LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

இரண்டாம் பாகம்-புயல்-ஹலோ போலீஸ்

 

வாசற்கதவைத் திறந்ததும் சீதாவுக்கு மேலும் அதிசயமும் திகைப்பும் உண்டாகும் காட்சிதென்பட்டது. வாசலருகில் அவர்கள் வீட்டு கார் வந்து நின்றது. அதன் முன் சீட்டில் மூன்று பேர்உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினார்கள். இறங்கியவர்கள்சௌந்தரராகவனும் தாரிணியும் சூரியாவும். இந்த மூன்று பேரும் முன் ஸீட்டில் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்து வந்திருக்கிறார்கள் என்னும் விஷயம் சீதாவின் மனத்திரையில்புகைப்படத்தைப் போல் பதிந்தது. உடனே, காரின் பின் பகுதிக்குச் சீதாவின் கவனம் சென்றது.அதில் ஏதோ ஒரு நீள வாட்டமான மூட்டை கிடந்தது அது மூட்டைதானா? அல்லது...?ஏற்கனவே கலக்கமடைந்திருந்த சீதாவின் உள்ளம் பதைபதைத்தது; உடம்பு நடுங்கிற்று. வந்தவர்களை வரவேற்க வேண்டும் என்கிற கடமை சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் வாசற்படியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகங்களை வீதி விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் சீதா பார்த்தாள். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எதற்காக முகங்களை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எதையோ பறிகொடுத்தவர்களைப்போல்.. இல்லை, இழவு வீட்டுக்கு வருகிறவர்களைப் போல் வருகிறார்களே! ஏன்? "கொஞ்சம்நகர்ந்து வழி விடு! ஏன் வாசற்படியில் நிற்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே ராகவன் முதலில் வந்தான். அவனுடைய குரல் சீதாவுக்கு விசித்திரமாகத் தொனித்தது. அது வழக்கமான கோபக் குரல் இல்லை; அருவருப்பும் அவசரமும் கலந்த குரல். வரும்போதே எதற்காக எரிந்து விழுந்துகொண்டு வருகிறார்? 
 
     சீதா சற்று ஒதுங்கி நின்றாள்; அடுத்தாற்போல் தாரிணி வந்தாள், அவளிடம் ஏதாவதுபேசி வரவேற்க வேண்டும் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றம்வரவேற்புச் சொல்வதற்கு உகந்ததாக இல்லை. மேலும் தாரிணி சம்பந்தமான இரண்டுஎண்ணங்கள் சீதாவின் மனதில் அலை மோதிக் கொண்டு கிடந்தன. ஒன்று அவளுடைய தாயார்அல்லது வளர்ப்புத் தாயார் அந்த வீட்டின் பின்பக்கத்து அறையொன்றில் அப்போது இருக்கிறாள்என்பது. இரண்டாவது எண்ணம், காரின் முன் பகுதியில் ராகவனுக்கும் சூரியாவுக்கும் மத்தியில்வெட்கமில்லாமல் உட்கார்ந்து கொண்டு தாரிணி வந்தாள் என்பது. இத்தகைய மனோ நிலையில்தாரிணியை என்ன சொல்லி வரவேற்பது என்று சீதா யோசிப்பதற்குள் தாரிணி அவளைத் தாண்டி விரைவாக உள்ளே போய்விட்டாள். அப்புறம் சூரியா வந்தான் சீதாவுக்கு அவனிடம் பேசுவதில்தடங்கல் ஒன்றும் இருக்கவில்லை. "அம்மாஞ்சி! இது என்ன எல்லோரும் எங்கேயிருந்து வருகிறீர்கள்? எதற்காக இப்படி முகத்தைப் பயங்கரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?ஏதோ கொலை செய்துவிட்டு வருகிறவர்களைப் போல் வருகிறீர்களே?" என்றாள். கொலைஎன்ற வார்த்தையைக் கேட்டதும் சூரியா திடுக்கிட்டுச் சீதாவை ஏறிட்டுப் பார்த்தான். அடங்கிய குரலில், "ஒரு பயங்கரமான விஷயம், அத்தங்கா! முதலில் உள்ளே போவோம். பிறகு எல்லாம்சாவகாசமாகச் சொல்லுகிறேன்" என்றான். 
 
