LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-24

2.024.திருநாகேச்சரம் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர். 
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை. 
1720 பொன்நேர் தருமே னியனே புரியும் 
மின்நேர் சடையாய் விரைகா விரியின் 
நன்னீர் வயநா கேச்சுர நகரின் 
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. 2.024.1
பொன்னை யொத்த மேனியனே, வளைத்துக் கட்டப்பட்ட மின்னல் போன்ற சடையினை உடையவனே, மணத்துடன் வரும் காவிரி நதியின் நல்ல நீரால் வளம் பெறும் வயல்களை உடைய நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் மன்னவனே என்று ஏத்த, வலிய வினைகள் அழிந்து கெடும். 
1721 சிறவார் புரமூன் றெரியச் சிலையில் 
உறவார் கணையுய்த் தவனே உயரும் 
நறவார் பொழில்நா கேச்சுர நகருள் 
அறவா எனவல் வினையா சறுமே. 2.024. 2
சிறவாதவராகிய அசுரர்களின் முப்புரங்கள் எரியுமாறு வில்லிற் பொருந்திய நீண்ட கணையைச் செலுத்தியவனே, உயர்ந்த தேன் பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சுரக் கோயிலில் விளங்கும் அறவடிவினனே! என்று கூறி ஏத்த, வலிய வினைக்குற்றங்கள் அழிந்து கெடும். 
1722 கல்லால் நிழல்மே யவனே கரும்பின் 
வில்லான் எழில்வே வவிழித் தவனே 
நல்லார் தொழுநா கேச்சுர நகரில் 
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. 2.024. 3
கல்லால மரநிழலில் எழுந்தருளியவனே, கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் அழகிய உடல் வேகுமாறு விழித்தவனே, நல்லவர்களால் வணங்கப்பெறும் நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் செல்வனே என்று கூறி ஏத்த வலிய வினைகள் தேய்ந்து கெடும். 
1723 நகுவான் மதியோ டரவும் புனலும் 
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சுர நகருள் 
பகவா எனவல் வினைபற் றறுமே. 2.024. 4
விளங்குகின்ற வானத்தில் ஊரும் திங்கள், பாம்பு, கங்கை ஆகியன பொருந்திய தக்க நீண்ட சடையை உடையவனே, 107 முல்லை மலர்கள் விளங்கும் நீண்ட பொழில்கள் சூழ்ந்த நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் பெருமானே என்று கூறி ஏத்த வலிய வினைகளின் தொடக்கு அறும். 
1724 கலைமான் மறியுங் கனலும் மழுவும் 
நிலையா கியகை யினனே நிகழும் 
நலமா கியநா கேச்சுர நகருள் 
தலைவா எனவல் வினை தா னறுமே. 5 2.024.d
மான்கன்று, அழல், மழு ஆகியன நிலையாக விளங்கும் கைகளை உடையவனே, நன்மை விளையும் தலமாகிய நாகேச்சுரக் கோயிலில் விளங்கும் தலைவனே! என்று கூறி ஏத்த வலியவினைகள் கெடும். 
1725 குரையார் கழலா டநடங் குலவி 
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே 
நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம் 
அரைசே யெனநீங் குமருந் துயரே. 2.024. 6
மலைமகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, கால்களில் ஒலிக்கின்ற வீரக்கழல்கள் ஆடநடனம் ஆடி மகிழ்பவனே, வெண்ணிறமான விடையின்மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் அரசனே! என்று கூறி ஏத்த, நீங்குதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும். 
1726 முடையார் தருவெண் டலைகொண் டுலகில் 
கடையார் பலி கொண் டுழல்கா ரணனே 
நடையார் தருநா கேச்சுர நகருள் 
சடையாவென வல்வினை தானறுமே. 2.024. 7
முடை நாற்றம் பொருந்திய வெள்ளிய தலையோட்டை ஏந்தி உலகில் பலர் வீட்டு வாயில்களிலும் பலி கொண்டு உழலும் உலகக் காரணனே, நாகேச்சுரக் கோயிலுள் எழுந்தருளிய சடையனே! என்று கூறி ஏத்த, வலிய வினைகள் கெடும். 
1727 ஓயா தவரக் கனொடிந் தலற 
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே 
வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத் 
தாயே யெனவல் வினைதா னறுமே. 2.024. 8
தன் வலிமையால் இடைவிடாது போர்புரியும் இராவணன் மனம் உடைந்து அலற நீ அவனுக்கு அரிய அருளைச் செய்து மனம் இளகுதலாகிய உன் நடை முறையைக் காட்டியவன், என்று உன்னைப் பலரும் வாயார வாழ்த்துவர். நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவனே! என உன்னை நினைந்து போற்றுவார் வலிய வினைகள் கெடும். 
1728 நெடியா னொடுநான் முகன்நே டலுறச் 
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே 
நடுமா வயல்நா கேச்சுர நகரே 
இடமா வுறைவா யெனஇன் புறுமே. 2.024.9
திருமாலும், பிரமனும் அடிமுடி தேடலை மேற்கொள்ளச் சுடுகின்ற பெரிய தீப்பிழம்பாய் எழுந்து நின்ற ஒளி வடிவினனே, நாற்று நடத்தக்க பெரிய வயல்களைக் கொண்டுள்ள நாகேச்சுரத்துக் கோயிலை உனக்குரிய கோயிலாகக் கொண்டு உறைபவனே என்று போற்ற அவன் இன்புறுவான். 
1729 மலம்பா வியகை யொடுமண் டையதுண் 
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில் 
நலம்பா வியநா கேச்சுர நகருள் 
சிலம்பா வெனத்தீ வினைதேய்ந் தறுமே. 10 2.024.d
அழுக்கேறிய கையினராய் உணவுகொள்ள மண்டை முதலான உண்கலங்களைப் பயன்படுத்தும் சமண, புத்தர்களின் பொய்மொழிகளை விடுத்து, உலகின்கண் நன்மைகள் வளர நாகேச்சுரக்கோயிலுள் எழுந்தருளிய கயிலை மலையானே! எனப் போற்றுவார் தீவினைகள் தேய்ந்து கெடும். 
1730 கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன் 
தலமார் தருசெந் தமிழின் விரகன் 
நலமார் தருநா கேச்சுரத் தரனைச் 
சொலமா லைகள்சொல் லநிலா வினையே. 11 2.024.d
மரக்கலங்கள் பல நிறைந்த கடல் சூழ்ந்த தலங்களில் சிறந்த காழிப்பதிக்குத் தலைவனும் செந்தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தன் நன்மைகள் நிறைந்த நாகேச்சுரத்து அரனைப் போற்றிச் சொன்ன பாமாலைகளாகிய இப்பதிகத்தை இசையுடன் ஓத வினைகள் நில்லா. 
திருச்சிற்றம்பலம்

