LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-90

4.090.திருவேதிகுடி 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர். 
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை. 
863 கையது காலெரி நாகங் கனல்விடு
சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை
விண்ணவர்கோன்
செய்யினி னீல மணங்கம ழுந்திரு
வேதிகுடி
ஐயனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே. 
4.090.1
கைகளில் விடத்தைக் கக்கும் பாம்பினையும் தீயைப் போல வெம்மையைச் செய்யும் சூலப்படையையும் ஏந்தியவனும், கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்டவனும், விரிந்த சடையினை உடைய தலைவனுமாய், வயல்களிலே நீலப்பூக்கள் மணம் கமழும் திருவேதிகுடியில் உகந்தருளியிருக்கும் ஐயனுமான, நுகர்ந்தும் நிறைவு தாராத ஆரா அமுதை அடைந்து அதில் முழுகுவவோம் நாம்.
864 கைத்தலை மான்மறி யேந்திய கையன்
கனன்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து
பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு
வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.2
கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப்படையையும் ஏந்தி, மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும், வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம்.
865 முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை
வினைகழித்தான்
அன்பி னிலையி லவுணர் புரம்பொடி
யானசெய்யும்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு
வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந்
தாடுதுமே. 
4.090.3
முன்னும் பின்னும் தானே உலக காரணனாய், மனனசீலனாய், நம் பழைய வினைகளைப் போக்குபவனாய், அன்பு நிலையில் இல்லாத அசுரர்களின் மும்மதில்களையும் அழித்த செம்பொன் போல்பவனாய், தாமரை மலர்மேல் உள்ள பிரமன் வழிபடுவதற்காக வந்து அடையும் திருவேதிகுடியில் விரும்பி உறைபவனாய், நம்மை அடிமைகொள்ளும் பெருமானை நாம் அடைந்து அவன் அருளாரமுதக் கடலில் ஆடுவோம்.
866 பத்தர்க ணாளு மறவார் பிறவியை
யொன்றறுப்பான்
முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட
முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு
வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.4
பக்தர்களாய்த் தன்னை நாளும் மறவாத அடியார்களுக்குப் பொருந்திய பிறவிப் பிணியை அறுப்பவனாய், பாசநீக்கம் உற்றவர்கள் இம்மண்ணுலகில் சிவப்பணி செய்து உயரச் செய்தவனாய், கொத்தாகப் பூத்த கொன்றையின் மணம் பரவும் திருவேதி குடித் தலைவனாய் உள்ள ஆரா அமுதக் கடலை நாம் அடைந்து ஆடுவோம்.
867 ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி
வாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ்
சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயிறிரு
வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந்
தாடுதுமே. 
4.090.5
தேனிலே பொருந்தி உண்டு பறக்கும் வண்டுகள் மிகுதியாகக் காணப்படும் திருவேதிகுடியில் பஞ்சகவ்வியத்தில் அபிடேகம் கொள்ளும், மழு ஏந்திய பெருமான், பிறையும் கங்கையும் சடைமுடியில் சூடி, கையில் மானை வைத்துக் கொண்டு கூத்து நிகழ்த்துபவன் விரும்பி காளையை ஏறி ஊரும் அப்பெருமானுடைய பெயர்களையோ, அடையாளங்களையோ, பண்புகளையோ ஒருவரும் முழுமையாக அறிதல் இயலாது. அவனை அடைந்து அருளாரமுதக் கடலில் ஆடுவோம் நாம்.
868 எண்ணு மெழுத்துங் குறியு மறிபவர்
தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய வானவர்
தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு
வேதிகுடி
நண்ண வரிய வமுதினை நாமடைந்
தாடுதுமே.
4.090.6
எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடுத் தேவர்கள் பணிந்து தௌந்து கொள்ளுமாறு, அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திருவேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவபெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம்.
869 ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை
நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக
மகிழ்ந்துடையான்
சேர்ந்து புனற்சடைச் செல்வப்பிரான்றிரு
வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு தையடைந்
தாடுதுமே.
4.090.7
உகந்து காளையை ஏறி ஊருஞ் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம். செவிக்கு இனியவான மடப்பம் பொருந்திய மொழிகளை உடைய பார்வதியை மகிழ்ந்து பாகமாக உடையவனாய், சடையிற் கங்கையைச் சூடிய செல்வப் பிரானாய் வயல்கள் சூழ்ந்து திருவேதிகுடியைச் சார்ந்திருக்கும் பெருமானாகிய குளிர்ந்த அமுதை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம்.
870 எரியு மழுவின னெண்ணியு மற்றொரு
வன்றலையுள்
திரியும் பலியினன் றேயமும் நாடுமெல்
லாமுடையான்
விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு
வேதிகுடி
அரிய வமுதினை யன்பர்க ளோடடைந்
தாடுதுமே.
4.090.8
கொடிய மழுவை ஏந்தியவனாய், பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை பெற விரும்பித் திரிபவனாய், தேயங்களும் நாடுகளும் எல்லாம் உடையவனாய், விரிந்த சோலைகளும் சேறு விளங்கும் வயல்களும் அழகு செய்யும் திருவேதிகுடியில் உறையும் பெருமானாகிய அரிய அமுதை அன்பர்களோடு அடைந்து அதில் திளைத்து ஆடுவோம்.
871 மையணி கண்டன் மறைவிரி நாவன்
மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு
வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு
வேதிகுடி
ஐயனை யாராவமுதினை நாமடைந்
தாடுதுமே. 
4.090.9
நீலகண்டனாய், வேதம் ஓதும் நாவினனாய், பெருமையாகக் கருதி விரும்பிய திருநீற்றை மெய் முழுதும் அணிந்தவனாய், மேம்பட்ட வெள்ளிய மழுப்படையினனாய், சிறந்த தாமரைகள் மணம் வீசும் திருவேதிகுடித் தலைவனாய் உள்ள சிவபெருமானாகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம்.
872 வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு
பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா வருளனைப் பூதப்
படையுடைய
திருத்தனைத் தேவர்பி ரான்றிரு வேதி
குடியுடைய
அருத்தனை யாரா வமுதினை நாமடைந்
தாடுதுமே. 
4.090.10
வாளை ஏந்திய அரக்கனுடைய தோள்களோடு தலைகள் பத்தினையும் நெரித்துத் துன்புறுத்தியவனாய், பிறகு அவற்றைப் பொருத்தியவனாய், தவறாத அருளுடையவனாய், பூதப் படையை உடைய புனிதனாய், தேவர்கள் தலைவனாய், திருவேதி குடியில் உறையும் மெய்ப்பொருளான ஆரா அமுதினை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.