      மறுபடியும், "நாங்கள்தான் இப்படி வந்திருக்கிறோம் என்றால் உன்னுடைய முகம் ஏன் இப்படியிருக்கிறது? உனக்கு உடம்பு ஒன்றுமில்லையே?" என்று கேட்டான். "எனக்கா? உடம்புஒன்றுமில்லை ஆனால் மனதுதான் சரியாயில்லை. இவர் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் இத்தனை நேரம் கழித்துத் திரும்பி வந்தால் என்ன செய்கிறது? சூரியா! இத்தனை நாளாக நீஏன் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை...? இந்த மனுஷியை எங்கே கண்டுபிடித்தீர்கள்?""தாரிணியைக் கேட்கிறாயா, சீதா! அவள் என்னைப் பார்ப்பதற்காக என் அறைக்கு வந்திருந்தாள். அந்தச் சமயம் ராகவனும் வந்தார், தாரிணி உன்னைப் பார்க்க வேண்டும் என்றுசொன்னாள். மூன்று பேருமாகப் புறப்பட்டு வந்தோம்." "மூன்று பேரும் வந்தஇலட்சணத்தைத்தான் பார்த்தேனே! இவளுக்கு, தான் பெண்ணாய் பிறந்தவள் என்பதேநினைவிராது போலிருக்கிறது?" என்றாள் சீதா. சூரியா வியப்புடன் சீதாவைப் பார்த்தான்."அத்தங்கா! ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. உள்ளே வா, சாவகாசமாகச்சொல்லுகிறேன்!" என்றான். 
 
     சீதாவும் சூரியாவும் 'டிராயிங் ரூம்' என்று வழங்கிய வீட்டின் பிரதான அறைக்குச்சென்றபோது, அங்கே ராகவன் டெலிபோனுக்குப் பக்கத்தில் ரிஸீவரைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். தாரிணி ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்தாள். அவளுடன் ஏதாவதுபேசலாம் என்று நினைப்பதற்குள், "சீதா! குழந்தை என்ன செய்கிறாள்? தூங்கிப்போய்விட்டாளா?" என்று ராகவன் பதட்டத்துடன் கேட்டான். இந்தச் சமயத்தில் ஆபீஸ்அறைக்குள்ளிருந்து, "அப்பா! அப்பா" என்று குழந்தையின் குரல் கேட்டது. "இத்தனை நேரம் தூங்கிக் கொண்டிருந்தாள். உங்கள் குரலைக் கேட்டு விழித்திருக்கிறாள். தூக்கத்திலே கூடஅப்பா ஞாபகந்தான் குழந்தைக்கு!" என்றாள் சீதா. "சரி, சரி! உன் பெருமையை அப்புறம்அடித்துக்கொள்ளலாம். உடனே போய் அவளை மறுபடியும் தூங்கப் பண்ணு, அப்பா இதோ வந்து விடுவார் என்று சொல்லு. அவள் இப்போது இங்கே வரக்கூடாது தெரிகிறதா? போ, சீக்கிரம்!" ராகவனுடைய குரலிலிருந்தும் பதட்டத்திலிருந்தும் ஏதோ ரொம்ப முக்கியமான விஷயந்தான்என்று சீதா அறிந்தாள்; அவனுடைய சொற்படி ஆபீஸ் அறைக்குள் சென்றாள். "அப்பா வந்துத்தாரா, அம்மா!" என்று வஸந்தி கேட்டாள். 
 
