LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-1

3.001.கோயில் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். 
தேவியார் - சிவகாமியம்மை. 
2801 ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்
சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே
3.001.1
நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப்பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞான வெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறியகொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர்பனியைச் சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க. 
2802 கொட்ட மேகம ழும்குழ லாளொடு 
கூடி னாய்எரு தேறி னாய்நுதற்
பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா
நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை
நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்
இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ
3.001.2
நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப்பட்டம் அணிந்தவனே, பூதகணங்கள் இசைபாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே, (அறிதற்கரிய) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ? கூறியருள்க. 
2803 நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம்
சேர்த லால்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாய்அரு ளாய்உன காரணம்கூறுதுமே
3.001.3
நீலநிறத்தைப் பொருந்திய கரிய திருக்கழுத்தினர் (திருநீலகண்டர்). அழகிய நெற்றிக்கண்ணினர். திரிசூலம் பற்றியவர், காடுடைய சுடலைப் பொடிபூசியவர், சடையினர், சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய். உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம். 
2804 கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக்
கோல வாள்மதி போலமு கத்திரண் டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர்
காத லால்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடி யார்க்கடையாவினையே
3.001.4
பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக்கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான்,(நடராசாப் பெருமான்), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப்போன்ற உடற்கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக் கூத்தாடும் முழுமுதல்வன் அடியவர்க்கு வினைத்தொடர்பு இல்லை. 
2805 தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர்
தூம ணிமிட றாபகு வாயதோர்
பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா
தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம்
சேர்த லால்கழற் சேவடி கைதொழ
இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே
3.001.5
திரிபுரத்தை எரித்தொழிக்க மலையில்லால் தீக்கணையை எய்தவனே, பழந்தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய நீலமணிபோலக் கறுத்த திருக்கழுத்தினனே! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே! தில்லை வாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும். 
2806 ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல்
அங்கை யாய்அம ரர்க்கம ராவுமை
பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா
மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
மன்னி னாய்மழு வாளி னாய்அழல்
நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் 
ணாவினையே
3.001.6
திருமேனியில் தோய்த்த அழகிய கொன்றை மாலையையுடையவனே! தீ ஏந்திய திருக்கையனே! தேவதேவனே! அம்பிகைபாகமுடைய பகவனே! பலி ஏற்றுத்திரியும் பாண்டரங்கக் கூத்தனே! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே! மழுவாளை ஏந்தியவனே! நச்சுத் தீயையுடைய அரவக்கச்சணிந்த திருவரையினனே! உன் அடியவரை வினைகள் அடையா. (ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு.) 
2807 சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய
சங்க வார்குழை யாய்திக ழப்படும்
வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்
ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம்
அங்கை யால்தொழ வல்லடி யார்களை
வாதி யாதகலும்நலி யாமலி தீவினையே
3.001.7
நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே, விளங்குகின்ற மறையோனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது; வருத்தா தொழியும்.
2808 வேயி னார்பணைத் தோளியொ டாடலை
வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே
தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த
செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே
3.001.8
மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திரு நடங்கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம். 
2809 தாரி னார்விரிகொன்றை யாய்மதி
தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்ல
தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்
சீரி னால்வழி பாடொழி யாததோர்
செம்மை யால்அழ காயசிற் றம்பலம்
ஏரி னால் அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே
3.001.9
மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே, பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகிய தேர்களாலே பொலிவு நிறையப் பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத்தில்லையுள், சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தெழுச்சியால் விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவேம். ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு. 
2810 வெற்ற ரையுழல் வார்துவர் ஆடைய
வேடத் தாரவர் கள்உரை கொள்ளன்மின்
மற்ற வருல கின்னவ லம்மவை மாற்றகில்லார்
கற்ற வர்தொழு தேத்துசிற் றம்பலம்
காத லால்கழற் சேவடி கைதொழ
உற்ற வர்உல கின்உறு திகொள வல்லவரே
3.001.10
ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர். சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால், கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி (ஆன்மலாபம்) கொள்ளவல்லவராவர். 
2811 நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத்
தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே
3.001.11
மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும், வேதசிவாகமங்களையுணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப்புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை சையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர். (தி.3ப.6பா.11; தி.3ப.31பா.11; தி.3ப.52பா.11.) 
திருச்சிற்றம்பலம்

3.001.கோயில் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை. 

2801 ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர்அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனேபாடி னாய்மறை யோடுபல் கீதமும்பல்சடைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே3.001.1
நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப்பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞான வெளியாகக் கொண்டு வாழ்பவனே! நறியகொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே! நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே! பலவாகிய சடைமேல், குளிர்பனியைச் சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம் தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க. 

2802 கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற்பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமாநட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லைநல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ3.001.2
நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப்பட்டம் அணிந்தவனே, பூதகணங்கள் இசைபாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே, (அறிதற்கரிய) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ? கூறியருள்க. 

2803 நீலத் தார்கரி யமிடற் றார்நல்லநெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்றுசூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம்சேர்த லால்கழற் சேவடி கைதொழக்கோலத் தாய்அரு ளாய்உன காரணம்கூறுதுமே3.001.3
நீலநிறத்தைப் பொருந்திய கரிய திருக்கழுத்தினர் (திருநீலகண்டர்). அழகிய நெற்றிக்கண்ணினர். திரிசூலம் பற்றியவர், காடுடைய சுடலைப் பொடிபூசியவர், சடையினர், சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய். உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம். 

