LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-7

2.007.திருவாஞ்சியம் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர். 
தேவியார் - வாழவந்தநாயகியம்மை. 
1536 வன்னி கொன்றைமத மத்த 
மெருக்கொடு கூவிளம் 
பொன்னி யன்றசடை யிற்பொலி 
வித்தபு ராணனார் 
தென்ன வென்றுவரி வண்டிசை 
செய்திரு வாஞ்சியம் 
என்னை யாளுடை யானிட 
மாக வுகந்ததே.
2.007. 1
வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் ‘தென்ன’ என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஙசியமாகும். 
1537 கால காலர்கரி கானிடை 
மாநட மாடுவர் 
மேலர் வேலைவிட முண்டிருள் 
கின்ற மிடற்றினர் 
மாலை கோலமதி மாடமன் 
னுந்திரு வாஞ்சியம் 
ஞாலம் வந்து பணியப்பொலி 
கோயில் நயந்ததே.
2.007. 2
காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத்தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு விரும்பி விற்றிருந்தருளுகின்றார். 
1538 மேவி லொன்றர் விரிவுற்ற 
விரண்டினர் மூன்றுமாய் 
நாவி னாலருட லஞ்சின 
ராறரே ழோசையர்
தேவி லெட்டர்திரு வாஞ்சிய 
மேவிய செல்வனார் 
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் 
தம்மடி யார்கட்கே.
2.007.3
விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமை யின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து, சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர். ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர். 
1539 சூல மேந்திவளர் கையினர் 
மெய்சுவண் டாகவே 
சால நல்லபொடிப் பூசுவர் 
பேசுவர் மாமறை 
சீல மேவுபுக ழாற்பெரு 
குந்திரு வாஞ்சியம் 
ஆல முண்டவடி கள்ளிடம் 
ஆக வமர்ந்ததே.
2.007.4
சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம் திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேத வசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார். 
1540 கையி லங்குமறி யேந்துவர் 
காந்தளம் மெல்விரல் 
தையல் பாகமுடை யாரடை 
யார்புரஞ் செற்றவர் 
செய்ய மேனிக்கரி யமிடற் 
றார்திரு வாஞ்சியத் 
தையர் பாதமடை வார்க்கடை 
யாவரு நோய்களே.
2.007.5
கையின்கண், விளங்கும் மான் கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி தேவியைத் தமது பாகமாகக கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின் முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரிய மிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா. 
1541 அரவம் பூண்பரணி யுஞ்சிலம் 
பார்க்க வகந்தொறும் 
இரவி னல்லபலி பேணுவர் 
நாணிலர் நாமமே 
பரவு வார்வினை தீர்க்கநின் 
றார்திரு வாஞ்சியம் 
மருவி யேத்தமட மாதொடு 
நின்றவெம் மைந்தரே.
2.007.6
அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும் சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப் பெயர்களைக் கூறிப் பரவுவார் வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார். 
1542 விண்ணி லானபிறை சூடுவர் 
தாழ்ந்து விளங்கவே 
கண்ணி னாலநங் கன்னுட 
லம்பொடி யாக்கினார் 
பண்ணி லானவிசை பாடன்மல் 
குந்திரு வாஞ்சியத் 
தண்ணலார் தம்மடி போற்றவல் 
லார்க்கில்லை யல்லலே.
2.007.7
வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திருமுடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை. 
1543 மாட நீடுகொடி மன்னிய 
தென்னிலங் கைக்குமன் 
வாடியூ டவரை யாலடர்த் 
தன்றருள் செய்தவர் 
வேட வேடர்திரு வாஞ்சிய 
மேவிய வேந்தரைப் 
பாட நீடுமனத் தார்வினை 
பற்றறுப் பார்களே.
2.007. 8
நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாட வீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடி வருந்தக் கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர். 
1544 செடிகொ ணோயினடை யார்திறம் 
பார்செறு தீவினை 
கடிய கூற்றமுங் கண்டக 
லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடய னேத்தநின் 
றார்திரு வாஞ்சியத் 
தடிகள் பாதமடைந் தாரடி 
யாரடி யார்கட்கே.
2.007.9
நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான். சிவகதி அவர்களைத் தேடி வரும். 
1545 பிண்ட முண்டுதிரி வார்பிரி 
யுந்துவ ராடையார் 
மிண்டர் மிண்டுமொழி மெய்யல 
பொய்யிலை யெம்மிறை 
வண்டு கெண்டிமரு வும்பொழில் 
சூழ்திரு வாஞ்சியத் 
தண்ட வாணனடி கைதொழு 
வார்க்கில்லை யல்லலே.
2.007.10
பிறர் திரட்டித்தந்த சோற்றை உண்டு திரியும் சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை. 
1546 தென்றல் துன்றுபொழில் சென்றணை 
யுந்திரு வாஞ்சியத் 
தென்று நின்றவிறை யானை 
யுணர்ந்தடி யேத்தலால் 
நன்று காழிமறை ஞானசம் 
பந்தன செந்தமிழ் 
ஒன்று முள்ளமுடை யாரடை 
வாருயர் வானமே.
2.007.11
தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன் சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடு பேற்றை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

