|
||||||||
கந்தரப்பம் (kandarappam) |
||||||||
தேவையானவை:- பச்சரிசி - 2 கப் புழுங்கல் அரிசி - 1/4 கப் உளுந்து - 1/4 கப் கடலைப்பருப்பு - 1/8 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் வெல்லம் - 2 கப் தேங்காய் துருவியது - 1 கப் ஏலக்காய் - 4 . எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை:- 1.முதலில் பச்சரிசி.,புழுங்கல் அரிசி., உளுந்தம்பருப்பு., கடலைப்பருப்பு., வெந்தயம் எல்லாவற்றையும் நன்றாக ஊறவைக்கவும். 2.பிறகு நைசாக அரைத்து அதில் வெல்லம்., தேங்காய்துருவல்., ஏலக்காய் சேர்த்து இன்னும் 5 நிமிடம் அரைக்கவும். 3.பிறகு எண்ணெயைக் காயவைத்து ஒரு ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். அப்பம் உப்பி மேலே வரும்போது திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|