LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-21

2.021.திருக்கழிப்பாலை 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர். 
தேவியார் - வேதநாயகியம்மை. 
1688 புனலா டியபுன் சடையா யரணம் 
அனலா கவிழித் தவனே யழகார் 
கனலா டலினாய் கழிப்பா லையுளாய் 
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 2.021. 1
கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம். 
1689 துணையா கவொர்தூ வளமா தினையும் 
இணையா கவுகந் தவனே யிறைவா 
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய் 
இணையார் கழலேத் தஇடர் கெடுமே. 2.021. 2
தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக்கொண்டு மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும். 
1690 நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின் 
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய் 
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் 
அடியார்க் கடையா அவலம் அவையே. 2.021. 3
மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப் பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா. 
1691 எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ 
வளிகா யமென வெளிமன் னியதூ 
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க் 
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே. 2.021.4
அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே! நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப் படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர் பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! 
1692 நடநண் ணியொர்நா கமசைத் தவனே 
விடநண் ணியதூ மிடறா விகிர்தா 
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே 
உடல்நண் ணிவணங் குவனுன் னடியே 2.021.5
நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே! என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும். 
1693 பிறையார் சடையாய் பெரியாய் பெரிய 
மறையார் தருவாய் மையினா யுலகிற் 
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் 
இறையார் கழலேத் தஇடர் கெடுமே. 2.021. 6
பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப் பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும். 
1694 முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் 
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய் 
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க் 
கதிரும் வினையா யினஆ சறுமே. 2.021. 7
முதிர்ந்த சடைமுடியின் மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத்தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும். 
1695 எரியார் கணையால் எயிலெய் தவனே 
விரியார் தருவீழ் சடையாய் இரவிற் 
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் 
உரிதா கிவணங் குவனுன் னடியே. 2.021. 8
தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். 
1696 நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக் 
கனலா னவனே கழிப்பா லையுளாய் 
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க் 
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 2.021. 9
நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும் அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து எரித்தவனே! உன்னுடைய நீண்டதிருவடிகளையே தொழுது நினைவார்க்கு வினைகள் இல்லையாகும். 
1697 தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந் 
துவர்கொண் டனர்நுண் துகிலா டையரும் 
அவர்கொண் டனவிட் டடிகள் உறையும் 
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 2.021.10
தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத் தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும் பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும் புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும், உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம். 
1698 கழியார் பதிகா வலனைப் புகலிப் 
பழியா மறைஞா னசம்பந் தனசொல் 
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார் 
கெழியா ரிமையோ ரொடுகே டிலரே. 2.021. 11
உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப் பாலைத்தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர் வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.021.திருக்கழிப்பாலை 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர். தேவியார் - வேதநாயகியம்மை. 

1688 புனலா டியபுன் சடையா யரணம் அனலா கவிழித் தவனே யழகார் கனலா டலினாய் கழிப்பா லையுளாய் உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 2.021. 1
கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம். 

1689 துணையா கவொர்தூ வளமா தினையும் இணையா கவுகந் தவனே யிறைவா கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய் இணையார் கழலேத் தஇடர் கெடுமே. 2.021. 2
தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக்கொண்டு மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும். 

1690 நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின் முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய் கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் அடியார்க் கடையா அவலம் அவையே. 2.021. 3
மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப் பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா. 

1691 எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ வளிகா யமென வெளிமன் னியதூ ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க் களியாய் கழிப்பா லையமர்ந் தவனே. 2.021.4
அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே! நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப் படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர் பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! 

1692 நடநண் ணியொர்நா கமசைத் தவனே விடநண் ணியதூ மிடறா விகிர்தா கடல்நண் ணுகழிப் பதிகா வலனே உடல்நண் ணிவணங் குவனுன் னடியே 2.021.5
நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே! என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும். 

1693 பிறையார் சடையாய் பெரியாய் பெரிய மறையார் தருவாய் மையினா யுலகிற் கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் இறையார் கழலேத் தஇடர் கெடுமே. 2.021. 6
பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப் பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும். 

1694 முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய் எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க் கதிரும் வினையா யினஆ சறுமே. 2.021. 7
முதிர்ந்த சடைமுடியின் மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத்தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும். 

1695 எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடியே. 2.021. 8
தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன். 

1696 நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக் கனலா னவனே கழிப்பா லையுளாய் உனவார் கழலே தொழுதுன் னுமவர்க் கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 2.021. 9
நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும் அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து எரித்தவனே! உன்னுடைய நீண்டதிருவடிகளையே தொழுது நினைவார்க்கு வினைகள் இல்லையாகும். 

1697 தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந் துவர்கொண் டனர்நுண் துகிலா டையரும் அவர்கொண் டனவிட் டடிகள் உறையும் உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 2.021.10
தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத் தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும் பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும் புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும், உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம். 

1698 கழியார் பதிகா வலனைப் புகலிப் பழியா மறைஞா னசம்பந் தனசொல் வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார் கெழியா ரிமையோ ரொடுகே டிலரே. 2.021. 11
உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப் பாலைத்தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர் வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.