2.007.திருவாஞ்சியம் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வாஞ்சியநாதர். தேவியார் - வாழவந்தநாயகியம்மை. 

1536 வன்னி கொன்றைமத மத்த மெருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடை யிற்பொலி வித்தபு ராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாக வுகந்ததே.2.007. 1
வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் ‘தென்ன’ என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஙசியமாகும். 

1537 கால காலர்கரி கானிடை மாநட மாடுவர் மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர் மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம் ஞாலம் வந்து பணியப்பொலி கோயில் நயந்ததே.2.007. 2
காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத்தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு விரும்பி விற்றிருந்தருளுகின்றார். 

1538 மேவி லொன்றர் விரிவுற்ற விரண்டினர் மூன்றுமாய் நாவி னாலருட லஞ்சின ராறரே ழோசையர்தேவி லெட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார் பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.2.007.3
விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமை யின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து, சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர். ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர். 

1539 சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம் ஆல முண்டவடி கள்ளிடம் ஆக வமர்ந்ததே.2.007.4
சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம் திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேத வசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார். 

1540 கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல் தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர் செய்ய மேனிக்கரி யமிடற் றார்திரு வாஞ்சியத் தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.2.007.5
கையின்கண், விளங்கும் மான் கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி தேவியைத் தமது பாகமாகக கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின் முப்புரங்களை அழித்தவர்; சிவந்த திருமேனியையும் கரிய மிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த் திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப் போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா. 

1541 அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க வகந்தொறும் இரவி னல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம் மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.2.007.6
அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும் சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப் பெயர்களைக் கூறிப் பரவுவார் வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார். 

1542 விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே கண்ணி னாலநங் கன்னுட லம்பொடி யாக்கினார் பண்ணி லானவிசை பாடன்மல் குந்திரு வாஞ்சியத் தண்ணலார் தம்மடி போற்றவல் லார்க்கில்லை யல்லலே.2.007.7
வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திருமுடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை. 

1543 மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன் வாடியூ டவரை யாலடர்த் தன்றருள் செய்தவர் வேட வேடர்திரு வாஞ்சிய மேவிய வேந்தரைப் பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.2.007. 8
நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாட வீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடி வருந்தக் கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர். 

1544 செடிகொ ணோயினடை யார்திறம் பார்செறு தீவினை கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்நெடிய மாலொடய னேத்தநின் றார்திரு வாஞ்சியத் தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.2.007.9
நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான். சிவகதி அவர்களைத் தேடி வரும். 

1545 பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார் மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத் தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை யல்லலே.2.007.10
பிறர் திரட்டித்தந்த சோற்றை உண்டு திரியும் சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை. 

1546 தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத் தென்று நின்றவிறை யானை யுணர்ந்தடி யேத்தலால் நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ் ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.2.007.11
தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன் சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில் ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடு பேற்றை அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.