2804 கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக்கோல வாள்மதி போலமு கத்திரண் டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்கம்ப லைத்தெழு காமுறு காளையர்காத லால்கழற் சேவடி கைதொழஅம்பலத்துறை வான்அடி யார்க்கடையாவினையே3.001.4
பூங்கொம்பு தனக்கு இணையாகாவாறு அலையச் செய்து அதனழகினையும் தான் பெற்ற நுண்ணிய இடையையும், அழகும் ஒளியும் உடைய திங்கள் போலும் முகத்தில் இரண்டு அம்புகளை வருத்தி ஒப்பாகீர் என்றொதுக்கிய திருக்கண்களையும் உடைய சிவகாமியம்மையார் கொங்கைகளை விரும்பிய வார்சடையான்,(நடராசாப் பெருமான்), அரகர முழக்கஞ் செய்து விழுந்தெழுந்து அன்பர்கள் அன்புடன் வழிபடும் காளையைப்போன்ற உடற்கட்டினர். பேரார்வத்தோடு திருக்கழலணிந்த சிவந்த திருவடிகளைக் கைகளால் தொழ, பொன்னம்பலத்தில் திருக் கூத்தாடும் முழுமுதல்வன் அடியவர்க்கு வினைத்தொடர்பு இல்லை. 

2805 தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர்தூம ணிமிட றாபகு வாயதோர்பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்காதில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம்சேர்த லால்கழற் சேவடி கைதொழஇல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே3.001.5
திரிபுரத்தை எரித்தொழிக்க மலையில்லால் தீக்கணையை எய்தவனே, பழந்தேவர் எல்லாரும் அமுதுண்ண வேண்டிக் கருணைப் பெருக்கால், நஞ்சினை உண்டதொரு தூய நீலமணிபோலக் கறுத்த திருக்கழுத்தினனே! பற்கள் நிறைந்த பிளந்த வாயுடையதொரு தலையில் பலியை ஏற்று உழலும் பாண்டரங்கக் கூத்தனே! தில்லை வாழந்தணர் வணங்கி ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்து வழிபடுதலாலும் கழலணிந்த சேவடியைக் கைகளால் தொழுதலாலும் இருவினையும் பற்றறக் கழியும். 

2806 ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல்அங்கை யாய்அம ரர்க்கம ராவுமைபாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்காமாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம்மன்னி னாய்மழு வாளி னாய்அழல்நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே3.001.6
திருமேனியில் தோய்த்த அழகிய கொன்றை மாலையையுடையவனே! தீ ஏந்திய திருக்கையனே! தேவதேவனே! அம்பிகைபாகமுடைய பகவனே! பலி ஏற்றுத்திரியும் பாண்டரங்கக் கூத்தனே! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே! மழுவாளை ஏந்தியவனே! நச்சுத் தீயையுடைய அரவக்கச்சணிந்த திருவரையினனே! உன் அடியவரை வினைகள் அடையா. (ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு.) 

2807 சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளியசங்க வார்குழை யாய்திக ழப்படும்வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம்அங்கை யால்தொழ வல்லடி யார்களைவாதி யாதகலும்நலி யாமலி தீவினையே3.001.7
நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே, விளங்குகின்ற மறையோனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத் தீவினைப் பெருக்கம் வாதிக்காது; வருத்தா தொழியும்.

2808 வேயி னார்பணைத் தோளியொ டாடலைவேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமுதாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனேதீயி னார்கணை யால்புரம் மூன்றெய்தசெம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே3.001.8
மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திரு நடங்கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம். 

2809 தாரி னார்விரிகொன்றை யாய்மதிதாங்கு நீள்சடை யாய்தலை வாநல்லதேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள்சீரி னால்வழி பாடொழி யாததோர்செம்மை யால்அழ காயசிற் றம்பலம்ஏரி னால் அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே3.001.9
மலர்ந்த கொன்றைப் பூமாலையைச் சூடியவனே, பிறையைத் தாங்கும் நீண்ட சடையவனே, தலைவனே, அழகிய தேர்களாலே பொலிவு நிறையப் பெற்ற திருவீதிகளையுடைய செல்வம் நிறைந்த திருத்தில்லையுள், சிறந்த நூல் முறைப்படி வழிபடுதலை ஒழியாததொரு செம்மையால் அழகான திருச்சிற்றம்பலத்தைத் திருக் கூத்தெழுச்சியால் விரும்பினவனே, உன் சீரடிகளை ஏத்துவேம். ஒழியாத வழிபாடு இன்றும் உண்டு. 

2810 வெற்ற ரையுழல் வார்துவர் ஆடையவேடத் தாரவர் கள்உரை கொள்ளன்மின்மற்ற வருல கின்னவ லம்மவை மாற்றகில்லார்கற்ற வர்தொழு தேத்துசிற் றம்பலம்காத லால்கழற் சேவடி கைதொழஉற்ற வர்உல கின்உறு திகொள வல்லவரே3.001.10
ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர். சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால், கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி (ஆன்மலாபம்) கொள்ளவல்லவராவர். 

2811 நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள்நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத்தீச னைஇசை யாற்சொன்ன பத்திவைகூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே3.001.11
மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும், வேதசிவாகமங்களையுணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப்புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை சையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர். (தி.3ப.6பா.11; தி.3ப.31பா.11; தி.3ப.52பா.11.) 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.