LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-60

4.060.திருப்பெருவேளூர் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரியாதநாதர். 
தேவியார் - மின்னனையாளம்மை. 
578 மறையணி நாவி னானை
மறப்பிலார்மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்
கனலெரி யாடினானைப்
பிறையணி சடையி னானைப்
பெருவேளூர் பேணினானை
நறையணி மலர்கள் தூவி
நாடொறும்வணங்கு வேனே.
4.060.1
வேதம் ஓதும் நாவினராய், தம்மை மறவாதார் மனத்தில் உள்ளவராய், நீலகண்டராய், ஒளிவீசும் நெருப்பில் கூத்து நிகழ்த்துபவராய், பிறையை அணிந்த சடையினராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை நறுமண மலர்களைத் தூவி நாள்தோறும் வணங்குவேன் நான்.
579 நாதனா யுலக மெல்லா
நம்பிரானெனவு நின்ற
பாதனாம் பரம யோகி
பலபல திறத்தினாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்
பெருவேளூர் பேணினானை
ஓதநா வுடைய னாகி
யுரைக்குமாறுரைக்குற் றேனே.
4.060.2
தலைவனாய், உலகிலுள்ளார் எல்லாம் நம்முடைய பெருமான் என்று கூறுமாறு நிலைபெற்ற திருவடிகளை உடைய மேம்பட்ட யோகியாய், பலவகையாலும் ஒன்றோடொன்று ஒவ்வாப் பலவேடமும் தரித்துக் கொண்டு தோன்றுபவனாய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைத் தோத்திரிக்கும் நாவினை உடையேனாகிச் சான்றோர் உரைக்கும் வகையிலே உரைத்தலை உடையேன் நான்.
580 குறவிதோண் மணந்த செல்வக்
குமரவே டாதையென்றும்
நறவிள நறுமென் கூந்த
னங்கையோர்பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணினானை
உறவினால் வல்ல னாகி
யுணருமா றுணர்த்துவேனே.
4.060.3
குறத்தியாகிய வள்ளியின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரவேளுடைய தந்தையாராய், என்றும் மணமுள்ள கூவிளம் பூவை அணிந்த நறிய மெல்லிய கூந்தலை உடைய இளைய நங்கையாகிய பார்வதி பாகராய்ப் பிறவிப் பிணியைப் போக்குபவராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை அவரிடத்து அடியேன் கொண்ட உறவினால் உணர்ந்த வண்ணம் உணர்த்துவேன் நான்.
581 மைஞ்ஞவில் கண்டன் றன்னை
வலங்கையின்மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவின் மானி னோடுங்
கனலெரி யாடினானைப்
பிஞ்ஞகன் றன்னை யந்தண்
பெருவேளூர் பேணினானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
பொறியிலாவறிவி லேனே.
4.060.4
நஞ்சுண்ட கருமை படர்ந்த நீல கண்டனாய், வலக்கையில் ஒரு மழுவை ஏந்தி, இடக்கையிற் பொருந்திய மானோடு ஒளி வீசும் தீயிடை ஆடுபவனாய், தலைக்கோலம் அணிந்தவனாய், அழகிய பெருவேளூரில் விரும்பி உறையும் பெருமானைப் பொய்ம்மை நீங்க நினைக்க இயலேனாய் நினைதற்காம் நல்வினையும் அறிவும் இல்லாதவன் நான்.
582 ஓடைசேர் நெற்றி யானை
யுரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை
வேதநான் காயினானைப்
பேடைசேர் புறவ நீங்காப்
பெருவேளூர் பேணினானைக்
கூடநான் வல்ல மாற்றங்
குறுகுமா றறிகிலேனே.
4.060.5
நெற்றிப்பட்டம் அணிந்த யானைத் தோலைப் போர்த்தவராய், அடியார்களுக்கு வீடுபேறு வழங்குபவராய், நான்கு வேத வடிவினராய், பேடையொடு கூடிய புறாக்கள் நீங்காது உறையும் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைக் கூடவல்ல, உலகியலுக்கு மாறுபட்ட வழியாகிய இறை நெறியிலே சென்று அவனை நெருங்கும் முறையை அறியேன்.
