LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-47

 

4.047.திருக்கயிலாயம் திருநேரிசை திருச்சிற்றம்பலம் இத்தலம் இமயமலையிலுள்ளது. சுவாமிபெயர் - கயிலாயநாதர். தேவியார் - பார்வதியம்மை. 456 கனகமா வயிர முந்துமாமணிக் கயிலை கண்டும்உனகனா யரக்க னோடியெடுத்தலு முமையா ளஞ்சஅனகனாய் நின்ற வீசனூன்றலு மலறி வீழ்ந்தான்மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.1)பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஒடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவமில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான். எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது.457 கதித்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிஅதிர்த்தவ னெடுத்தி டல்லுமரிவைதா னஞ்ச வீசன்நெதித்தவ னூன்றி யிட்டநிலையழிந் தலறி வீழ்ந்தான்மதித்திறை யூன்றி னானேன்    மறித்துநோக் கில்லை யன்றே..(4.047.2)மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில், பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான். பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.458 கறுத்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையைக் கையால்மறித்தலு மங்கை யஞ்சவானவ ரிறைவ னக்குநெறித்தொரு விரலா லூன்றநெடுவரை போல வீழ்ந்தான்மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.3)கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான். மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.459 கடுத்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிஎடுத்தலு மங்கை யஞ்சவிறையவ னிறையே நக்குநொடிப்பள விரலா லூன்றநோவது மலறி யிட்டான்மடித்திறை யூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.4)கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம்பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான். கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.460 கன்றித்தன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிவென்றித்தன் கைத்த லத்தாலெடுத்தலும் வெருவ மங்கைநன்றுத்தா னக்கு நாதனூன்றலு நகழ வீழ்ந்தான்மன்றித்தா னூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.5)வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான். அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.461 களித்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிநௌத்தவ னெடுத்தி டல்லுநேரிழை யஞ்ச நோக்கிவெளித்தவ னூன்றி யிட்டவெற்பினா லலறி வீழ்ந்தான்மளித்திறை யூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.6)செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நௌத்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த, இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான். விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.462 கருத்தனாய்க் கண்சி வந்துகயிலைநன் மலையைக் கையால்எருத்தனா யெடுத்த வாறேயேந்திழை யஞ்ச வீசன்திருத்தனாய் நின்ற தேவன்றிருவிர லூன்ற வீழ்ந்தான்வருத்துவா னூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.7)இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திருவிரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான். இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.463 கடியவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிவடிவுடை மங்கை யஞ்சவெடுத்தலு மருவ நோக்கிச்செடிபடத் திருவி ரல்லாலூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்வடிவுற வூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.8)கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான். விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.464 கரியத்தான் கண்சி வந்துகயிலைநன் மலையைப் பற்றிஇரியத்தா னெடுத்தி டல்லுமேந்திழை யஞ்ச வீசன்நெரியத்தா னூன்றா முன்னநிற்கிலா தலறி வீழ்ந்தான்மரியத்தா னூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.9)உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, ஈசன் இராவணன் உடல் நெரியுமாறுதன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான். அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.465 கற்றனன் கயிலை தன்னைக்காண்டலு மரக்க னோடிச்செற்றவ னெடுத்த வாறேசேயிழை யஞ்ச வீசன்உற்றிறை யூன்றா முன்னமுணர்வழி வகையால் வீழ்ந்தான்மற்றிறை யூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.10)சிவபெருமானுடைய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான். சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும்.திருச்சிற்றம்பலம்
4.047.திருக்கயிலாயம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் இமயமலையிலுள்ளது. 
சுவாமிபெயர் - கயிலாயநாதர். தேவியார் - பார்வதியம்மை. 
456 கனகமா வயிர முந்துமாமணிக் கயிலை கண்டும்உனகனா யரக்க னோடியெடுத்தலு முமையா ளஞ்சஅனகனாய் நின்ற வீசனூன்றலு மலறி வீழ்ந்தான்மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.1)பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஒடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவமில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான். எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது.
457 கதித்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிஅதிர்த்தவ னெடுத்தி டல்லுமரிவைதா னஞ்ச வீசன்நெதித்தவ னூன்றி யிட்டநிலையழிந் தலறி வீழ்ந்தான்மதித்திறை யூன்றி னானேன்    மறித்துநோக் கில்லை யன்றே..(4.047.2)மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில், பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான். பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
458 கறுத்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையைக் கையால்மறித்தலு மங்கை யஞ்சவானவ ரிறைவ னக்குநெறித்தொரு விரலா லூன்றநெடுவரை போல வீழ்ந்தான்மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.3)கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான். மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.
459 கடுத்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிஎடுத்தலு மங்கை யஞ்சவிறையவ னிறையே நக்குநொடிப்பள விரலா லூன்றநோவது மலறி யிட்டான்மடித்திறை யூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.4)கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம்பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான். கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
460 கன்றித்தன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிவென்றித்தன் கைத்த லத்தாலெடுத்தலும் வெருவ மங்கைநன்றுத்தா னக்கு நாதனூன்றலு நகழ வீழ்ந்தான்மன்றித்தா னூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.5)வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான். அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
461 களித்தவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிநௌத்தவ னெடுத்தி டல்லுநேரிழை யஞ்ச நோக்கிவெளித்தவ னூன்றி யிட்டவெற்பினா லலறி வீழ்ந்தான்மளித்திறை யூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.6)செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நௌத்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த, இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான். விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
462 கருத்தனாய்க் கண்சி வந்துகயிலைநன் மலையைக் கையால்எருத்தனா யெடுத்த வாறேயேந்திழை யஞ்ச வீசன்திருத்தனாய் நின்ற தேவன்றிருவிர லூன்ற வீழ்ந்தான்வருத்துவா னூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.7)இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திருவிரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான். இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
463 கடியவன் கண்சி வந்துகயிலைநன் மலையை யோடிவடிவுடை மங்கை யஞ்சவெடுத்தலு மருவ நோக்கிச்செடிபடத் திருவி ரல்லாலூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்வடிவுற வூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.8)கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான். விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.
464 கரியத்தான் கண்சி வந்துகயிலைநன் மலையைப் பற்றிஇரியத்தா னெடுத்தி டல்லுமேந்திழை யஞ்ச வீசன்நெரியத்தா னூன்றா முன்னநிற்கிலா தலறி வீழ்ந்தான்மரியத்தா னூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.9)உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, ஈசன் இராவணன் உடல் நெரியுமாறுதன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான். அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.465 கற்றனன் கயிலை தன்னைக்காண்டலு மரக்க னோடிச்செற்றவ னெடுத்த வாறேசேயிழை யஞ்ச வீசன்உற்றிறை யூன்றா முன்னமுணர்வழி வகையால் வீழ்ந்தான்மற்றிறை யூன்றி னானேன்மறித்துநோக் கில்லை யன்றே.(4.047.10)சிவபெருமானுடைய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான். சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும்.
திருச்சிற்றம்பலம்

