LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-14

2.014.திருவெண்ணியூர் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர். 
தேவியார் - அழகியநாயகியம்மை. 
1612 சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா 
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும் 
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை 
உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 2.014.1
சடையின்மேல் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவன். உடைந்த தலையோட்டில் பலிஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவன். தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவன். அவனையன்றிப் பிறரை நினையாது என் உள்ளம். 
1613 சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் 
ஆதியை யாதியு மந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் 
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே. 2.014. 2
ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன். வேதியர்களால் வணங்கப்பெறும் திருவெண்ணியில் விளங்கும் நீதி வடிவினன். அவனை நினைய வல்லவர்களின் வினைகள் நில்லாது அகலும். 
1614 கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் 
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை 
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் 
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே. 2.014. 3
கனியாய் இனிப்பவன். மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன். மூவுலகங்கட்கும் தானே தலைவன் ஆனவன். மேம்பட்டவன். நல்லவர்களால் வணங்கப்பெறும் வெண்ணியில் எழுந்தருளிய இன்ப உருவினன். அவனை ஏத்துவார் குற்றம் இலராவர். 
1615 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் 
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக 
ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை 
ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே. 2.014.4
எல்லாப் பொருள்கட்கும் முன்னே தோன்றிய பழையோன். மூவுலகங்கட்கும் தலைவனாய் விளங்கிக் காப்பவன். தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு கலந்து அவர்களைப் பிணிப்பவன். அழகிய வெண்ணி நகரில் விளங்கும் தலைவன். அவனை ஏத்தாதவர் என்ன பயனைக் காணவல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும் பேய்களையே ஒப்பர். 
1616 நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் 
தாரானைத் தையலொர் பாகமு டையானைச் 
சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை 
ஊரானை யுள்கவல் லார்வினை யோயுமே. 2.014. 5
நிறைந்த நீரைக் கொண்ட கங்கையை முடிமிசைத் தரித்தவன். அதனைச் சூழக் கொன்றை மாலையைப் புனைந்துள்ளவன். உமையம்மையை ஓர்பாகமாக உடையவன். புகழ் பொருந்தியவன். விளங்கும் வெண்ணியை விரும்பி உகந்த ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அவனை நினைவார் வினைகள் நீங்கும். 
1617 முத்தினை முழுவயி ரத்திரண் மாணிக்கத் 
தொத்தினைத் துளக்கமி லாதவி ளக்காய 
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் 
அத்தனை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 2.014. 6
முத்துப் போன்றவன். முழுமையான வயிரத்திரள் போன்றவன். மாணிக்கக் கொத்துப் போன்றவன். அசைவற்ற சுடராய் உலகத் தோற்றத்துக்கு வித்தாய் விளங்குபவன். தேவர்களால் தொழுது வணங்கப்பெறும் வெண்ணியில் விளங்கும் தலைவனாவான். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை. 
1618 காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் 
பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில் 
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் 
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே. 2.014.7
மன்மதனை எரித்தவன். கொல்லும் தொழிலுடைய எமனைச் சினந்து உதைத்தவன். பெரிய கையை உடைய யானையை உரித்து அதன் தோலை மேனிமீது போர்த்தவன். தேவர்கள் வந்து வணங்கும் திருவெண்ணியில் விளங்கும் அக்கடவுளை நினைப்பவர்களின் வினைகள் நீங்கும். 
1619 மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் 
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோண்முடி 
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப் 
பொறுத்தானைப் போற்றுவா ராற்றலு டையாரே. 2.014.8
பகைமை பூண்டவனாய்ப் பெருமை மிக்க கயிலை மலையைப் பொருட்படுத்தாது விரைந்து அதனைச் சினந்து சென்று எடுத்த இராவணனது பெருமை அழியுமாறு அவனுடைய விளங்கும் தோள்கள் முடிகள் ஆகியவற்றை முரித்தவன். அழகமைந்த வெண்ணியில் உறையும் எம் தலைவன் என வழிபடுபவர் குற்றங்களைப் பொறுப்பவன். அவனைப் போற்றுவார் ஆற்றல் உடையவர் ஆவர். 
1620 மண்ணினை வானவ ரோடும னிதர்க்கும் 
கண்ணினைக் கண்ணனும் நான்முக னுங்காணா 
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் 
அண்ணலை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 2.014.9
ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன். வானவர்க்கும் மக்களுக்கும் கண் போன்றவன். திருமால் பிரமன் காண இயலாத விண் வடிவானவன். தேவர்களால் வழிபடப் பெறும் திருவெண்ணியில் விளங்கும் தலைமையாளன். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை. 
1621 குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய 
மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு ளன்மின் 
விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில் 
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே. 2.014.10
குண்டர்களாகிய சமண புத்த மதத்தைச் சேர்ந்த மிடுக்குடையோரின் மிடுக்கான உரைகளைக்கேட்டு நம் சமய நெறிகளை வெறாதீர்கள். பகைவர் முப்புரங்களை எய்தவனாகிய திருவெண்ணியில் உறையும் இறைவனுக்குத் தொண்டு பூண்டு அவனை அடைய வல்லார்க்குத் துயர்கள் தோன்றா. 
1622 மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன் 
திருவாருந் திகழ்தரு வெண்ணிய மர்ந்தானை 
உருவாரு மொண்டமிழ் மாலையி வைவல்லார் 
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே. 2.014. 11
மணம் பொருந்தியதும் பெரியோர் நிறைந்ததுமான காழிப்பதியில் தோன்றி விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் நிறைந்து திகழும் திருவெண்ணியில் அமர்ந்த இறைவனைப் போற்றிப் பாடிய ஞானவடிவாக விளங்கும் இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர். 
திருச்சிற்றம்பலம்

2.014.திருவெண்ணியூர் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர். தேவியார் - அழகியநாயகியம்மை. 

