LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-121

2.121.திருப்பாதிரிப்புலியூர் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர். 
தேவியார் - தோகையம்பிகையம்மை. 
2780 முன்னநின்ற முடக்கான் 
முயற்கருள் செய்துநீள் 
புன்னைநின்று கமழ்பா 
திரிப்புலி யூருளான் 
தன்னைநின்று வணங்குந் 
தனைத்தவ மில்லிகள் 
பின்னைநின்ற பிணியாக் 
கையைப்பெறு வார்களே.
2.121. 1
முடங்கிய கால்களை உடைய முயலுருவத்தைப் பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து, நீண்ட புன்னைமரங்கள் மணம் கமழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனை வணங்கும் மேலான தவம் இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப் பெறுவார்கள். 
2781 கொள்ளிநக்க பகுவாய 
பேய்கள் குழைந்தாடவே 
முள்ளிலவம் முதுகாட் 
டுறையும் முதல்வன்இடம் 
புள்ளினங்கள் பயிலும் 
பாதிரிப் புலியூர்தனை 
உள்ள நம்மேல் 
வினையாயின ஒழியுங்களே.
2.121. 2
நகும் போது தீயை உமிழும் திறந்த வாயை உடைய பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடுகாட்டில் உறையும் இறைவன் இடமாகிய, அன்னம், மயில் முதலிய பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய வினைகளை ஒழியுங்கள். 
2782 மருளினல்லார் வழிபாடு 
செய்யும் மழுவாளர்மேல் 
பொருளினல்லார் பயில் 
பாதிரிப் புலியூருளான் 
வெருளின்மானின் பிணை 
நோக்கல்செய்து வெறிசெய்தபின் 
அருளிஆகத் திடைவைத் 
ததுவும் மழகாகவே.
2.121.3
மெய்ப்பொருளை அறிந்தவரும் மயக்கமற்ற ஞானியரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிப்புலியுல் வாழம் மழவாளரைக் கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய பார்வதியை நோக்கி, அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து, தம் ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள அப்பெருமான் செயல்மிக்க அழகானதாகும். 
2783 போதினாலும் புகையாலும் 
உய்த்தே அடியார்கள்தாம் 
போதினாலே வழிபாடு 
செய்யப் புலியூர் தனுள் 
ஆதிநாலும் அவலம் 
மிலாதஅடி கள்மறை 
ஓதிநாளும் இடும்பிச்சை 
யேற்றுண் டுணப்பாலதே.
2.121. 4
மலர்கள் தூவியும் தசாங்கம் முதலிய மணமுடைய பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள் தோறும் வேதங்களை ஓதிக் கொண்டு சென்று அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர். 
2784 ஆகநல்லார் அமுதாக்க 
வுண்டான் அழலைந்தலை 
நாகநல்லார் பரவந்நயந் 
தங்கரை யார்த்தவன் 
போகநல்லார் பயிலும் 
பாதிரிப் புலியூர் தனுள் 
பாகநல்லா ளொடுநின்ற 
எம்பர மேட்டியே.
2.121. 5
நுகர்ச்சிக்குரிய இளமகிளிர் பயிலும் பாதிரிப்புலியூரில் பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள பரமேட்டி உடலின் இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை உண்டவன். நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையில் கட்டியவன். 
2785 மதியமொய்த்த கதிர்போ 
லொளிம்மணற் கானல்வாய்ப் 
புதியமுத்தந் திகழ் 
பாதிரிப் புலியூரெனும் 
பதியில்வைக்கப் படுமெந்தை 
தன்பழந் தொண்டர்கள் 
குதியுங்கொள்வர் விதியுஞ் 
செய்வர் குழகாகவே.
2.121. 6
பழ அடியார்கள் அழகாக ஆகம விதிகளின்படி வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று வெண்மணல் பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள் திகழும் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி உள்ளார் இறைவர். 
2786 கொங்கரவப் படுவண் 
டறைகுளிர் கானல்வாய்ச் 
சங்கரவப் பறையின் 
னொலியவை சார்ந்தெழப் 
பொங்கரவம் முயர் 
பாதிரிப் புலியூர்தனுள் 
அங்கரவம் அரையில் 
அசைத்தானை அடைமினே.
2.121. 7
பூந்தாதுகளின் வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச் சோலைகளில் சங்குகளின் ஒலி, பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி ஆரவாரம் மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்து எழுந்தருளிய பரமனை அடையுங்கள். 
2787 வீக்கமெழும் மிலங்கைக் 
கிறை விலங்கல்லிடை 
ஊக்கமொழிந் தலறவ் 
விரலாலிறை யூன்றினான் 
பூக்கமழும் புனற் 
பாதிரிப் புலியூர்தனை 
நோக்கமெலிந் தணுகா 
வினைநுணு குங்களே.
2.121. 8
பெருமை மிக்க இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும். 
2788 அன்னந்தாவும் மணியார் 
பொழின்மணியார் புன்னை 
பொன்னந் தாதுசொரி 
பாதிரிப் புலியூர்தனுள் 
முன்னந்தாவி அடிமூன் 
றளந்தவன் நான்முகன் 
தன்னந்தாளுற் றுணராத 
தோர்தவ நீதியே.
2.121. 9
அன்னங்கள் விளையாடும் அழகிய சோலைகளில் முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச் சொரியும் திருப்பாதிரிப்புலியூரில், முற்காலத்தே எல்லா உலகங்களையும் தாவி மூன்றடியால் அளந்த திருமாலும், நான்முகனும், சிறிதேனும் திருத்தாளையும் திருமுடியையும் அறிய முடியாதவராய்த் தவத்தின் நேரிய நீதி வடிவினராய்ப் பெருமான் விளங்குகிறார். 
2789 உரிந்தகூறை யுருவத் 
தொடுதெரு வத்திடைத் 
திரிந்துதின்னுஞ் சிறுநோன் 
பரும்பெருந் தேரரும் 
எரிந்துசொன்னவ் வுரைகொள் 
ளாதேயெடுத் தேத்துமின் 
புரிந்தவெண் ணீற்றண்ணல் 
பாதிரிப்புலி யூரையே.
2.121. 10
ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும், புத்தரும் எரிவினால் சொல்லும் உரைகளைக் கொள்ளாது. திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப்புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள். 
2790 அந்தண்நல் லாரகன் 
காழியுள் ஞானசம் 
பந்தன்நல் லார்பயில் 
பாதிரிப் புலியூர்தனுள் 
சந்தமாலைத் தமிழ்பத்தி 
வைதரித் தார்கண்மேல் 
வந்துதீயவ் வடையாமை 
யால்வினை மாயுமே.
2.121. 11
அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தன், நல்லவர் வாழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய இத்திரருபதிகத்தை ஓதி வழிபடுவாரைத் தீமைகள் அணுகா. அவர்தம் வினைகள் மாயும். 
திருச்சிற்றம்பலம்