583 கச்சைசேர் நாகத் தானைக்
கடல்விடங்கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்
கனலெரி யாடுவானைப்
பிச்சைசேர்ந் துழல்வினானைப்
பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானு
மிறைஞ்சுமாறிறைஞ்சு வேனே.
4.060.6
நாகத்தைக் கச்சாக அணிந்து; கடல் விடத்தைக் கழுத்தில் இருத்தி, காஞ்சியில் ஏகம்பத்தில் உறைபவராய், ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்துபவராய், பிச்சை எடுப்பதற்கு அலைபவராய், பெருவேளூரை விரும்பித் தங்கும் பெருமானை என் இச்சை நிறைவுற வழிபடும் வழியாலே வழிபடுவேன் நான்.
584 சித்தராய் வந்து தன்னைத்
திருவடி வணங்குவார்கள்
முத்தனை மூர்த்தி யாய
முதல்வனைமுழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப்
பெருவேளூர் பேணினானை
மெத்தநே யவனை நாளும்
விரும்புமாறறிகி லேனே.
4.060.7
ஞானிகளாய் வந்து தம் திருவடிகளை வணங்குபவர்களுக்கு முத்தியை வழங்குபவராய், ஞானமூர்த்தியாகிய முதல்வராய், எல்லா உலகமும் தாமேயாகிய பித்தராய், மற்றவர் யாவரும் தம்மைத் துதிக்குமாறு பெருவேளூரை விரும்பியமிக்க அன்புடைய பெருமானை நாளும் விரும்பும் திறத்தை அறியாதேன் நான்.
585 முண்டமே தாங்கி னானை
முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை
வளர்மதிக்கண்ணி யானைப்
பிண்டமே யாயி னானைப்
பெருவேளூர் பேணினானை
அண்டமா மாதி யானை
யறியுமா றறிகிலேனே.
4.060.8
தலைமாலையைப் பூண்டவராய், பூரண ஞானமுடையவராய், வண்டுகள் உலவும் கொன்றை மாலையையும் பிறையையும் முடிமாலையாக உடையவராய், என் உடலாகவும் உள்ளவராய்ப் பெருவேளூர்ப் பெருமானாய் எல்லா உலகங்களுமான முதற்கடவுளாய் உள்ள பெருமானை அறியும் வழியால் அறிய இயலாதேனாய் உள்ளேன் நான்.
586 விரிவிலா வறிவி னார்கள்
வேறொருசமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனு
மெம்பிராற்கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும்
வகையது நினைக்கின்றேனே.
4.060.9
விரிவடையாத சிற்றறிவுடையவர்கள் புதியதொரு சமயத்தை உண்டாக்கி வயிற்றெரிச்சலால் அச்சமயத்துக்குப் பிரசாரம் செய்தாராகிலும் அதுவும் பெருமானுக்கு ஏற்புடைய செயலேயாகும். பெரியோர்கள் அன்போடு துதிக்கும் பெருவேளூர்ப் பெருமானைப் பொருந்தி அடியேன் வாழ்த்திப் பிறவிப் பிணியிலிருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான்.
587 பொருகட லிலங்கை மன்ன
னுடல்கெடப்பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்
கதிரிளங்கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்
பெருவேளூர் பேணினானை
உருகிய வடிய ரேத்து
முள்ளத்தாலுள்கு வேனே.
4.060.10
அலைகள் மோதும் கடலிடை அமைந்த இலங்கை மன்னனாகிய இராவணனுடைய உடல் நசுங்குமாறு தம் கால்விரலை அழுத்தியவராய், நல்ல நீலகண்டராய், ஒளிவீசும் பிறையைச் சூடும்பரந்த சடையினராய்ப் பெரு வேளூரில் உள்ள பெருமானாரை மனம் உருகிய அடியவர்கள் போற்றும் உள்ளத்தை அடியேனும் பக்குவத்தால் பெற்று அப்பெருமானை விருப்புற்று நினைப்பேன் நான்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.