LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-120

2.120.திருமூக்கீச்சரம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
2769 சாந்தம்வெண்ணீறெனப்பூசி 
வெள்ளஞ்சடை வைத்தவர் 
காந்தளாரும் விரலேழை 
யொடாடிய காரணம் 
ஆய்ந்துகொண்டாங் கறியந் 
நிறைந்தாரவ ரார்கொலோ 
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் 
செய்கின்றதோர் மெய்ம்மையே.
2.120. 1
சந்தனம்போலத் திருநீற்றை உடல் முழுதும் பூசி, கங்கையைச் சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான், காந்தள் போன்ற கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற்குரிய காரணத்தை ஆராய்ந்தறிந்தவர்கள் யார்? கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும். 
2770 வெண்டலையோர் கலனாப் 
பலிதேர்ந்து விரிசடைக் 
கொண்டலாரும் புனல்சேர்த் 
துமையாளொடுங் கூட்டமா 
விண்டவர்தம் மதிலெய்தபின் 
வேனில் வேள்வெந்தெழக் 
கண்டவர் மூக்கீச்சரத்தெம் 
அடிகள் செய்கன்மமே.
2.120. 2
வெண்தலையை உண்கலனாகக் கையில் ஏந்திப் பலிதேர்தல், விரிந்தசடையில் கங்கையைத் தாங்குதல், உமையம்மையோடு கூடியிருத்தல், பகைவர்தம் முப்புரங்களை எய்து அழித்தல், மன்மதனை நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும் எம் அடிகள் செய்த செயல்களாகும். 
2771 மருவலார்தம் மதிலெய்த 
துவும்மான் மதலையை 
உருவிலாரவ் வெரியூட்டி 
யதும்உல குண்டதால் 
செருவிலாரும் புலிசெங் 
கயலானை யினான்செய்த 
பொருவின் மூக்கீச்சரத்தெம் 
அடிகள் செயும்பூசலே.
2.120. 3
போர்க்கருவியாகிய வில், புலி, கயல் ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுக்குரியவனாய் விளங்கிய கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஒப்பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம் அடிகள் செய்த போர்களில் மும்மதில்களை எய்தது, மால்மகனாகிய காமனை எரித்தது ஆகிய உலகறிந்தனவாம். 
2772 அன்னமன்னந் நடைச்சாய 
லாளோ டழகெய்தவே 
மின்னையன்ன சடைக்கங்கை 
யாள்மேவிய காரணம் 
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் 
ஓங்கு செங்கோலினான் 
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் 
செய்கின்ற தோர்மாயமே.
2.120. 4
தென்நாட்டின் உறையூர் வஞ்சி ஆகிய சோழ, சேர மண்டலங்களுக்கும் உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும் அடிகள், அன்னம் போன்ற நடையினை உடைய உமையம்மையாரோடு அழகுற விளங்கி, மின்னல் போன்ற சடையில் கங்கையைக் கொண்டுள்ள காரணம் யாதோ? 
2773 விடமுனாரவ் வழல்வாய 
தோர் பாம்பரை வீக்கியே 
நடமுனாரவ் வழலாடுவர் 
பேயொடு நள்ளிருள் 
வடமன்நீடு புகழ்ப்பூழி 
யன்றென்ன வன்கோழிமன் 
அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் 
செய்கின்ற தோரச்சமே.
2.120. 5
வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டியனாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன் கட்டிய மூக்கீச்சரத்துறையும் அடிகள் அச்சம் தரும் முறையில், அழல் போன்ற வாயில் நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டியவர். நள்ளிருளில் பேயோடு, ஆரழலில் நடனம் ஆடுபவர். 
2774 வெந்தநீறு மெய்யிற் 
பூசுவராடுவர் வீங்கிருள் 
வந்தெனாரவ் வளைகொள்வதும் 
இங்கொரு மாயமாம் 
அந்தண்மா மானதன்னேரியன் 
செம்பிய னாக்கிய 
எந்தைமூக்கீச் சரத்தடிகள் 
செய்கின்ற தோரேதமே.
2.120. 6