2.024.திருநாகேச்சரம் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர். தேவியார் - குன்றமுலைநாயகியம்மை. 

1720 பொன்நேர் தருமே னியனே புரியும் மின்நேர் சடையாய் விரைகா விரியின் நன்னீர் வயநா கேச்சுர நகரின் மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. 2.024.1
பொன்னை யொத்த மேனியனே, வளைத்துக் கட்டப்பட்ட மின்னல் போன்ற சடையினை உடையவனே, மணத்துடன் வரும் காவிரி நதியின் நல்ல நீரால் வளம் பெறும் வயல்களை உடைய நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் மன்னவனே என்று ஏத்த, வலிய வினைகள் அழிந்து கெடும். 

1721 சிறவார் புரமூன் றெரியச் சிலையில் உறவார் கணையுய்த் தவனே உயரும் நறவார் பொழில்நா கேச்சுர நகருள் அறவா எனவல் வினையா சறுமே. 2.024. 2
சிறவாதவராகிய அசுரர்களின் முப்புரங்கள் எரியுமாறு வில்லிற் பொருந்திய நீண்ட கணையைச் செலுத்தியவனே, உயர்ந்த தேன் பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சுரக் கோயிலில் விளங்கும் அறவடிவினனே! என்று கூறி ஏத்த, வலிய வினைக்குற்றங்கள் அழிந்து கெடும். 

1722 கல்லால் நிழல்மே யவனே கரும்பின் வில்லான் எழில்வே வவிழித் தவனே நல்லார் தொழுநா கேச்சுர நகரில் செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. 2.024. 3
கல்லால மரநிழலில் எழுந்தருளியவனே, கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் அழகிய உடல் வேகுமாறு விழித்தவனே, நல்லவர்களால் வணங்கப்பெறும் நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் செல்வனே என்று கூறி ஏத்த வலிய வினைகள் தேய்ந்து கெடும். 

1723 நகுவான் மதியோ டரவும் புனலும் தகுவார் சடையின் முடியாய் தளவம்நகுவார் பொழில்நா கேச்சுர நகருள் பகவா எனவல் வினைபற் றறுமே. 2.024. 4
விளங்குகின்ற வானத்தில் ஊரும் திங்கள், பாம்பு, கங்கை ஆகியன பொருந்திய தக்க நீண்ட சடையை உடையவனே, 107 முல்லை மலர்கள் விளங்கும் நீண்ட பொழில்கள் சூழ்ந்த நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் பெருமானே என்று கூறி ஏத்த வலிய வினைகளின் தொடக்கு அறும். 

