LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-6

2.006.திருவையாறு 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். 
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 
1524 கோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை 
குலாயசீர் 
ஓடுகங் கையொளி வெண்பிறை சூடு 
மொருவனார் 
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் 
ணாகவே 
ஆடு மாறுவல் லானுமை யாறுடை 
யையனே.
2.006.1
வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான். 
1525 தன்மை யாருமறி வாரிலை தாம்பிற 
ரௌகவே 
பின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் 
திரிதர்வர் 
துன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி 
பூசுவர் 
அன்னமா லுந்துறை யானுமை யாறுடை 
யையனே.
2.006. 2
அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத் திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார். 
1526 கூறு பெண்ணுடை கோவண முண்பது 
வெண்டலை 
மாறி லாருங்கொள் வாரிலை மார்பில் 
அணிகலம் 
ஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு 
தேத்தவே 
ஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை 
யையனே.
2.006. 3
ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமை யோடு, பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர். 
1527 பண்ணி னல்லமொழி யார்பவ ளத்துவர் 
வாயினார் 
எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற 
கண்ணினார் 
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி 
பாடவே 
அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை 
யைய னே.
2.006. 4
 பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும் எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன். 
1528 வேன லானை வெருவவுரி போர்த்துமை 
யஞ்சவே 
வானை யூடறுக் கும்மதி சூடிய 
மைந்தனார் 
தேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும் 
பின்றெளி 
ஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை 
யையனே.
2.006.5
கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார். 
1529 எங்கு மாகிநின் றானு மியல்பறி 
யப்படா 
மங்கை பாகங்கொண் டானு மதிசூடு 
மைந்தனும் 
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் 
குணர்வுமாய் 
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை 
யையனே.
2.006.6
எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத இயல்பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதிசூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண் புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத் தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான். 
1530 ஓதி யாருமறி வாரிலை யோதி 
யுலகெலாம் 
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் 
சோதியான் 
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி 
காற்றுமாய் 
ஆதி யாகிநின் றானுமை யாறுடை 
யைய னே.
2.006.7
யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள்தாமே அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச் சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேத வடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகிய உலகின் முதல்வனாய் விளங்குபவனும் ஆகி பெருமான் ஐயாறுடைய ஐயனாவான். 
1531 குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி 
பாடுசெய் 
விரவு நீறணி வார்சில தொண்டர் 
வியப்பவே 
பரவி நாடொறும் பாடநம் 
பாவம் பறைதலால் 
அரவ மார்த்துகந் தானுமை 
யாறுடை யையனே.
2.006. 8
ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குரா மலர்களைக் காண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப் பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய் எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம். 
1532 உரைசெய் தொல்வழி செய்தறி யாவிலங் 
கைக்குமன் 
வரைசெய் தோளடர்த் துமதி சூடிய 
மைந்தனார் 
கரைசெய் காவிரி யின்வட பாலது 
காதலான் 
அரைசெய் மேகலை யானுமை யாறுடை 
யையனே.
2.006. 9
வேதங்கள் உரைத்த பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதிசூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார். 
1533 மாலுஞ் சோதி மலரானு 
மறிகிலா வாய்மையான் 
காலங் காம்பு வயிரங் 
கடிகையன் பொற்கழல் 
கோல மாய்க்கொழுந் தீன்று 
பவளந் திரண்டதோர் 
ஆல நீழலு ளானுமை 
யாறுடை யையனே.
2.006.10
ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால் போலத் திரண்ட அழகிய காம்பினையும் கழல் போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான். 
1534 கையி லுண்டுழல் வாருங் 
கமழ்துவ ராடையான் 
மெய்யைப் போர்த்துழல் வாரு 
முரைப்பன மெய்யல
மைகொள் கண்டத்தெண்டோண்முக்க ணான்கழல் 
வாழ்த்தவே 
ஐயந் தேர்ந்தளிப் பானுமை யாறுடை 
யையனே.
2.006. 11
கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத்திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து, நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம்பொருள் எனத் தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக் காத்தருளுவான். 
1535 பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயவை 
யாற்றினைக் 
கலிக டிந்தகை யான்கடற் காழியர் 
காவலன் 
ஒலிகொள் சம்பந்த னொண்டமிழ் பத்தும்வல் 
லார்கள்போய் 
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு 
வார்களே.
2.006. 12
பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள். 
திருச்சிற்றம்பலம்

2.006.திருவையாறு 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 

1524 கோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை குலாயசீர் ஓடுகங் கையொளி வெண்பிறை சூடு மொருவனார் பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே.2.006.1
வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும் பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான். 