2.121.திருப்பாதிரிப்புலியூர் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர். தேவியார் - தோகையம்பிகையம்மை. 

2780 முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள் புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான் தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள் பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே.2.121. 1
முடங்கிய கால்களை உடைய முயலுருவத்தைப் பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து, நீண்ட புன்னைமரங்கள் மணம் கமழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனை வணங்கும் மேலான தவம் இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப் பெறுவார்கள். 

2781 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்இடம் புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே.2.121. 2
நகும் போது தீயை உமிழும் திறந்த வாயை உடைய பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடுகாட்டில் உறையும் இறைவன் இடமாகிய, அன்னம், மயில் முதலிய பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய வினைகளை ஒழியுங்கள். 

2782 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல் பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான் வெருளின்மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின் அருளிஆகத் திடைவைத் ததுவும் மழகாகவே.2.121.3
மெய்ப்பொருளை அறிந்தவரும் மயக்கமற்ற ஞானியரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிப்புலியுல் வாழம் மழவாளரைக் கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய பார்வதியை நோக்கி, அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து, தம் ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள அப்பெருமான் செயல்மிக்க அழகானதாகும். 

2783 போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள் ஆதிநாலும் அவலம் மிலாதஅடி கள்மறை ஓதிநாளும் இடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.2.121. 4
மலர்கள் தூவியும் தசாங்கம் முதலிய மணமுடைய பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள் தோறும் வேதங்களை ஓதிக் கொண்டு சென்று அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர். 

2784 ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன் போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர் தனுள் பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.2.121. 5
நுகர்ச்சிக்குரிய இளமகிளிர் பயிலும் பாதிரிப்புலியூரில் பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள பரமேட்டி உடலின் இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை உண்டவன். நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையில் கட்டியவன். 

2785 மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப் புதியமுத்தந் திகழ் பாதிரிப் புலியூரெனும் பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள் குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.2.121. 6
பழ அடியார்கள் அழகாக ஆகம விதிகளின்படி வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று வெண்மணல் பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள் திகழும் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி உள்ளார் இறைவர். 

2786 கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச் சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் பொங்கரவம் முயர் பாதிரிப் புலியூர்தனுள் அங்கரவம் அரையில் அசைத்தானை அடைமினே.2.121. 7
பூந்தாதுகளின் வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச் சோலைகளில் சங்குகளின் ஒலி, பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி ஆரவாரம் மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்து எழுந்தருளிய பரமனை அடையுங்கள். 

2787 வீக்கமெழும் மிலங்கைக் கிறை விலங்கல்லிடை ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான் பூக்கமழும் புனற் பாதிரிப் புலியூர்தனை நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.2.121. 8
பெருமை மிக்க இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும். 

2788 அன்னந்தாவும் மணியார் பொழின்மணியார் புன்னை பொன்னந் தாதுசொரி பாதிரிப் புலியூர்தனுள் முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன் தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.2.121. 9
அன்னங்கள் விளையாடும் அழகிய சோலைகளில் முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச் சொரியும் திருப்பாதிரிப்புலியூரில், முற்காலத்தே எல்லா உலகங்களையும் தாவி மூன்றடியால் அளந்த திருமாலும், நான்முகனும், சிறிதேனும் திருத்தாளையும் திருமுடியையும் அறிய முடியாதவராய்த் தவத்தின் நேரிய நீதி வடிவினராய்ப் பெருமான் விளங்குகிறார். 

2789 உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத் திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும் எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின் புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.2.121. 10
ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும், புத்தரும் எரிவினால் சொல்லும் உரைகளைக் கொள்ளாது. திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப்புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள். 

2790 அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம் பந்தன்நல் லார்பயில் பாதிரிப் புலியூர்தனுள் சந்தமாலைத் தமிழ்பத்தி வைதரித் தார்கண்மேல் வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.2.121. 11
அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தன், நல்லவர் வாழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய இத்திரருபதிகத்தை ஓதி வழிபடுவாரைத் தீமைகள் அணுகா. அவர்தம் வினைகள் மாயும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.