LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-20

2.020.திருஅழுந்தூர் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர். 
தேவியார் - சவுந்தராம்பிகையம்மை. 
1677 தொழுமா றுவல்லார் துயரதீ ரநினைந் 
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி 
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர் 
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 2.020.1
தொழும் வகையிலும், பிறவித்துயர் தீர நினைந்தெழும் வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய மறையவர் வழிபாடு செய்ய, ‘பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்’. 
1678 கடலே றியநஞ் சமுதுண் டவனே 
உடலே உயிரே உணர்வே யெழிலே 
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடமே வினையே. 2.020. 2
‘கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே’! எனத் தொழ, ‘பெருமானே! நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்’. 
1679 கழிகா டலனே கனலா டலினாய் 
பழிபா டிலனே யவையே பயிலும் 
அழிபா டிலராய் அழுந்தை மறையோர் 
வழிபா டுசெய்மா மடமன் னினையே. 2.020. 3
‘பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே! கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே’! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும் அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில், பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய். 
1680 வானே மலையே யெனமன் னுயிரே 
தானே தொழுவார் தொழுதாள் மணியே 
ஆனே சிவனே அழுந்தை யவரெம் 
மானே யெனமா மடமன் னினையே. 2.020. 4
அன்பர்கள் ‘வானே! மலையே!’ என்று கூற மன்னிய உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே’ எனப் போற்றப், ‘பெருமானே! நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்’. 
1681 அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் 
நிலையார் மறியுந் நிறைவெண் மழுவும் 
இலையார் படையும் மிவையேந் துசெல்வ 
நிலையா வதுகொள் கெனநீ நினையே. 2.020.5
அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில் ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு, உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ நினைக. 
1682 நறவார் தலையின் நயவா வுலகில் 
பிறவா தவனே பிணியில் லவனே 
அறையார் கழலாய் அழுந்தை மறையோர் 
மறவா தெழமா மடமன் னினையே. 2.020.6
அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே! நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில் வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் உள்ளாய். 
1683 தடுமாறு வல்லாய் தலைவா மதியம் 
சுடுமாறு வல்லாய் சுடரார் சடையில் 
அடுமாறு வல்லாய் அழுந்தை மறையோர் 
நெடுமா நகர்கை தொழநின் றனையே. 2.020. 7
உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே! தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும் படி செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அடவந்த கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய். 
1684 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு 
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் 
அரியாய் ஒளியாய் அழுந்தை மறையோர் 
வெரியார் தொழமா மடம்மே வினையே. 2.020.8
பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகின்றாய். 
1685 மணிநீள் முடியான் மலையை அரக்கன் 
தணியா தெடுத்தான் உடலம் நெரித்த 
அணியார் விரலாய் அழுந்தை மறையோர் 
பணிமா மடம்மன் னியிருந் தனையே. 2.020. 9
மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில் மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய். 
1686 முடியார் சடையாய் முனம்நா ளிருவர் 
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள் 
அடிமே லறியார் அழுந்தை மறையோர் 
படியால் தொழமா மடம்பற் றினையே. 2.020. 10
சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால் பிரமன், ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர் விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப்பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய். 
1687 அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர் 
பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள் 
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. 2.020. 11
எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன் திருச்சிற்றம்பலம் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும். 
திருச்சிற்றம்பலம்

2.020.திருஅழுந்தூர் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர். தேவியார் - சவுந்தராம்பிகையம்மை. 

1677 தொழுமா றுவல்லார் துயரதீ ரநினைந் தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 2.020.1
தொழும் வகையிலும், பிறவித்துயர் தீர நினைந்தெழும் வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய மறையவர் வழிபாடு செய்ய, ‘பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்’. 

1678 கடலே றியநஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே யெழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர்விடலே தொழமா மடமே வினையே. 2.020. 2
‘கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே’! எனத் தொழ, ‘பெருமானே! நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்’. 

1679 கழிகா டலனே கனலா டலினாய் பழிபா டிலனே யவையே பயிலும் அழிபா டிலராய் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடமன் னினையே. 2.020. 3
‘பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே! கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே’! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும் அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில், பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய். 

1680 வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடமன் னினையே. 2.020. 4
அன்பர்கள் ‘வானே! மலையே!’ என்று கூற மன்னிய உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே’ எனப் போற்றப், ‘பெருமானே! நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்’. 

1681 அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் நிலையார் மறியுந் நிறைவெண் மழுவும் இலையார் படையும் மிவையேந் துசெல்வ நிலையா வதுகொள் கெனநீ நினையே. 2.020.5
அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில் ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு, உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ நினைக. 

1682 நறவார் தலையின் நயவா வுலகில் பிறவா தவனே பிணியில் லவனே அறையார் கழலாய் அழுந்தை மறையோர் மறவா தெழமா மடமன் னினையே. 2.020.6
அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே! நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில் வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் உள்ளாய். 

1683 தடுமாறு வல்லாய் தலைவா மதியம் சுடுமாறு வல்லாய் சுடரார் சடையில் அடுமாறு வல்லாய் அழுந்தை மறையோர் நெடுமா நகர்கை தொழநின் றனையே. 2.020. 7
உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே! தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும் படி செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அடவந்த கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய். 

1684 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் அரியாய் ஒளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழமா மடம்மே வினையே. 2.020.8
பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகின்றாய். 

1685 மணிநீள் முடியான் மலையை அரக்கன் தணியா தெடுத்தான் உடலம் நெரித்த அணியார் விரலாய் அழுந்தை மறையோர் பணிமா மடம்மன் னியிருந் தனையே. 2.020. 9
மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில் மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய். 

1686 முடியார் சடையாய் முனம்நா ளிருவர் நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள் அடிமே லறியார் அழுந்தை மறையோர் படியால் தொழமா மடம்பற் றினையே. 2.020. 10
சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால் பிரமன், ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர் விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப்பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய். 

1687 அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர் பெருஞா னமுடைப் பெருமா னவனைத்திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள் உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. 2.020. 11
எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன் திருச்சிற்றம்பலம் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.