LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-25

5.025.திருப்பாசூர் 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பாசூர்நாதர். 
தேவியார் - பசுபதிநாயகியம்மை. 
1315 முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப்பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்தனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே. 5.025.1
வரிசையாகிய அடர்ந்த செஞ்சடையுடையவராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் முதற்கண் முப்புரங்களை எய்த முதல்வர்; சிந்திப்பவர்களின் வினைகளைத் தீர்க்கும் செல்வர்; சந்திரனுக்கு அருள் செய்த தண்ணளியாளர்.
1316 மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே. 5.025.2
படர்ந்தெழும் நாகத்தைப் பூண்ட திர்ப்பாசூர்த் தலத்து இறைவர். உமாதேவியை ஒரு பாகத்து மகிழ்ந்த மணவாளர்; உயிர்களைப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் வல்லமை உடைய வினைகளாகிய இருளைப் போக்கிடும் ஒளி வடிவானவர்; எல்லை கடந்த இயமனைக் கால்கொண்டு பாய்ந்து உதைத்தவர்.
1317 நாறு கொன்றையும் நாகமுந் திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே. 5.025.3
பருந்துகள் அலைக்கும் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவராகிய திர்ப்பாசூர்த்தலத்து இறைவர், மணம்வீசும் கொன்றையும், நாகமும், திங்களும், கங்கையாறும் செஞ்சடையில் வைத்த அழகர்; கரியகண்டத்தர்; கையிற்பிடித்த சூலத்தர்.
1318 வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே. 5.025.4
நீண்ட அரவினைப் பற்றியாட்டும், இயல்பினர் ஆகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், வெற்றியூரில் உறையும் வேதியர், ஏற்றினை ஒற்றி உகந்து ஏறும் ஒப்பற்றவர், நெற்றிக் கண்ணினார்.
1319 மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. 5.025.5
பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர். தேன் விரிந்த மலர்களையணிந்த நீண்ட கண்ணுடைய உமாதேவியார்பால் விருப்பமும் வேட்கையும் உடையவராயிருப்பவர்; இவர் தீயவரேல் இவரது சூழ்ச்சித் தன்மைகளை அறியேன்.
1320 பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லிப் போய்ப்புகு மூரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினார் பாசூ ரடிகளே. 5.025.6
நிறைந்த திருவெண்ணீற்றினராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், பல்லில்லாத ஓட்டினைக் கையேந்திப் பகலெல்லாம் வெயிலில் நின்று இடுகின்ற பலியினை ஏற்பவர்; சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை அறியேன்; சொல்லுவீராக.
1321 கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. 5.025.7
பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் கட்டிவிட்ட சடையை உடையவரும், கபாலம் கைக்கொண்டவரும் எட்டிப்பார்த்து இல்லத்தில் புகுந்தவரும் ஆகியர். இவர் விரும்பிச் செய்வன இவையென யான் முற்ற அறியேன்.
1322 வேத மோதிவந் தில்புகுந் தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே. 5.025.8
பாதி வெண்பிறையணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர், வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார்; காதில் வெண்குழை வைத்த கபாலியார்; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார்.
1323 சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பன் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே. 5.025.9
தீயதாகிய பாம்பினையும் பற்றி ஆடுபவராகிய திர்ப்பாசூர்த் தலத்திறைவர், சாம்பல் பூசுவர்; தாழ்கின்ற சடையினைக் கட்டுவர்; தாங்கும் இயல்புள்ள முதிர்ந்த எருதினை யேறும் ஒருவர்; ஒளிதேம்பிய வெண்மதியைச் சூடுவர்.
1324 மாலி னோடு மறையவன் தானுமாய்
மேலுங் கீழு மளப்பரி தாயவர்
ஆலின் நீழ லறம் பகர்ந் தார்மிகப்
பால்வெண் நீற்றினர் பாசூ ரடிகளே. 5.025.10
பால்போன்ற வெண்ணீற்றையணிந்தவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் மாலினோடு பிரமனும் மேலும் கீழும் அளந்தும் காண்டற்கரியவர்; ஆலின்நீழல் இருந்து அறம் பகர்ந்த ஞானவடிவினர்.
1325 திரியும் மூஎயில் செங்கணை யொன்றினால் எரிய எய்தன ரேனு மிலங்கைக்கோன் நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினால் பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே. 5.025.11
பருப்பொருளும், நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், திரியும் மூன்று புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும், இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர் ஆவர்.

1325 திரியும் மூஎயில் செங்கணை யொன்றினால்

எரிய எய்தன ரேனு மிலங்கைக்கோன்

நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினால்

பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே. 5.025.11

  பருப்பொருளும், நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், திரியும் மூன்று புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும், இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.