|
||||||||||||||||||
இறால் வறுவல்(steamed shrimp) |
||||||||||||||||||
தேவையானவை : இறால் - கால் கிலோ வெங்காயம் - 2 இஞ்சி - ஒரு விரலளவு தேங்காய் - கால் மூடி பூண்டு - 10 தக்காளி - 2 பழம் சோம்பு - ஒரு டீஸ்ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்ஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்ஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு கையளவு வத்தல் மிளகாய் - 20 உப்பு - 1 டீஸ்ஸ்பூன் மஞ்சள் தூள் -அரை டீஸ்ஸ்பூன் செய்முறை : 1.முதலில் இஞ்சியையும் பூண்டையும் நன்கு அரைத்துக்கொள்ளவும் , பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொளவும்.தோல்,ஓடு நீக்கிய இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். 2.தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு,சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தங்காளியை துண்டங்களாக்கி போட்டு வதக்கவும். 3.இறாலையும் மஞ்சள்தூளையும் சேர்த்து பிசறி வாணலியில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். அதனுடன் சிறிது தண்ணி விட்டு அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் தேங்காய், வத்தல் கூட்டணியையும் நீர் வற்றும் வரை கிளறவும். 4.இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிக்கிற கரண்டியில் சிறிது எண்ணைவிட்டு ஐந்து வத்தல் மிளகாயை வெட்டிபோட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளிக்கவும், தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பறிமாறவும். |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|