அகத்துறைப்பாடல்: பகைவரின் மானத்தை அழிக்கும் பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடையவனுமான கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த ஏதமான செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத்திருமேனியராய், அடல் வல்லவராய், மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை மாயமான முறையில் கவர்ந்து சென்ற தாகும். 
2775 அரையிலாருங் கலையில்ல 
வனாணொடு பெண்ணுமாய் 
உரையிலரவ் வழலாடு 
வரொன்றலர் காண்மினோ 
விரவலார்தம் மதின்மூன் 
றுடன்வெவ்வழ லாக்கினான் 
அரையன்மூக்கீச் சரத்தடிகள் 
செய்கின்ற தோரச்சமே.
2.120. 7
இடையில் பொருந்தும் உடை இல்லாதவன். ஆணும், பெண்ணுமாய் விளங்குபவன். அழலில் நின்று ஆடுபவன். ஒன்றாயின்றிப் பலபலவேடம் கொள்பவன். பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து அழித்தவன். கோச்செங்கணான் கட்டிய மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும் அப்பெருமான், செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும். 
2776 ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற் 
றதுங்கூற்றை யுதைத்ததும் 
கூர்க்குநன்மூ விலைவேல்வல 
னேந்திய கொள்கையும் 
ஆர்க்கும்வாயான் அரக்கன் 
னுரத்தை நெரித்தவ்வடல் 
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் 
செய்யாநின்ற மொய்ம்பதே.
2.120. 8
மூக்கீச்சரத்து அடிகள் செய்த வலிய செயல்கள் ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது, கூரிய முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பிடித்துள்ளது. ஆரவாரிக்கும் வாயினனும் வலியமூர்க்கனும், அரக்கனும் ஆகிய இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும். 
2777 நீருளாரும் மலர்மேல் 
உறைவான் நெடுமாலுமாய்ச் 
சீருளாருங் கழல்தேட 
மெய்த்தீத் திரளாயினான் 
சீரினாலங் கொளிர்தென்ன 
வன்செம்பி யன்வில்லவன் 
சேருமூக்கீச் சரத்தடிகள் 
செய்கின்ற தோர்செம்மையே.
2.120. 9
சிறப்புமிக்க தென்னவன், செம்பியன், வில்லவன் ஆகிய மூவேந்தரும் வந்து வழிபடும் மூக்கீச்சரத்தில், உறையும் பெருமான் நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும், நெடியமாலும் புகழிற் பொருந்திய திருவடிகளைத் தேட முற்பட்டபோது தீத்திரளாய் நின்றவன். 
2778 வெண்புலான்மார் பிடுதுகிலினர் 
வெற்றரை யுழல்பவர் 
உண்பினாலே யுரைப்பார் 
மொழி யூனமதாக்கினான் 
ஒண்புலால்வேன் மிகவல்லவ 
னோங்கெழிற் கிள்ளிசேர் 
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் 
செய்கின்றதோர் பச்சையே.
2.120. 10
வெண்மையான புலால் நாற்றம் வீசும் ஆடையை மார்பிற் கொண்டவரும், வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய புத்தர்களும் சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய தாக்கினான். புலால் மணக்கும் வேல் வென்றி உடையவன். சோழமன்னன் எடுப்பித்த மூக்கீச்சரத்து அப் பெருமான் செய்யும் புதுமையான செயல் இதுவாகும். 
2779 மல்லையார்மும் முடிமன்னர் 
மூக்கீச்சரத் தடிகளைச் 
செல்வராக நினையும்படி 
சேர்த்திய செந்தமிழ் 
நல்லராய்வாழ் பவர்காழி 
யுள்ஞான சம்பந்தன 
சொல்லவல்லா ரவர்வானுல 
காளவும் வல்லரே.
2.120. 11
மற்போரில் வல்லவராய முடிமன்னர் மூவரானும் தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள் மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச் செந்தமிழைச் சொல்லவல்லவர் வானுலகையும் ஆளவல்லவர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.120.திருமூக்கீச்சரம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

