LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-19

2.019.திருநெல்லிக்கா 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர். 
தேவியார் - மங்களநாயகியம்மை. 
1666 அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி 
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த 
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள் 
நிறத்தா நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 1
நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற் கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன். 
1667 பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும் 
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 2
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டைவாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.
1668 நலந்தா னவன்நான் முகன்தன் தலையைக் 
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் 
புலந்தான் புகழா லெரிவிண் புகழும் 
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 3
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப் பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன். 
1669 தலைதா னதுஏந் தியதம் மடிகள் 
கலைதான் திரிகா டிடம்நா டிடமா 
மலைதா னெடுத்தான் மதின்மூன் றுடைய 
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 4
நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன். 
1670 தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல் 
உவந்தான் சுறவேந் தனுரு வழியச் 
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில் 
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 5
நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறை மதியை உவந்து சூடியவன். மீனக்கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன். 
1671 வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி 
மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான் 
குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும் 
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019.6
நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன். 
1672 பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான் 
இறைதான் இறவாக் கயிலைம் மலையான் 
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி 
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019.7
நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம் பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன். 
1673 மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை 
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக் 
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை 
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 8
நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன். 
1674 தழல்தா மரையான் வையந்தா யவனும் 
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும் 
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும் 
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 9
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி அகியவற்றைக் காணமுயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளி வடிவினன். 
1675 கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை 
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன் 
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய 
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 10
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் ‘என் அத்தனே காப்பாற்று’ என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன். 
1676 புகரே துமிலா தபுத்தே ளுலகில் 
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை 
நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன 
பகர்வா ரவர்பா வமிலா தவரே. 2.019. 11
குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.019.திருநெல்லிக்கா 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர். தேவியார் - மங்களநாயகியம்மை. 

1666 அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள் நிறத்தா நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 1
நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற் கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன். 

1667 பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும் நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 2
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டைவாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.

1668 நலந்தா னவன்நான் முகன்தன் தலையைக் கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் புலந்தான் புகழா லெரிவிண் புகழும் நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 3
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப் பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன். 

1669 தலைதா னதுஏந் தியதம் மடிகள் கலைதான் திரிகா டிடம்நா டிடமா மலைதா னெடுத்தான் மதின்மூன் றுடைய நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 4
நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன். 

1670 தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல் உவந்தான் சுறவேந் தனுரு வழியச் சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில் நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 5
நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறை மதியை உவந்து சூடியவன். மீனக்கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன். 

1671 வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான் குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019.6
நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன். 

1672 பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான் இறைதான் இறவாக் கயிலைம் மலையான் மறைதான் புனலொண் மதிமல் குசென்னி நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019.7
நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம் பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன். 

1673 மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக் குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 8
நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன். 

1674 தழல்தா மரையான் வையந்தா யவனும் கழல்தான் முடிகா ணியநா ணொளிரும் அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 9
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி அகியவற்றைக் காணமுயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளி வடிவினன். 

1675 கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன் மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 2.019. 10
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் ‘என் அத்தனே காப்பாற்று’ என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன். 

1676 புகரே துமிலா தபுத்தே ளுலகில் நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன பகர்வா ரவர்பா வமிலா தவரே. 2.019. 11
குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.