LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-25

2.025.திருப்புகலி 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
1731 உகலி யாழ்கட லோங்கு பாருளீர் 
அகலி யாவினை யல்லல் போயறும் 
இகலி யார்புர மெய்த வன்னுறை 
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 2.025. 1
“தாவிச்செல்லும் அலைகளை உடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட உலகின்கண் வாழ்பவர்களே, தன்னோடு மாறுபட்ட அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சிவபிரான் உறையும் புகலி என்ப்பெயர் பெற்ற சீகாழிப்பதியைப் போற்றி வழிபடுங்கள்”. வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போகும். 
1732 பண்ணி யாள்வதோ ரேற்றர் பான்மதிக் 
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப் 
புண்ணி யன்னுறை யும்பு கலியை 
நண்ணு மின்னல மான வேண்டிலே. 2.025. 2
நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின், அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால் போன்ற வெண்மையான பிறை மதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும் கொன்றை மாலைசேர்ந்த முடியினனும் ஆகிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து வழிபடுங்கள். 
1733 வீசு மின்புரை காதன் மேதகு 
பாச வல்வினை தீர்த்த பண்பினன் 
பூசு நீற்றினன் பூம்பு கலியைப் 
பேசு மின்பெரி தின்ப மாகவே. 2.025.3
இன்பம் பெரிதாக விளையவேண்டின், ஒளிவீசும் மின்னல் போன்ற அணிபூண்ட காதினனும், பற்றுக்கள், வலிய வினைகள் ஆகியவற்றைப் போக்கிய மேதகு பண்பினனும், திருநீறு பூசியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய புகலிப்பதியை அடைந்து அவனைப்புகழ்ந்து பேசுங்கள். 
1734 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன் 
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன் 
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள் 
அடிக ளையடைந் தன்பு செய்யுமே. 2.025. 4
மணம் கமழும் வில்வம், ஊமத்தைமலர் ஆகியவற்றை முடிமிசைச் சூடியவனும், பெரிதான இவ் வுலகில் உள்ளோர் புகழ்ந்து போற்றும் தன்மையாளனும், திருநீற்றுப்பொடி பூசிய மேனியனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை அடைந்து அங்கு மேவிய பெருமானிடம் அன்பு செய்யுங்கள். 
1735 பாதத் தாரொலி பல்சி லம்பினன் 
ஓதத் தார்விட முண்ட வன்படைப் 
பூதத் தான்புக லிந்ந கர்தொழ 
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 2.025. 5
பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல சிலம்புகளை அணிந்தவனும், பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை உண்டவனும், பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப் பதியை அடைந்து தொழ, துன்பங்கள் வருவதற்கு இடம் இல்லை யாகும். 
1736 மறையி னான்ஒலி மல்கு வீணையன் 
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம் 
பொறை யினானுறை யும்பு கலியை
நிறையி னால்தொழ நேச மாகுமே. 2.025. 6
வேதங்களை அருளியவனும், ஒலி நிறைந்த வீணையை உடையவனும், பூரணனாய் நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனும், எமது பொறுமையை மலராகக் கொள்பவனும், ஆகிய சிவபிரான் உறையும் புகலியையே குறிக்கொண்டு தொழ, அதுவே அன்பு வழிபாடாக அமையும். 
1737 கரவி டைமனத் தாரைக் காண்கிலான் 
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டையுயர்த் தான்பு கலியைப் 
பரவி டப்பயில் பாவம் பாறுமே. 2.025. 7
வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண விரும்பாதவனும், இரவில் பலியேற்கும் இயல்பினனும், எம் இறைவனும், போர் வல்ல விடைபொறித்த கொடியினனும் ஆகிய சிவபிரானது புகலியைப் பரவ நாம் செய்த பாவங்கள் அழியும். 
1738 அருப்பி னார்முலை மங்கை பங்கினன் 
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும் 
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர் 
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 2.025.8
தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், தன்மீது விருப்பினன் ஆயினும் செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்த்த கயிலைமலையினனும், பொழில் சூழ்ந்த புகலியூரைத்தன் இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை ஏத்தி வாழ்த்துங்கள். 
1739 மாலும் நான்முகன் தானும் வார்கழற் 
சீல மும்முடி தேட நீண்டெரி 
போலும் மேனியன் பூம்பு கலியுட் 
பால தாடிய பண்பன் நல்லனே. 2.025.9
திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரி போலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன். 
1740 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல் 
ஒன்ற தாகவை யாஉ ணர்வினுள் 
நின்ற வன்நிக ழும்பு கலியைச் 
சென்று கைதொழச் செல்வ மாகுமே. 2.025. 10
நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள், தேரர்களாகிய பௌத்தர்கள் உரைகளை ஒருபொருளாகக் கொள்ளாத அன்பர்களின் உணர்வினுள் நிற்கும் சிவபிரான் எழுந்தருளிய புகலியைச் சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம். 
1741 புல்லம் மேறிதன் பூம்பு கலியை 
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற் 
சொல்லு மாலையீ ரைந்தும் வல்லவர்க் 
கில்லை யாம்வினை யிருநி லத்துளே. 2.025.11
விடைமீது ஏறி வருபவனாகிய சிவபிரானது அழகிய புகலியை நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால் போற்றிச் சொல்லிய தமிழ் மாலையாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்க்கு அகன்ற இந்நிலவுலகத்தில் வினைகள் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

2.025.திருப்புகலி 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

1731 உகலி யாழ்கட லோங்கு பாருளீர் அகலி யாவினை யல்லல் போயறும் இகலி யார்புர மெய்த வன்னுறை புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 2.025. 1
“தாவிச்செல்லும் அலைகளை உடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட உலகின்கண் வாழ்பவர்களே, தன்னோடு மாறுபட்ட அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சிவபிரான் உறையும் புகலி என்ப்பெயர் பெற்ற சீகாழிப்பதியைப் போற்றி வழிபடுங்கள்”. வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போகும். 

