LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-3

3.003.திருப்புகலி 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2823 இயலிசை எனும்பொரு ளின்திறமாம்
புயல்அன மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உல கடிதொழ அமர்ந்தவனே
கலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதி
அருளினனே
3.003.1
இயற்றமிழ், இசைச்தமிழ், நாடகத்தமிழ் இவற்றில் கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற, கார்மேகம் போன்ற கருநிறக் கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே! கயல்மீன் போன்ற நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும் தொழும்படி வீற்றிருப்பவனே! உனக்கு அணிகலனாக அல்லது உண்கலனாக விளங்குவது மண்டையோடே ஆகும். நல்ல மணமுடைய பூஞ்சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வீற்றிருந்து இந்நிலவுலகத்தோர் நாடோறும் இன்புறும்படி நிறைந்த அபர ஞான, பர ஞானங்களை அடியேனுக்கு நீ அருளிச் செய்தாய். 
2824 நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்றோல்
அலைவரு மதகரி யுரித்தவனே இமையோர்கள்நின்
தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே
3.003.2
ஆரவாரித்துவரும் மதயானையின் வலிய தோலினை மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே! அழகிய சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து உன்திருவடிகளைத் தொழும் பொருட்டு உமாதேவியோடு நிலையாக வீற்றிருக்கின்றாய். எங்களால் நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை நீ நீக்கும் வண்ணம் இலைகளையும், மலர்களையும் கொண்டு உன் திருவடிகளை அர்ச்சித்து நாங்கள் வழிபடுவோம். 
2825 பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே
3.003.3
ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய வெண்பிறையைச் சடைமுடியில் சூடிய நின்மலனே! அரிய வேதங்களை இசையிலக்கண முறைப்படி, பாடியருளினாய்! முனிவரும் அவர்களின் பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில் திருநடனம் ஆடினாய்! மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தாய்! முழுமுதற்கடவுளான உன்னை அடியார்கள் தொழும்படி நீண்டமதில்கள் சூழ்ந்த திருப்புகலிநகரில் வீற்றிருந்து அருளினாய்! எங்கட்குத் தவநெறியினை அருள்வாயாக! சுந்தரர் இறைவனிடம் “தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே” என்று வேண்டியது இங்கு நினைவு கூரத்தக்கது. 
2826 நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
3.003.4
ஒளிவிளங்கும் மழுப்படையை ஏந்தியவனே! யானையின் தோலை நெருப்புப்போல் விளங்குகின்ற உனது சிவந்த திருமேனியில் அணிந்தவனே! திருவடியில் விளங்கும் வீரக் கழல்களும், சிலம்பும் ஒலிக்க, நல்ல முழவு முழங்கத் திருநடனம் புரிபவனே! சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலியில் அடியார்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கும் படி வீற்றிருந்தருளினாய். 
2827 கருமையின் ஒளிர்கடல் நஞ்சம்உண்ட
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே 
அரவேரிடை யாளொடும் அலைகடன் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப்
பொலிந்தவனே
3.003.5
பாற்கடலில் தோன்றிய கருநிற நஞ்சை உண்டு, உன் முழுமுதற் பண்பினை விளங்குமாறு செய்து உலகுயிர்களைப் பாதுகாத்தருளிய உன்னுடைய பெருமையை மண்ணுலகத்தோர் போற்றலாமே தவிர, மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு அரியவனாய் உள்ளவனே! அரவம் அன்ன இடையுடைய உமாதேவியோடு, அலைகளையுடைய கடல்வளம் பொருந்திய திருப்புகலியிலே, இப்பூவுலகில் நாள்தோறும் அறம், பொருள், இன்பம்,வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி நீ வீற்றிருந்தருளுகின்றாய். 
2828 அடையரி மாவொடு வேங்கையின்றோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே
3.003.6
சிங்கத்தின் தோலைப் போர்த்து, புலியின் தோலையும் உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே! படைக்கருவிகளைக் கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின் வலிமையை அழித்தவனே! இடபக் கொடியுடைய வேத நாயகனே! விகிர்தனே! எப்பொருட்கும் மேலானவனே! விண்ணோர்களும் தொழத் திருப்புகலியிலே உமாதேவியோடு வீற்றிருந்து உன் திரு வடிகளை வணங்கும் அனைவர்க்கும் அருள்புரிகின்றாய். 