1525 தன்மை யாருமறி வாரிலை தாம்பிற ரௌகவே பின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர் துன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர் அன்னமா லுந்துறை யானுமை யாறுடை யையனே.2.006. 2
அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத் திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார். 

1526 கூறு பெண்ணுடை கோவண முண்பது வெண்டலை மாறி லாருங்கொள் வாரிலை மார்பில் அணிகலம் ஏறு மேறித் திரி வ ரிமை யோர்தொழு தேத்தவே ஆறு நான்குஞ்சொன் னானுமை யாறுடை யையனே.2.006. 3
ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர்: கோவண ஆடை உடுத்தவர்: வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறகொள்வார் இல்லாத ஆமை யோடு, பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர். 

1527 பண்ணி னல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார் எண்ணி னல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார் வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டுகந் தானுமை யாறுடை யைய னே.2.006. 4
 பண்ணிசையினும் இனிய மொழி பேசுபவரும், பவளம் போன்று சிவந்த வாயினை உடையவரும் எண்ணற்ற நல்ல குணங்களை உடையவரும், வேல் இணை போன்ற விழியினரும் ஆகிய இளமகளிர், தம் தன்மைகளையும், வலிய வீரச் செயல்களையும் தம் வாய் மொழியால் பாடி வணங்க அவற்றைக் கேட்டு உகந்தருளுபவர், ஐயாறுடைய ஐயன். 

1528 வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார் தேனெய் பாறயிர் தெங்கிள நீர்கரும் பின்றெளி ஆனஞ் சாடுமுடி யானுமை யாறுடை யையனே.2.006.5
கொடிய யானையைப் பலரும் வெருவுமாறும் உமையம்மை அஞ்சுமாறும் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தவரும், வானத்தைக் கிழித்துச் செல்லும் மதியை முடியில் சூடிய வலியரும், தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் சாறு, ஆனைந்து ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர் ஐயாறுடைய ஐயன் ஆவார். 

1529 எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும் பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய் அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே.2.006.6
எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத இயல்பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதிசூடிய மைந்தனும் குற்றமற்ற பதினெண் புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத் தருளியவனும் ஆய பெருமான், ஐயாறுடைய ஐயனாவான். 

1530 ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம் சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான் வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய் ஆதி யாகிநின் றானுமை யாறுடை யைய னே.2.006.7
யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள்தாமே அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும் சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச் சோதியுட் சோதியாக விளங்குபவனும், வேத வடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகிய உலகின் முதல்வனாய் விளங்குபவனும் ஆகி பெருமான் ஐயாறுடைய ஐயனாவான். 

1531 குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய் விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால் அரவ மார்த்துகந் தானுமை யாறுடை யையனே.2.006. 8
ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குரா மலர்களைக் காண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப் பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய் எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால், நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம். 

1532 உரைசெய் தொல்வழி செய்தறி யாவிலங் கைக்குமன் வரைசெய் தோளடர்த் துமதி சூடிய மைந்தனார் கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான் அரைசெய் மேகலை யானுமை யாறுடை யையனே.2.006. 9
வேதங்கள் உரைத்த பழமையான நெறியை மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதிசூடிய மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார், ஐயாறுடைய ஐயன் ஆவார். 

1533 மாலுஞ் சோதி மலரானு மறிகிலா வாய்மையான் காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல் கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர் ஆல நீழலு ளானுமை யாறுடை யையனே.2.006.10
ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாத சத்திய வடிவானவன். அவனது கால் போலத் திரண்ட அழகிய காம்பினையும் கழல் போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான். 

1534 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையான் மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யலமைகொள் கண்டத்தெண்டோண்முக்க ணான்கழல் வாழ்த்தவே ஐயந் தேர்ந்தளிப் பானுமை யாறுடை யையனே.2.006. 11
கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும், நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத்திரியும் புத்தரும் கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து, நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே பரம்பொருள் எனத் தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன் நம்மைக் காத்தருளுவான். 

1535 பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயவை யாற்றினைக் கலிக டிந்தகை யான்கடற் காழியர் காவலன் ஒலிகொள் சம்பந்த னொண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய் மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.2.006. 12
பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும் பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும் வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை அடுத்துள்ள காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.