1724 கலைமான் மறியுங் கனலும் மழுவும் நிலையா கியகை யினனே நிகழும் நலமா கியநா கேச்சுர நகருள் தலைவா எனவல் வினை தா னறுமே. 5 2.024.d
மான்கன்று, அழல், மழு ஆகியன நிலையாக விளங்கும் கைகளை உடையவனே, நன்மை விளையும் தலமாகிய நாகேச்சுரக் கோயிலில் விளங்கும் தலைவனே! என்று கூறி ஏத்த வலியவினைகள் கெடும். 

1725 குரையார் கழலா டநடங் குலவி வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம் அரைசே யெனநீங் குமருந் துயரே. 2.024. 6
மலைமகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, கால்களில் ஒலிக்கின்ற வீரக்கழல்கள் ஆடநடனம் ஆடி மகிழ்பவனே, வெண்ணிறமான விடையின்மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் அரசனே! என்று கூறி ஏத்த, நீங்குதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும். 

1726 முடையார் தருவெண் டலைகொண் டுலகில் கடையார் பலி கொண் டுழல்கா ரணனே நடையார் தருநா கேச்சுர நகருள் சடையாவென வல்வினை தானறுமே. 2.024. 7
முடை நாற்றம் பொருந்திய வெள்ளிய தலையோட்டை ஏந்தி உலகில் பலர் வீட்டு வாயில்களிலும் பலி கொண்டு உழலும் உலகக் காரணனே, நாகேச்சுரக் கோயிலுள் எழுந்தருளிய சடையனே! என்று கூறி ஏத்த, வலிய வினைகள் கெடும். 

1727 ஓயா தவரக் கனொடிந் தலற நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத் தாயே யெனவல் வினைதா னறுமே. 2.024. 8
தன் வலிமையால் இடைவிடாது போர்புரியும் இராவணன் மனம் உடைந்து அலற நீ அவனுக்கு அரிய அருளைச் செய்து மனம் இளகுதலாகிய உன் நடை முறையைக் காட்டியவன், என்று உன்னைப் பலரும் வாயார வாழ்த்துவர். நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவனே! என உன்னை நினைந்து போற்றுவார் வலிய வினைகள் கெடும். 

1728 நெடியா னொடுநான் முகன்நே டலுறச் சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே நடுமா வயல்நா கேச்சுர நகரே இடமா வுறைவா யெனஇன் புறுமே. 2.024.9
திருமாலும், பிரமனும் அடிமுடி தேடலை மேற்கொள்ளச் சுடுகின்ற பெரிய தீப்பிழம்பாய் எழுந்து நின்ற ஒளி வடிவினனே, நாற்று நடத்தக்க பெரிய வயல்களைக் கொண்டுள்ள நாகேச்சுரத்துக் கோயிலை உனக்குரிய கோயிலாகக் கொண்டு உறைபவனே என்று போற்ற அவன் இன்புறுவான். 

1729 மலம்பா வியகை யொடுமண் டையதுண் கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில் நலம்பா வியநா கேச்சுர நகருள் சிலம்பா வெனத்தீ வினைதேய்ந் தறுமே. 10 2.024.d
அழுக்கேறிய கையினராய் உணவுகொள்ள மண்டை முதலான உண்கலங்களைப் பயன்படுத்தும் சமண, புத்தர்களின் பொய்மொழிகளை விடுத்து, உலகின்கண் நன்மைகள் வளர நாகேச்சுரக்கோயிலுள் எழுந்தருளிய கயிலை மலையானே! எனப் போற்றுவார் தீவினைகள் தேய்ந்து கெடும். 

1730 கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன் தலமார் தருசெந் தமிழின் விரகன் நலமார் தருநா கேச்சுரத் தரனைச் சொலமா லைகள்சொல் லநிலா வினையே. 11 2.024.d
மரக்கலங்கள் பல நிறைந்த கடல் சூழ்ந்த தலங்களில் சிறந்த காழிப்பதிக்குத் தலைவனும் செந்தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தன் நன்மைகள் நிறைந்த நாகேச்சுரத்து அரனைப் போற்றிச் சொன்ன பாமாலைகளாகிய இப்பதிகத்தை இசையுடன் ஓத வினைகள் நில்லா. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.