     "வந்துட்டார், வஸந்தி! உன் பக்கத்திலேதான் வந்து படுத்துக்கொள்வார் நீ தூங்கு!"என்று சீதா குழந்தையின் முதுகைத் தட்டினாள். "அப்பா கோவமா வந்திருக்காரா, அம்மா!"என்று குழந்தை கேட்டாள். அவ்வளவு மனக் குழப்பத்துக்கிடையிலும் வஸந்தியின் கேள்விசீதாவுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று. "அதெல்லாம் ஒன்றுமில்லை, வஸந்தி! இன்னும் யாரோ வந்திருக்கிறார்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீ பாட்டுக்கு நிம்மதியாகத் தூங்கு!" என்றாள். ஒரு நிமிஷத்துக்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டாள். சீதா திரும்ப முன்அறைக்கு வந்தாள். ஒருவேளை மூன்று பேரும் சாப்பிடாமல் வந்திருப்பார்களோ, என்னமோ,எல்லாருக்கும் எப்படி சாப்பாடு தயாரிப்பது? இந்தச் சமயம் பார்த்து வேலைக்காரன்,வேலைக்காரி இரண்டு பேரும் போய் விட்டார்களே? என்று எண்ணமிட்டுக் கொண்டு வந்தாள்.அப்போது ராகவன் டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தான். "ஹலோ! போலீஸ் ஸ்டேஷன்?அங்கே யார்? நான் பி.எல்.எஸ். ராகவன் பேசுகிறது. இவ்விடத்தில் ஒரு 'ஆக்ஸிடெண்ட்'இல்லை, கார் ஆக்ஸிடெண்ட் இல்லை ஒருவேளை கொலையாக இருக்கலாம் என்று.... ஆமாம்,'மர்டர்' என்று சந்தேகமாயிருக்கிறது... உடனே யாரையாவது அனுப்பவேணும்... தாங்க்ஸ்!" டிராயிங் ரூம் வாசற்படியில் நின்றபடி சீதா இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். 
 
      டெலிபோன் பேச்சு முடிந்ததும் அறைக்குள் வந்தாள். யாரும் அவளிடம் எதுவும் பேசுகிற வழியாகக் காணவில்லை. ஒருவரும் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை.கனவிலே நடக்கிறவளைப்போல் நடந்து போய்த் தாரிணியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.தாரிணியின் தாயார் அந்த வீட்டின் பின்கட்டில் அப்போது இருப்பது, அவள் கையில் கத்தியுடன்வந்தது, இரத்தம் தோய்ந்த கைக்குட்டையை அலம்பியது எல்லாம் அவளுக்கு நினைவு வந்தன.ஏதாவது பேசாவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போலத் தோன்றியது. "அக்கா! இது என்னசமாசாரம்? எதற்காகப் போலீஸைக் கூப்பிடுகிறார்?" என்று சீதா கேட்டது கீச்சுக் குரலில்'கிறீச்' என்று ஒலித்தது. அப்போதும் தாரிணி ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் பிரமை பிடித்தவள் போலக் காணப்பட்டாள். ராகவன் குறுக்கிட்டு, "சீதா! சற்று நேரம் வாயை மூடிக்கொண்டிரு! எல்லாம் தானே தெரியும். இந்தச் சமயம் 'ஹிஸ்டீரியா; வரவழைத்துக்கொள்ளாதே! அப்படி ஏதாவது ரகளை செய்தாயோ, நானே இன்றைக்கு ஒரு கொலைசெய்தாலும் செய்து விடுவேன்!" என்று கூறினான், சீதா நடுநடுங்கினாள். ராகவன் சூரியாவைப்பார்த்து, "வா! சூரியா! நாம் வாசலில் போய் நிற்போம்! போலீஸ்காரர்கள் வந்துவிடுவார்கள்!"என்றான்.

