LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-23

2.023.திருவானைக்கா 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சம்புகேசுவரர். 
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை. 
1710 மழையார் மிடறா மழுவா ளுடையாய் 
உழையார் கரவா உமையாள் கணவா 
விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம் 
அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 2.023. 1
நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், “மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக் கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி”, என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள். 
1711 கொலையார் கரியின் உரிமூ டியனே 
மலையார் சிலையா வளைவித் தவனே 
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் 
நிலையா அருளா யெனுநே ரிழையே. 2.023. 2
அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், ‘கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்’ எனக் கூறுகின்றாள். 
1712 காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய் 
பாலோ டுநெய் யாடிய பால்வணனே 
வேலா டுகையா யெம்வெணா வலுளாய் 
ஆலார் நிழலா யெனுமா யிழையே. 2.023.3
என் ஆயிழையாள், ‘காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல் ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே! என்று பலவாறு கூறிகின்றாள். அருள்புரி. 
1713 சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் 
உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே
விறன்மிக் ககரிக் கருள்செய் தவனே 
அறமிக் கதுவென் னுமென் ஆயிழையே. 2.023. 4
என் ஆயிழையாள், ‘மீன் கொடியை உடைய மன்மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமை மிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது’ என்று கூறுவாள். 
1714 செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் 
அங்கட் கருணை பெரிதா யவனே 
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் 
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 2.023.5
ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், ‘செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழமன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!’ என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள். 
1715 குன்றே யமர்வாய் கொலையார் புலியின் 
தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளாய் 
நின்றா யருளா யெனும்நே ரிழையே. 2.023. 6
தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், “கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்!” என்று அரற்றுகின்றாள். 
1716 மலையன் றெடுத்த அரக்கன் முடிதோள் 
தொலையவ் விரலூன் றியதூ மழுவா 
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் 
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 2.023. 8
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், ‘கயிலைமலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய்’ என்று கூறுகிறாள். 
1717 திருவார் தருநா ரணன்நான் முகனும் 
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம் 
அரவா எனும்ஆ யிழையா ளவளே. 2.023. 9
ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், ‘திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே! என்று கூறுகின்றாள். 
1718 புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் 
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார் 
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய் 
அத்தா அருளாய் எனும் ஆயிழையே. 2.023.10
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் ‘புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்’! என்று கூறுவாள். 
1719 வெண்நா வலமர்ந் துறைவே தியனைக் 
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன் 
பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார் 
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. 2.023. 11
வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.023.திருவானைக்கா 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சம்புகேசுவரர். தேவியார் - அகிலாண்டநாயகியம்மை. 

1710 மழையார் மிடறா மழுவா ளுடையாய் உழையார் கரவா உமையாள் கணவா விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம் அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 2.023. 1
நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், “மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக் கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி”, என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள். 

1711 கொலையார் கரியின் உரிமூ டியனே மலையார் சிலையா வளைவித் தவனே விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் நிலையா அருளா யெனுநே ரிழையே. 2.023. 2
அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், ‘கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள்’ எனக் கூறுகின்றாள். 

1712 காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய் பாலோ டுநெய் யாடிய பால்வணனே வேலா டுகையா யெம்வெணா வலுளாய் ஆலார் நிழலா யெனுமா யிழையே. 2.023.3
என் ஆயிழையாள், ‘காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல் ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே! என்று பலவாறு கூறிகின்றாள். அருள்புரி. 

1713 சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் உறநெற் றிவிழித் தஎம் உத் தமனேவிறன்மிக் ககரிக் கருள்செய் தவனே அறமிக் கதுவென் னுமென் ஆயிழையே. 2.023. 4
என் ஆயிழையாள், ‘மீன் கொடியை உடைய மன்மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமை மிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது’ என்று கூறுவாள். 

1714 செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 2.023.5
ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், ‘செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழமன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே!’ என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள். 

1715 குன்றே யமர்வாய் கொலையார் புலியின் தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய்வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளாய் நின்றா யருளா யெனும்நே ரிழையே. 2.023. 6
தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், “கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்!” என்று அரற்றுகின்றாள். 

1716 மலையன் றெடுத்த அரக்கன் முடிதோள் தொலையவ் விரலூன் றியதூ மழுவா விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 2.023. 8
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், ‘கயிலைமலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய்’ என்று கூறுகிறாள். 

1717 திருவார் தருநா ரணன்நான் முகனும் மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம் அரவா எனும்ஆ யிழையா ளவளே. 2.023. 9
ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், ‘திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே! என்று கூறுகின்றாள். 

1718 புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார் மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய் அத்தா அருளாய் எனும் ஆயிழையே. 2.023.10
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் ‘புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்’! என்று கூறுவாள். 

1719 வெண்நா வலமர்ந் துறைவே தியனைக் கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன் பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார் விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. 2.023. 11
வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.