ளங்கொள்ளவே.2.115. 4
பூவும், நீரும், நிவேதனப் பொருள்களும் எடுத்துவந்து புகலூரை அடைந்து, அங்குள்ள பெருமானை நாவினால் நவின்று, ஏத்த வல்லவராய், செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும் கேளாதவராய்த் தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத நாள்களைப் பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள் என்றும் கருதுவர். 

2718 அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப் பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள் முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால் இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச் சிறிதௌயரே.2.115. 5
அன்னங்கள் கன்னிப் பெடைகளைத் தழுவி ஒதுங்கி அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின் நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில், முன் நாளில் முப்புரங்களை எரித்த மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர் என்னப் பெரிதும் அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர். 

2719 குலவராகக் குலமிலரும் மாகக்குணம் புகழுங்கால் உலகினல்ல கதிபெறுவ ரேனும்மலர் ஊறுதேன் புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக லூர்தனுள் நிலவமல்கு சடையடிகள் பாதம் நினைவார்களே.2.115. 6
உயர் குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி பெறுவர். ஆதலின், அடியவர்கள் மலர்களில் விளைந்த தேனால், புலால் நாறும் இடங்களிலும் மணம் வீசுகின்ற, அழகிய புகலூரில் பிறையணிந்த சடையுடைய அடிகளின் திருவடிகளையே நினைவார்கள். 

2720 ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்அர வாரமாப் பூணுமேனும் புகலூர்தனக் கோர்பொரு ளாயினான்ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம் பேணுமேனும் பிரானென்ப ரால்எம்பெரு மானையே.2.115. 7
புகலூரைத் தமக்குரிய இடமாகக் கொண்ட இறைவர் ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும், பாம்புகளை உடல் முழுதும் அணிகலன்களாகப் பூண்பவரேனும், ஊரார் இடும்பிச்சையை ஏற்று உண்பவரேனும், கோவணம் ஒன்றையே உடையாகக் கொண்டவரேனும், அடியவர் அவரையே பிரான் என்பர். 

2721 உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுயர் இலங்கைக்கோன் கைகளொல்கக் கருவரை யெடுத்தானை யோர்விரலினால் செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம் பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.2.115. 8
நெஞ்சே! உய்தி பெற வேண்டில் எழுக, போதுக; உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை, கைகளால் கயிலை மலையைப் பெயர்த்தவனை ஓர் விரலால் தன் வன்மை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய, பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப் புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும். 

2722 நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும் ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான் சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும் புகலூரையே.2.115. 9
சக்கராயுதம் உடைய திருமாலும், நான்முகனும் இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு தேட அழலுரு ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன் ஆவன், என்று தலைதாழ்த்தி வணங்குமின் உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும். 

2723 வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும் போர்த்தகூறைப் போதிநீழ லாரும் புகலூர்தனுள் தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால் ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.2.115. 10
வியர்வை தோன்றிய உடலினோரும், உடலில் உடையின்றித்திரிபவரும், ஆடையைப் போர்த்திக் கொண்டு அரசமரநிழலில் உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து, புகலூரில் கங்கைசூடிய பெருமான் திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன் திருவடிகளை வணங்கி உய்மின். 

2724 புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள் வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.2.115. 11
அறிவார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூரில் நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் விடையூர்த்தியனும்,, அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய பெருமானை ஞான சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி, ஆடிப் போற்ற, பாவம் கெடும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.