 

 

4.047.திருக்கயிலாயம் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் இமயமலையிலுள்ளது. 

சுவாமிபெயர் - கயிலாயநாதர். 

தேவியார் - பார்வதியம்மை. 

 

 

456 கனகமா வயிர முந்து

மாமணிக் கயிலை கண்டும்

உனகனா யரக்க னோடி

யெடுத்தலு முமையா ளஞ்ச

அனகனாய் நின்ற வீச

னூன்றலு மலறி வீழ்ந்தான்

மனகனா யூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.1

 

  பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஒடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவமில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான். எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது.

 

 

457 கதித்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி

அதிர்த்தவ னெடுத்தி டல்லு

மரிவைதா னஞ்ச வீசன்

நெதித்தவ னூன்றி யிட்ட

நிலையழிந் தலறி வீழ்ந்தான்

மதித்திறை யூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே..

4.047.2

 

  மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில், பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான். பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

 

 

458 கறுத்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையைக் கையால்

மறித்தலு மங்கை யஞ்ச

வானவ ரிறைவ னக்கு

நெறித்தொரு விரலா லூன்ற

நெடுவரை போல வீழ்ந்தான்

மறித்திறை யூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.3

 

  கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான். மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.

 

 

459 கடுத்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி

எடுத்தலு மங்கை யஞ்ச

விறையவ னிறையே நக்கு

நொடிப்பள விரலா லூன்ற

நோவது மலறி யிட்டான்

மடித்திறை யூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.4

 

  கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம்பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான். கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

 

 

460 கன்றித்தன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி

வென்றித்தன் கைத்த லத்தா

லெடுத்தலும் வெருவ மங்கை

நன்றுத்தா னக்கு நாத

னூன்றலு நகழ வீழ்ந்தான்

மன்றித்தா னூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.5

 

  வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான். அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

 

 

461 களித்தவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி

நௌத்தவ னெடுத்தி டல்லு

நேரிழை யஞ்ச நோக்கி

வெளித்தவ னூன்றி யிட்ட

வெற்பினா லலறி வீழ்ந்தான்

மளித்திறை யூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.6

 

  செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நௌத்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த, இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான். விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

 

 

462 கருத்தனாய்க் கண்சி வந்து

கயிலைநன் மலையைக் கையால்

எருத்தனா யெடுத்த வாறே

யேந்திழை யஞ்ச வீசன்

திருத்தனாய் நின்ற தேவன்

றிருவிர லூன்ற வீழ்ந்தான்

வருத்துவா னூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.7

 

  இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திருவிரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான். இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

 

 

463 கடியவன் கண்சி வந்து

கயிலைநன் மலையை யோடி

வடிவுடை மங்கை யஞ்ச

வெடுத்தலு மருவ நோக்கிச்

செடிபடத் திருவி ரல்லா

லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்

வடிவுற வூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.8

 

  கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான். விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

 

 

464 கரியத்தான் கண்சி வந்து

கயிலைநன் மலையைப் பற்றி

இரியத்தா னெடுத்தி டல்லு

மேந்திழை யஞ்ச வீசன்

நெரியத்தா னூன்றா முன்ன

நிற்கிலா தலறி வீழ்ந்தான்

மரியத்தா னூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.9

 

  உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, ஈசன் இராவணன் உடல் நெரியுமாறுதன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான். அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

 

 

465 கற்றனன் கயிலை தன்னைக்

காண்டலு மரக்க னோடிச்

செற்றவ னெடுத்த வாறே

சேயிழை யஞ்ச வீசன்

உற்றிறை யூன்றா முன்ன

முணர்வழி வகையால் வீழ்ந்தான்

மற்றிறை யூன்றி னானேன்

மறித்துநோக் கில்லை யன்றே.

4.047.10

 

  சிவபெருமானுடைய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான். சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும்.

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.