வாசற்கதவைத் திறந்ததும் சீதாவுக்கு மேலும் அதிசயமும் திகைப்பும் உண்டாகும் காட்சிதென்பட்டது. வாசலருகில் அவர்கள் வீட்டு கார் வந்து நின்றது. அதன் முன் சீட்டில் மூன்று பேர்உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினார்கள். இறங்கியவர்கள்சௌந்தரராகவனும் தாரிணியும் சூரியாவும். இந்த மூன்று பேரும் முன் ஸீட்டில் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்து வந்திருக்கிறார்கள் என்னும் விஷயம் சீதாவின் மனத்திரையில்புகைப்படத்தைப் போல் பதிந்தது. உடனே, காரின் பின் பகுதிக்குச் சீதாவின் கவனம் சென்றது.அதில் ஏதோ ஒரு நீள வாட்டமான மூட்டை கிடந்தது அது மூட்டைதானா? அல்லது...?ஏற்கனவே கலக்கமடைந்திருந்த சீதாவின் உள்ளம் பதைபதைத்தது; உடம்பு நடுங்கிற்று. வந்தவர்களை வரவேற்க வேண்டும் என்கிற கடமை சீதாவுக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் வாசற்படியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகங்களை வீதி விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் சீதா பார்த்தாள். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எதற்காக முகங்களை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எதையோ பறிகொடுத்தவர்களைப்போல்.. இல்லை, இழவு வீட்டுக்கு வருகிறவர்களைப் போல் வருகிறார்களே! ஏன்? "கொஞ்சம்நகர்ந்து வழி விடு! ஏன் வாசற்படியில் நிற்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே ராகவன் முதலில் வந்தான். அவனுடைய குரல் சீதாவுக்கு விசித்திரமாகத் தொனித்தது. அது வழக்கமான கோபக் குரல் இல்லை; அருவருப்பும் அவசரமும் கலந்த குரல். வரும்போதே எதற்காக எரிந்து விழுந்துகொண்டு வருகிறார்?       சீதா சற்று ஒதுங்கி நின்றாள்; அடுத்தாற்போல் தாரிணி வந்தாள், அவளிடம் ஏதாவதுபேசி வரவேற்க வேண்டும் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றம்வரவேற்புச் சொல்வதற்கு உகந்ததாக இல்லை. மேலும் தாரிணி சம்பந்தமான இரண்டுஎண்ணங்கள் சீதாவின் மனதில் அலை மோதிக் கொண்டு கிடந்தன. ஒன்று அவளுடைய தாயார்அல்லது வளர்ப்புத் தாயார் அந்த வீட்டின் பின்பக்கத்து அறையொன்றில் அப்போது இருக்கிறாள்என்பது. இரண்டாவது எண்ணம், காரின் முன் பகுதியில் ராகவனுக்கும் சூரியாவுக்கும் மத்தியில்வெட்கமில்லாமல் உட்கார்ந்து கொண்டு தாரிணி வந்தாள் என்பது. இத்தகைய மனோ நிலையில்தாரிணியை என்ன சொல்லி வரவேற்பது என்று சீதா யோசிப்பதற்குள் தாரிணி அவளைத் தாண்டி விரைவாக உள்ளே போய்விட்டாள். அப்புறம் சூரியா வந்தான் சீதாவுக்கு அவனிடம் பேசுவதில்தடங்கல் ஒன்றும் இருக்கவில்லை. "அம்மாஞ்சி! இது என்ன எல்லோரும் எங்கேயிருந்து வருகிறீர்கள்? எதற்காக இப்படி முகத்தைப் பயங்கரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?ஏதோ கொலை செய்துவிட்டு வருகிறவர்களைப் போல் வருகிறீர்களே?" என்றாள். கொலைஎன்ற வார்த்தையைக் கேட்டதும் சூரியா திடுக்கிட்டுச் சீதாவை ஏறிட்டுப் பார்த்தான். அடங்கிய குரலில், "ஒரு பயங்கரமான விஷயம், அத்தங்கா! முதலில் உள்ளே போவோம். பிறகு எல்லாம்சாவகாசமாகச் சொல்லுகிறேன்" என்றான்.        மறுபடியும், "நாங்கள்தான் இப்படி வந்திருக்கிறோம் என்றால் உன்னுடைய முகம் ஏன் இப்படியிருக்கிறது? உனக்கு உடம்பு ஒன்றுமில்லையே?" என்று கேட்டான். "எனக்கா? உடம்புஒன்றுமில்லை ஆனால் மனதுதான் சரியாயில்லை. இவர் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் இத்தனை நேரம் கழித்துத் திரும்பி வந்தால் என்ன செய்கிறது? சூரியா! இத்தனை நாளாக நீஏன் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை...? இந்த மனுஷியை எங்கே கண்டுபிடித்தீர்கள்?""