2829 அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகல்அல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியா புனிதா புகர்ஏற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழல்ஏத்திட நண்ணகி 
லாவினையே
3.003.7
அடியவர்கள் தொழுதெழ, தேவர்கள் புகழ்ந்து வணங்க, அவர்களின் துன்பம்தரும் கொடியவினைகளைத் தீர்த்தருளும் எம் இறைவனே! உடுக்கை போன்ற இடையையும், அகன்ற அல்குலையும், தூய மொழிகளையுமுடைய உமாதேவியைத் திருநீறு அணிந்த தன் திருமார்பில் தழுவியவனே! புண்ணிய மூர்த்தியே! புனிதனே! இடபவாகனனே! திருப்புகலிநகரில் வீற்றிருக்கும் பெருமானே! உன் திருவடிகளை வணங்கிப் போற்றுபவர்களை வினைகள் வந்தடையா. 
2830 இரவொடு பகலதாம் எம்மான்உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே
3.003.8
இரவு, பகல் போன்ற கால தத்துவத்தை இயக்கும் எம்பெருமானே! வழி வழி அடிமையாக வந்த நான் உன்னை நினைந்து வணங்கி போற்றுதலில் தவறேன். குராமலர்களையும், விரிந்த நறுமணமுடைய கொன்றை மலர்களையும், பாம்பையும் சடைமுடியில் அணிந்து, எம்மை ஆண்டருளும் பெருமானே! ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களையும் அடர்ந்த நீ அன்னம் போன்ற மென்னடையுடைய உமாதேவியோடு திருப்புகலியில் எழுந்தருளியுள்ளாய். 
2831 உருகிட உவகைதந் துடலினுள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாய்இனி நீஎனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங் குறநல் கிடுமதிற் புகலிமனே
3.003.9
உள்ளமும், உடலும் உருக உன்னைப் போற்றும் அடியவர்கட்குச் சிவானந்தம் அளிக்கும் அமுதம் போன்ற இனிமை வாய்ந்தவனே! கடல் போன்ற நீலநிறமுடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அடிமுடி காணாதபடி நெருப்பு மலையாய், உன்னுடைய பெருகும் அருளென உயர்ந்து நின்றாய். மதில்களையுடைய திருப்புகலியில் வீற்றிருக்கும் இறைவனே! நீ என்னை உன் ஒளி பொருந்திய திருவடியிணைக்கீழ் விரும்பி வீற்றிருக்கும்படி 
2832 கையினில் உண்பவர் கணிகைநோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள்எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
3.003.10
கையில் உணவேற்று உண்ணும் சமணர்களும், கணபங்கவாதம் செய்யும் புத்தர்களும் தவமல்லாததைச் செய்யும் அற்பமதியினர். உண்மைப்பொருளாம் இறைவனை உணராமல் வெறும் உலகியலறங்களை மட்டுமே பேசுகின்ற அவர்களுடைய உரைகளைப் பொருளெனக் கொள்ளாது, மெய்ப்பொருளாம் சிவனையுணர்ந்த ஞானிகள் வந்து திருவடிகளைத் தொழ, விரும்பி அருள் புரிபவனே! வெண்ணிற எருதினை வாகனமாகக் கொண்டாய். விண்ணவர்களும் தொழ, திருப்புகலியில் உயர்ந்த அழகிய பெருங்கோயிலினுள் உமாதேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கின்றாய். 
2833 புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே
3.003.11
சிவபுண்ணியர்கள் வணங்குகின்ற திருப்புகலிப் பதியில், விண்ணவர்களும் தன் திருவடிகளைத் தொழும்படி விளங்கும் சிவபெருமானை, மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபடப் போற்றிய திருஞானசம்பந்தனின் அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள் எவ்வித இடர்களுமின்றித் தவநெறியில் நின்று, பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிச் சிவனுலகம் அடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.003.திருப்புகலி 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2823 இயலிசை எனும்பொரு ளின்திறமாம்புயல்அன மிடறுடைப் புண்ணியனேகயல்அன வரிநெடுங் கண்ணியொடும்அயல்உல கடிதொழ அமர்ந்தவனேகலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதிஅருளினனே3.003.1
இயற்றமிழ், இசைச்தமிழ், நாடகத்தமிழ் இவற்றில் கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற, கார்மேகம் போன்ற கருநிறக் கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே! கயல்மீன் போன்ற நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும் தொழும்படி வீற்றிருப்பவனே! உனக்கு அணிகலனாக அல்லது உண்கலனாக விளங்குவது மண்டையோடே ஆகும். நல்ல மணமுடைய பூஞ்சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வீற்றிருந்து இந்நிலவுலகத்தோர் நாடோறும் இன்புறும்படி நிறைந்த அபர ஞான, பர ஞானங்களை அடியேனுக்கு நீ அருளிச் செய்தாய். 