2769 சாந்தம்வெண்ணீறெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர் காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம் ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.2.120. 1
சந்தனம்போலத் திருநீற்றை உடல் முழுதும் பூசி, கங்கையைச் சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான், காந்தள் போன்ற கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற்குரிய காரணத்தை ஆராய்ந்தறிந்தவர்கள் யார்? கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும். 

2770 வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக் கொண்டலாரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில் வேள்வெந்தெழக் கண்டவர் மூக்கீச்சரத்தெம் அடிகள் செய்கன்மமே.2.120. 2
வெண்தலையை உண்கலனாகக் கையில் ஏந்திப் பலிதேர்தல், விரிந்தசடையில் கங்கையைத் தாங்குதல், உமையம்மையோடு கூடியிருத்தல், பகைவர்தம் முப்புரங்களை எய்து அழித்தல், மன்மதனை நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும் எம் அடிகள் செய்த செயல்களாகும். 

2771 மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை உருவிலாரவ் வெரியூட்டி யதும்உல குண்டதால் செருவிலாரும் புலிசெங் கயலானை யினான்செய்த பொருவின் மூக்கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே.2.120. 3
போர்க்கருவியாகிய வில், புலி, கயல் ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுக்குரியவனாய் விளங்கிய கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஒப்பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம் அடிகள் செய்த போர்களில் மும்மதில்களை எய்தது, மால்மகனாகிய காமனை எரித்தது ஆகிய உலகறிந்தனவாம். 

2772 அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம் தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே.2.120. 4
தென்நாட்டின் உறையூர் வஞ்சி ஆகிய சோழ, சேர மண்டலங்களுக்கும் உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும் அடிகள், அன்னம் போன்ற நடையினை உடைய உமையம்மையாரோடு அழகுற விளங்கி, மின்னல் போன்ற சடையில் கங்கையைக் கொண்டுள்ள காரணம் யாதோ? 

2773 விடமுனாரவ் வழல்வாய தோர் பாம்பரை வீக்கியே நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள் வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன் அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.2.120. 5
வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டியனாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன் கட்டிய மூக்கீச்சரத்துறையும் அடிகள் அச்சம் தரும் முறையில், அழல் போன்ற வாயில் நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டியவர். நள்ளிருளில் பேயோடு, ஆரழலில் நடனம் ஆடுபவர். 

2774 வெந்தநீறு மெய்யிற் பூசுவராடுவர் வீங்கிருள் வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம் அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரேதமே.2.120. 6
அகத்துறைப்பாடல்: பகைவரின் மானத்தை அழிக்கும் பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடையவனுமான கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த ஏதமான செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத்திருமேனியராய், அடல் வல்லவராய், மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை மாயமான முறையில் கவர்ந்து சென்ற தாகும். 

2775 அரையிலாருங் கலையில்ல வனாணொடு பெண்ணுமாய் உரையிலரவ் வழலாடு வரொன்றலர் காண்மினோ விரவலார்தம் மதின்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான் அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.2.120. 7
இடையில் பொருந்தும் உடை இல்லாதவன். ஆணும், பெண்ணுமாய் விளங்குபவன். அழலில் நின்று ஆடுபவன். ஒன்றாயின்றிப் பலபலவேடம் கொள்பவன். பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து அழித்தவன். கோச்செங்கணான் கட்டிய மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும் அப்பெருமான், செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும். 

2776 ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற் றதுங்கூற்றை யுதைத்ததும் கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும் ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தை நெரித்தவ்வடல் மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.2.120. 8
மூக்கீச்சரத்து அடிகள் செய்த வலிய செயல்கள் ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது, கூரிய முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பிடித்துள்ளது. ஆரவாரிக்கும் வாயினனும் வலியமூர்க்கனும், அரக்கனும் ஆகிய இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும். 

2777 நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச் சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான் சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பி யன்வில்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்செம்மையே.2.120. 9
சிறப்புமிக்க தென்னவன், செம்பியன், வில்லவன் ஆகிய மூவேந்தரும் வந்து வழிபடும் மூக்கீச்சரத்தில், உறையும் பெருமான் நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும், நெடியமாலும் புகழிற் பொருந்திய திருவடிகளைத் தேட முற்பட்டபோது தீத்திரளாய் நின்றவன். 

2778 வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர் உண்பினாலே யுரைப்பார் மொழி யூனமதாக்கினான் ஒண்புலால்வேன் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர் பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.2.120. 10
வெண்மையான புலால் நாற்றம் வீசும் ஆடையை மார்பிற் கொண்டவரும், வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய புத்தர்களும் சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய தாக்கினான். புலால் மணக்கும் வேல் வென்றி உடையவன். சோழமன்னன் எடுப்பித்த மூக்கீச்சரத்து அப் பெருமான் செய்யும் புதுமையான செயல் இதுவாகும். 

2779 மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச் செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞான சம்பந்தன சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.2.120. 11
மற்போரில் வல்லவராய முடிமன்னர் மூவரானும் தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள் மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச் செந்தமிழைச் சொல்லவல்லவர் வானுலகையும் ஆளவல்லவர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.