1732 பண்ணி யாள்வதோ ரேற்றர் பான்மதிக் கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப் புண்ணி யன்னுறை யும்பு கலியை நண்ணு மின்னல மான வேண்டிலே. 2.025. 2
நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின், அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால் போன்ற வெண்மையான பிறை மதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும் கொன்றை மாலைசேர்ந்த முடியினனும் ஆகிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து வழிபடுங்கள். 

1733 வீசு மின்புரை காதன் மேதகு பாச வல்வினை தீர்த்த பண்பினன் பூசு நீற்றினன் பூம்பு கலியைப் பேசு மின்பெரி தின்ப மாகவே. 2.025.3
இன்பம் பெரிதாக விளையவேண்டின், ஒளிவீசும் மின்னல் போன்ற அணிபூண்ட காதினனும், பற்றுக்கள், வலிய வினைகள் ஆகியவற்றைப் போக்கிய மேதகு பண்பினனும், திருநீறு பூசியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய புகலிப்பதியை அடைந்து அவனைப்புகழ்ந்து பேசுங்கள். 

1734 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன் படிகொள் பாரிடம் பேசும் பான்மையன் பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள் அடிக ளையடைந் தன்பு செய்யுமே. 2.025. 4
மணம் கமழும் வில்வம், ஊமத்தைமலர் ஆகியவற்றை முடிமிசைச் சூடியவனும், பெரிதான இவ் வுலகில் உள்ளோர் புகழ்ந்து போற்றும் தன்மையாளனும், திருநீற்றுப்பொடி பூசிய மேனியனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை அடைந்து அங்கு மேவிய பெருமானிடம் அன்பு செய்யுங்கள். 

1735 பாதத் தாரொலி பல்சி லம்பினன் ஓதத் தார்விட முண்ட வன்படைப் பூதத் தான்புக லிந்ந கர்தொழ ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 2.025. 5
பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல சிலம்புகளை அணிந்தவனும், பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை உண்டவனும், பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப் பதியை அடைந்து தொழ, துன்பங்கள் வருவதற்கு இடம் இல்லை யாகும். 

1736 மறையி னான்ஒலி மல்கு வீணையன் நிறையி னார்நிமிர் புன்ச டையனெம் பொறை யினானுறை யும்பு கலியைநிறையி னால்தொழ நேச மாகுமே. 2.025. 6
வேதங்களை அருளியவனும், ஒலி நிறைந்த வீணையை உடையவனும், பூரணனாய் நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனும், எமது பொறுமையை மலராகக் கொள்பவனும், ஆகிய சிவபிரான் உறையும் புகலியையே குறிக்கொண்டு தொழ, அதுவே அன்பு வழிபாடாக அமையும். 

1737 கரவி டைமனத் தாரைக் காண்கிலான் இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறைபொருவி டையுயர்த் தான்பு கலியைப் பரவி டப்பயில் பாவம் பாறுமே. 2.025. 7
வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண விரும்பாதவனும், இரவில் பலியேற்கும் இயல்பினனும், எம் இறைவனும், போர் வல்ல விடைபொறித்த கொடியினனும் ஆகிய சிவபிரானது புகலியைப் பரவ நாம் செய்த பாவங்கள் அழியும். 

1738 அருப்பி னார்முலை மங்கை பங்கினன் விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும் பொருப்பி னான்பொழி லார்பு கலியூர் இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 2.025.8
தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், தன்மீது விருப்பினன் ஆயினும் செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்த்த கயிலைமலையினனும், பொழில் சூழ்ந்த புகலியூரைத்தன் இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை ஏத்தி வாழ்த்துங்கள். 

1739 மாலும் நான்முகன் தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுட் பால தாடிய பண்பன் நல்லனே. 2.025.9
திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரி போலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன். 

1740 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல் ஒன்ற தாகவை யாஉ ணர்வினுள் நின்ற வன்நிக ழும்பு கலியைச் சென்று கைதொழச் செல்வ மாகுமே. 2.025. 10
நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள், தேரர்களாகிய பௌத்தர்கள் உரைகளை ஒருபொருளாகக் கொள்ளாத அன்பர்களின் உணர்வினுள் நிற்கும் சிவபிரான் எழுந்தருளிய புகலியைச் சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம். 

1741 புல்லம் மேறிதன் பூம்பு கலியை நல்ல ஞானசம் பந்தன் நாவினாற் சொல்லு மாலையீ ரைந்தும் வல்லவர்க் கில்லை யாம்வினை யிருநி லத்துளே. 2.025.11
விடைமீது ஏறி வருபவனாகிய சிவபிரானது அழகிய புகலியை நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால் போற்றிச் சொல்லிய தமிழ் மாலையாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்க்கு அகன்ற இந்நிலவுலகத்தில் வினைகள் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.