2824 நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்மலையினில் அரிவையை வெருவவன்றோல்அலைவரு மதகரி யுரித்தவனே இமையோர்கள்நின்தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலிஉமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே3.003.2
ஆரவாரித்துவரும் மதயானையின் வலிய தோலினை மலைமகளான உமாதேவி அஞ்சும்படி உரித்தவனே! அழகிய சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வானவர்களும் வந்து உன்திருவடிகளைத் தொழும் பொருட்டு உமாதேவியோடு நிலையாக வீற்றிருக்கின்றாய். எங்களால் நீக்குவதற்கரிய நிலைத்த துன்பங்களை நீ நீக்கும் வண்ணம் இலைகளையும், மலர்களையும் கொண்டு உன் திருவடிகளை அர்ச்சித்து நாங்கள் வழிபடுவோம். 

2825 பாடினை அருமறை வரன்முறையால்ஆடினை காணமுன் அருவனத்திற்சாடினை காலனைத் தயங்கொளிசேர்நீடுவெண் பிறைமுடி நின்மலனேநினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே3.003.3
ஒளி விளங்குகின்ற வளரும் தன்மையுடைய வெண்பிறையைச் சடைமுடியில் சூடிய நின்மலனே! அரிய வேதங்களை இசையிலக்கண முறைப்படி, பாடியருளினாய்! முனிவரும் அவர்களின் பத்தினிகளும் காணும்படி அரிய தாருகாவனத்தில் திருநடனம் ஆடினாய்! மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தாய்! முழுமுதற்கடவுளான உன்னை அடியார்கள் தொழும்படி நீண்டமதில்கள் சூழ்ந்த திருப்புகலிநகரில் வீற்றிருந்து அருளினாய்! எங்கட்குத் தவநெறியினை அருள்வாயாக! சுந்தரர் இறைவனிடம் “தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே” என்று வேண்டியது இங்கு நினைவு கூரத்தக்கது. 

2826 நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்அழல்திகழ் மேனியில் அணிந்தவனேகழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்லமுழவொடும் அருநடம் முயற்றினனேமுடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலிஅடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே3.003.4
ஒளிவிளங்கும் மழுப்படையை ஏந்தியவனே! யானையின் தோலை நெருப்புப்போல் விளங்குகின்ற உனது சிவந்த திருமேனியில் அணிந்தவனே! திருவடியில் விளங்கும் வீரக் கழல்களும், சிலம்பும் ஒலிக்க, நல்ல முழவு முழங்கத் திருநடனம் புரிபவனே! சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலியில் அடியார்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கும் படி வீற்றிருந்தருளினாய். 

2827 கருமையின் ஒளிர்கடல் நஞ்சம்உண்டஉரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்அருமையில் அளப்பரி தாயவனே அரவேரிடை யாளொடும் அலைகடன் மலிபுகலிப்பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப்பொலிந்தவனே3.003.5
பாற்கடலில் தோன்றிய கருநிற நஞ்சை உண்டு, உன் முழுமுதற் பண்பினை விளங்குமாறு செய்து உலகுயிர்களைப் பாதுகாத்தருளிய உன்னுடைய பெருமையை மண்ணுலகத்தோர் போற்றலாமே தவிர, மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு அரியவனாய் உள்ளவனே! அரவம் அன்ன இடையுடைய உமாதேவியோடு, அலைகளையுடைய கடல்வளம் பொருந்திய திருப்புகலியிலே, இப்பூவுலகில் நாள்தோறும் அறம், பொருள், இன்பம்,வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி நீ வீற்றிருந்தருளுகின்றாய். 

2828 அடையரி மாவொடு வேங்கையின்றோல்புடைபட அரைமிசைப் புனைந்தவனேபடையுடை நெடுமதிற் பரிசழித்தவிடையுடைக் கொடிமல்கு வேதியனேவிகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே3.003.6
சிங்கத்தின் தோலைப் போர்த்து, புலியின் தோலையும் உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே! படைக்கருவிகளைக் கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின் வலிமையை அழித்தவனே! இடபக் கொடியுடைய வேத நாயகனே! விகிர்தனே! எப்பொருட்கும் மேலானவனே! விண்ணோர்களும் தொழத் திருப்புகலியிலே உமாதேவியோடு வீற்றிருந்து உன் திரு வடிகளை வணங்கும் அனைவர்க்கும் அருள்புரிகின்றாய். 

