LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-22

2.022.திருக்குடவாயில் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோணேசுவரர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
1699 திகழுந் திருமா லொடுநான் முகனும் 
புகழும் பெருமான் அடியார் புகல 
மகிழும் பெருமான் குடவாயின் மன்னி 
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 1
குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும் திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும், அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான். 
1700 ஓடுந் நதியும் மதியோ டுரகம் 
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
குழகன் குடவா யில்தனில் 
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 2
குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும், பிறைமதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான தனது கொடியில் விடை இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம் உடையவன். 
1701 கலையான் மறையான் கனலேந் துகையான் 
மலையா ளவள்பா கம்மகிழ்ந்த பிரான் 
கொலையார் சிலையான் குடவா யில்தனில் 
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022.3
குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணைபுரிய, கொலைத் தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன். 
1702 சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா 
நலமென் முலையாள் நகைசெய் யநடம் 
குலவுங் குழகன் குடவா யில்தனில் 
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 4
குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச் சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு நடம்புரியும் இளையோன். 
1703 என்றன் உளமே வியிருந் தபிரான் 
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் 
குன்றன் குழகன் குடவா யில்தனில் 
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 5
குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய் நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய மலையில் உறைபவன். 
1704 அலைசேர் புனலன் அனலன் அமலன் 
தலைசேர் பலியன் சதுரன் விதிரும் 
கொலைசேர் படையன் குடவா யில்தனில் 
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 6
குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல் ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்: நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன். 
1705 அறையார் கழலன் அழலன் இயலின் 
பறையாழ் முழவும் மறைபா டநடம் 
குறையா அழகன் குடவா யில்தனில் 
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 7
குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங் கோயிலில் விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்தவன்: அழல் ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும் அழகன். 
1706 வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ் 
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் 
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும் 
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.022. 8
மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயிலில் நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத் தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான். 
1707 பொன்னொப் பவனும் புயலொப் பவனும் 
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில் 
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.022. 9
குடவாயிலில் நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல் நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல படைக்கலன்களை ஏந்தியவன். 
1708 வெயிலின் நிலையார் விரிபோர் வையினார் 
பயிலும் முரையே பகர்பா விகள்பால் 
குயிலன் குழகன் குடவா யில்தனில் 
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 2.022. 10
குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய சமணர்கள், விரித்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்; இளமையான தோற்றத்தை உடையவன். 
1709 கடுவாய் மலிநீர் குடவா யில்தனில் 
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத் 
தடமார் புகலித் தமிழார் விரகன் 
வடவார் தமிழ்வல் லவர்நல் லவரே. 2.022. 11
வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய குடவாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை, நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியின னாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர். 
திருச்சிற்றம்பலம்

2.022.திருக்குடவாயில் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோணேசுவரர். தேவியார் - பெரியநாயகியம்மை. 

1699 திகழுந் திருமா லொடுநான் முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவாயின் மன்னி நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 1
குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், எல்லோராலும் அறியப்பெறும் திருமால், பிரமன் ஆகியோரால் புகழ்ந்து போற்றப்படும் தலைவனும், அடியவர்கள் தன்னைத் துதித்துப் போற்ற மகிழும் பெருமானும் ஆவான். 

1700 ஓடுந் நதியும் மதியோ டுரகம் சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்குழகன் குடவா யில்தனில் நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 2
குடவாயிலில் நீடி விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் பெருகி ஓடி வந்த கங்கையையும், பிறைமதியையும், பாம்பையும் சூடிய சடையை உடையவன். பழமையான தனது கொடியில் விடை இலச்சினை பொருந்தியவன். இளமைத் தோற்றம் உடையவன். 

1701 கலையான் மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கம்மகிழ்ந்த பிரான் கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022.3
குடவாயில் என்னும் தலத்தில் நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், பீதாம்பர ஆடையணிந்த திருமால், வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும், கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும், அறக்கருணைபுரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணைபுரிய, கொலைத் தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும் விளங்குபவன். 

1702 சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா நலமென் முலையாள் நகைசெய் யநடம் குலவுங் குழகன் குடவா யில்தனில் நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 4
குடவாயிலில் விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான், சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன், அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழச் சுடுகாட்டை ஆடுகளமாகக்கொண்டு நடம்புரியும் இளையோன். 

1703 என்றன் உளமே வியிருந் தபிரான் கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் குன்றன் குழகன் குடவா யில்தனில் நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 5
குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய் நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான், என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான். ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினன். கயிலாய மலையில் உறைபவன். 

1704 அலைசேர் புனலன் அனலன் அமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிரும் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 6
குடவாயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவன்: அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன்: அனல் ஏந்தியவன்: தலையோட்டில் பலி பெறுபவன்: சதுரப்பாடு உடையவன்: நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன். 

1705 அறையார் கழலன் அழலன் இயலின் பறையாழ் முழவும் மறைபா டநடம் குறையா அழகன் குடவா யில்தனில் நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.022. 7
குடவாயிலில் நிறைவாக அமைந்த பெருங் கோயிலில் விளங்கும் இறைவன், ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்தவன்: அழல் ஏந்தியவன்: இசைமரபுடன் கூடிய பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும் அழகன். 

1706 வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ் வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும் வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.022. 8
மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயிலில் நிலைபெற்ற கயிலைமலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன், மலை போன்று திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு அவன் பெயர்த்த கயிலைமலை அவன்மீது அழுந்திப் பொருந்தத் தன் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவான். 

1707 பொன்னொப் பவனும் புயலொப் பவனும் தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்கொன்னற் படையான் குடவா யில்தனில் மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.022. 9
குடவாயிலில் நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான், பொன்னிறத்தினனாகிய பிரமனும், புயல் நிறத்தினனாகிய திருமாலும் தனக்கு உவமையாகாதவனாய்த் தழலுருவில் உயர்ந்து தோன்றியவன், கொல்லும் தொழில் புரியும் நல்ல படைக்கலன்களை ஏந்தியவன். 

1708 வெயிலின் நிலையார் விரிபோர் வையினார் பயிலும் முரையே பகர்பா விகள்பால் குயிலன் குழகன் குடவா யில்தனில் உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 2.022. 10
குடவாயிலில் உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன், வெயிலில் காய்பவராகிய சமணர்கள், விரித்துப் போர்த்த போர்வையினராகிய புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும் பாவிகள்பால் பதியாதவன்; இளமையான தோற்றத்தை உடையவன். 

1709 கடுவாய் மலிநீர் குடவா யில்தனில் நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத் தடமார் புகலித் தமிழார் விரகன் வடவார் தமிழ்வல் லவர்நல் லவரே. 2.022. 11
வேகம் வாய்ந்த ஆற்றுநீரின் வளம் உடைய குடவாயில் நகரில் விளங்கும் நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை, நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியின னாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.