|
||||||||
தக்காளி ஆம்லட்(Tomato Omelette) |
||||||||
தேவையானவை : கடலை மாவு - 100 கிராம்
தக்காளி - 250 கிராம்
மிளகாய் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
சாப்பாட்டு சோடா - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. கடலை மாவு, மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைப் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளுங்கள்.
2. தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் தண்ணீரை விட்டு தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசையுங்கள்.
3. சிறிது உப்பு போட்டு மேலும் ஒரு முறை பிசையுங்கள்.
4. தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு மேஜைக் கரண்டி எண்ணய் விடுங்கள். கடலை மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை போல் பரவலாக விடுங்கள்.
5. அதன் மீது தக்காளியை ஒரு கரண்டி எடுத்து விடுங்கள். மேலும் ஒரு கரண்டி கடலை மாவை அதன் மீது விடுங்கள்.
6. ஒரு பக்கம் நன்றாகப் பொறிந்து வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து வையுங்கள்.
|
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|