2829 அடியவர் தொழுதெழ அமரரேத்தச்செடியவல் வினைபல தீர்ப்பவனேதுடியிடை அகல்அல்குல் தூமொழியைப்பொடியணி மார்புறப் புல்கினனேபுண்ணியா புனிதா புகர்ஏற்றினை புகலிந்நகர்நண்ணினாய் கழல்ஏத்திட நண்ணகி லாவினையே3.003.7
அடியவர்கள் தொழுதெழ, தேவர்கள் புகழ்ந்து வணங்க, அவர்களின் துன்பம்தரும் கொடியவினைகளைத் தீர்த்தருளும் எம் இறைவனே! உடுக்கை போன்ற இடையையும், அகன்ற அல்குலையும், தூய மொழிகளையுமுடைய உமாதேவியைத் திருநீறு அணிந்த தன் திருமார்பில் தழுவியவனே! புண்ணிய மூர்த்தியே! புனிதனே! இடபவாகனனே! திருப்புகலிநகரில் வீற்றிருக்கும் பெருமானே! உன் திருவடிகளை வணங்கிப் போற்றுபவர்களை வினைகள் வந்தடையா. 

2830 இரவொடு பகலதாம் எம்மான்உன்னைப்பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்தஅரவிரி சடைமுடி ஆண்டகையேஅனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னைஇனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே3.003.8
இரவு, பகல் போன்ற கால தத்துவத்தை இயக்கும் எம்பெருமானே! வழி வழி அடிமையாக வந்த நான் உன்னை நினைந்து வணங்கி போற்றுதலில் தவறேன். குராமலர்களையும், விரிந்த நறுமணமுடைய கொன்றை மலர்களையும், பாம்பையும் சடைமுடியில் அணிந்து, எம்மை ஆண்டருளும் பெருமானே! ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களையும் அடர்ந்த நீ அன்னம் போன்ற மென்னடையுடைய உமாதேவியோடு திருப்புகலியில் எழுந்தருளியுள்ளாய். 

2831 உருகிட உவகைதந் துடலினுள்ளால்பருகிடும் அமுதன பண்பினனேபொருகடல் வண்ணனும் பூவுளானும்பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்உயர்ந்தாய்இனி நீஎனை ஒண்மலரடி யிணைக்கீழ்வயந்தாங் குறநல் கிடுமதிற் புகலிமனே3.003.9
உள்ளமும், உடலும் உருக உன்னைப் போற்றும் அடியவர்கட்குச் சிவானந்தம் அளிக்கும் அமுதம் போன்ற இனிமை வாய்ந்தவனே! கடல் போன்ற நீலநிறமுடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அடிமுடி காணாதபடி நெருப்பு மலையாய், உன்னுடைய பெருகும் அருளென உயர்ந்து நின்றாய். மதில்களையுடைய திருப்புகலியில் வீற்றிருக்கும் இறைவனே! நீ என்னை உன் ஒளி பொருந்திய திருவடியிணைக்கீழ் விரும்பி வீற்றிருக்கும்படி 

2832 கையினில் உண்பவர் கணிகைநோன்பர்செய்வன தவமலாச் செதுமதியார்பொய்யவர் உரைகளைப் பொருள்எனாதமெய்யவர் அடிதொழ விரும்பினனேவியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலிஉயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே3.003.10
கையில் உணவேற்று உண்ணும் சமணர்களும், கணபங்கவாதம் செய்யும் புத்தர்களும் தவமல்லாததைச் செய்யும் அற்பமதியினர். உண்மைப்பொருளாம் இறைவனை உணராமல் வெறும் உலகியலறங்களை மட்டுமே பேசுகின்ற அவர்களுடைய உரைகளைப் பொருளெனக் கொள்ளாது, மெய்ப்பொருளாம் சிவனையுணர்ந்த ஞானிகள் வந்து திருவடிகளைத் தொழ, விரும்பி அருள் புரிபவனே! வெண்ணிற எருதினை வாகனமாகக் கொண்டாய். விண்ணவர்களும் தொழ, திருப்புகலியில் உயர்ந்த அழகிய பெருங்கோயிலினுள் உமாதேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கின்றாய். 

2833 புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்விண்ணவர் அடிதொழ விளங்கினானைநண்ணிய ஞானசம் பந்தன்வாய்மைபண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே3.003.11
சிவபுண்ணியர்கள் வணங்குகின்ற திருப்புகலிப் பதியில், விண்ணவர்களும் தன் திருவடிகளைத் தொழும்படி விளங்கும் சிவபெருமானை, மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபடப் போற்றிய திருஞானசம்பந்தனின் அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓதவல்லவர்கள் எவ்வித இடர்களுமின்றித் தவநெறியில் நின்று, பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிச் சிவனுலகம் அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.