1612 சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும் விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 2.014.1
சடையின்மேல் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவன். உடைந்த தலையோட்டில் பலிஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவன். தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவன். அவனையன்றிப் பிறரை நினையாது என் உள்ளம். 

1613 சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் ஆதியை யாதியு மந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் நீதியை நினையவல் லார்வினை நில்லாவே. 2.014. 2
ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன். வேதியர்களால் வணங்கப்பெறும் திருவெண்ணியில் விளங்கும் நீதி வடிவினன். அவனை நினைய வல்லவர்களின் வினைகள் நில்லாது அகலும். 

1614 கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே. 2.014. 3
கனியாய் இனிப்பவன். மனம் கனிந்து வழிபடுவோரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிவன். மூவுலகங்கட்கும் தானே தலைவன் ஆனவன். மேம்பட்டவன். நல்லவர்களால் வணங்கப்பெறும் வெண்ணியில் எழுந்தருளிய இன்ப உருவினன். அவனை ஏத்துவார் குற்றம் இலராவர். 

1615 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே. 2.014.4
எல்லாப் பொருள்கட்கும் முன்னே தோன்றிய பழையோன். மூவுலகங்கட்கும் தலைவனாய் விளங்கிக் காப்பவன். தன்னை வழிபட்டு நெகிழ்ந்தவர்களோடு கலந்து அவர்களைப் பிணிப்பவன். அழகிய வெண்ணி நகரில் விளங்கும் தலைவன். அவனை ஏத்தாதவர் என்ன பயனைக் காணவல்லார்? அவர்கள் மனிதரே ஆயினும் பேய்களையே ஒப்பர். 

1616 நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் தாரானைத் தையலொர் பாகமு டையானைச் சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை ஊரானை யுள்கவல் லார்வினை யோயுமே. 2.014. 5
நிறைந்த நீரைக் கொண்ட கங்கையை முடிமிசைத் தரித்தவன். அதனைச் சூழக் கொன்றை மாலையைப் புனைந்துள்ளவன். உமையம்மையை ஓர்பாகமாக உடையவன். புகழ் பொருந்தியவன். விளங்கும் வெண்ணியை விரும்பி உகந்த ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவன். அவனை நினைவார் வினைகள் நீங்கும். 

1617 முத்தினை முழுவயி ரத்திரண் மாணிக்கத் தொத்தினைத் துளக்கமி லாதவி ளக்காய வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அத்தனை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 2.014. 6
முத்துப் போன்றவன். முழுமையான வயிரத்திரள் போன்றவன். மாணிக்கக் கொத்துப் போன்றவன். அசைவற்ற சுடராய் உலகத் தோற்றத்துக்கு வித்தாய் விளங்குபவன். தேவர்களால் தொழுது வணங்கப்பெறும் வெண்ணியில் விளங்கும் தலைவனாவான். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை. 

1618 காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில் மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே. 2.014.7
மன்மதனை எரித்தவன். கொல்லும் தொழிலுடைய எமனைச் சினந்து உதைத்தவன். பெரிய கையை உடைய யானையை உரித்து அதன் தோலை மேனிமீது போர்த்தவன். தேவர்கள் வந்து வணங்கும் திருவெண்ணியில் விளங்கும் அக்கடவுளை நினைப்பவர்களின் வினைகள் நீங்கும். 

1619 மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோண்முடி இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப் பொறுத்தானைப் போற்றுவா ராற்றலு டையாரே. 2.014.8
பகைமை பூண்டவனாய்ப் பெருமை மிக்க கயிலை மலையைப் பொருட்படுத்தாது விரைந்து அதனைச் சினந்து சென்று எடுத்த இராவணனது பெருமை அழியுமாறு அவனுடைய விளங்கும் தோள்கள் முடிகள் ஆகியவற்றை முரித்தவன். அழகமைந்த வெண்ணியில் உறையும் எம் தலைவன் என வழிபடுபவர் குற்றங்களைப் பொறுப்பவன். அவனைப் போற்றுவார் ஆற்றல் உடையவர் ஆவர். 

1620 மண்ணினை வானவ ரோடும னிதர்க்கும் கண்ணினைக் கண்ணனும் நான்முக னுங்காணா விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அண்ணலை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 2.014.9
ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன். வானவர்க்கும் மக்களுக்கும் கண் போன்றவன். திருமால் பிரமன் காண இயலாத விண் வடிவானவன். தேவர்களால் வழிபடப் பெறும் திருவெண்ணியில் விளங்கும் தலைமையாளன். அவனை அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை. 

1621 குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு ளன்மின் விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில் தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே. 2.014.10
குண்டர்களாகிய சமண புத்த மதத்தைச் சேர்ந்த மிடுக்குடையோரின் மிடுக்கான உரைகளைக்கேட்டு நம் சமய நெறிகளை வெறாதீர்கள். பகைவர் முப்புரங்களை எய்தவனாகிய திருவெண்ணியில் உறையும் இறைவனுக்குத் தொண்டு பூண்டு அவனை அடைய வல்லார்க்குத் துயர்கள் தோன்றா. 

1622 மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன் திருவாருந் திகழ்தரு வெண்ணிய மர்ந்தானை உருவாரு மொண்டமிழ் மாலையி வைவல்லார் பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே. 2.014. 11
மணம் பொருந்தியதும் பெரியோர் நிறைந்ததுமான காழிப்பதியில் தோன்றி விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் நிறைந்து திகழும் திருவெண்ணியில் அமர்ந்த இறைவனைப் போற்றிப் பாடிய ஞானவடிவாக விளங்கும் இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.