தாரிணியைக் கேட்கிறாயா, சீதா! அவள் என்னைப் பார்ப்பதற்காக என் அறைக்கு வந்திருந்தாள். அந்தச் சமயம் ராகவனும் வந்தார், தாரிணி உன்னைப் பார்க்க வேண்டும் என்றுசொன்னாள். மூன்று பேருமாகப் புறப்பட்டு வந்தோம்." "மூன்று பேரும் வந்தஇலட்சணத்தைத்தான் பார்த்தேனே! இவளுக்கு, தான் பெண்ணாய் பிறந்தவள் என்பதேநினைவிராது போலிருக்கிறது?" என்றாள் சீதா. சூரியா வியப்புடன் சீதாவைப் பார்த்தான்."அத்தங்கா! ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. உள்ளே வா, சாவகாசமாகச்சொல்லுகிறேன்!" என்றான்.       சீதாவும் சூரியாவும் 'டிராயிங் ரூம்' என்று வழங்கிய வீட்டின் பிரதான அறைக்குச்சென்றபோது, அங்கே ராகவன் டெலிபோனுக்குப் பக்கத்தில் ரிஸீவரைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். தாரிணி ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்தாள். அவளுடன் ஏதாவதுபேசலாம் என்று நினைப்பதற்குள், "சீதா! குழந்தை என்ன செய்கிறாள்? தூங்கிப்போய்விட்டாளா?" என்று ராகவன் பதட்டத்துடன் கேட்டான். இந்தச் சமயத்தில் ஆபீஸ்அறைக்குள்ளிருந்து, "அப்பா! அப்பா" என்று குழந்தையின் குரல் கேட்டது. "இத்தனை நேரம் தூங்கிக் கொண்டிருந்தாள். உங்கள் குரலைக் கேட்டு விழித்திருக்கிறாள். தூக்கத்திலே கூடஅப்பா ஞாபகந்தான் குழந்தைக்கு!" என்றாள் சீதா. "சரி, சரி! உன் பெருமையை அப்புறம்அடித்துக்கொள்ளலாம். உடனே போய் அவளை மறுபடியும் தூங்கப் பண்ணு, அப்பா இதோ வந்து விடுவார் என்று சொல்லு. அவள் இப்போது இங்கே வரக்கூடாது தெரிகிறதா? போ, சீக்கிரம்!" ராகவனுடைய குரலிலிருந்தும் பதட்டத்திலிருந்தும் ஏதோ ரொம்ப முக்கியமான விஷயந்தான்என்று சீதா அறிந்தாள்; அவனுடைய சொற்படி ஆபீஸ் அறைக்குள் சென்றாள். "அப்பா வந்துத்தாரா, அம்மா!" என்று வஸந்தி கேட்டாள்.       "வந்துட்டார், வஸந்தி! உன் பக்கத்திலேதான் வந்து படுத்துக்கொள்வார் நீ தூங்கு!"என்று சீதா குழந்தையின் முதுகைத் தட்டினாள். "அப்பா கோவமா வந்திருக்காரா, அம்மா!"என்று குழந்தை கேட்டாள். அவ்வளவு மனக் குழப்பத்துக்கிடையிலும் வஸந்தியின் கேள்விசீதாவுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று. "அதெல்லாம் ஒன்றுமில்லை, வஸந்தி! இன்னும் யாரோ வந்திருக்கிறார்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீ பாட்டுக்கு நிம்மதியாகத் தூங்கு!" என்றாள். ஒரு நிமிஷத்துக்குள் குழந்தை தூங்கிப் போய்விட்டாள். சீதா திரும்ப முன்அறைக்கு வந்தாள். ஒருவேளை மூன்று பேரும் சாப்பிடாமல் வந்திருப்பார்களோ, என்னமோ,எல்லாருக்கும் எப்படி சாப்பாடு தயாரிப்பது? இந்தச் சமயம் பார்த்து வேலைக்காரன்,வேலைக்காரி இரண்டு பேரும் போய் விட்டார்களே? என்று எண்ணமிட்டுக் கொண்டு வந்தாள்.அப்போது ராகவன் டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தான். "ஹலோ! போலீஸ் ஸ்டேஷன்?அங்கே யார்? நான் பி.எல்.எஸ். ராகவன் பேசுகிறது. இவ்விடத்தில் ஒரு 'ஆக்ஸிடெண்ட்'இல்லை, கார் ஆக்ஸிடெண்ட் இல்லை ஒருவேளை கொலையாக இருக்கலாம் என்று.... ஆமாம்,'மர்டர்' என்று சந்தேகமாயிருக்கிறது... உடனே யாரையாவது அனுப்பவேணும்... தாங்க்ஸ்!" டிராயிங் ரூம் வாசற்படியில் நின்றபடி சீதா இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.        டெலிபோன் பேச்சு முடிந்ததும் அறைக்குள் வந்தாள். யாரும் அவளிடம் எதுவும் பேசுகிற வழியாகக் காணவில்லை. ஒருவரும் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை.கனவிலே நடக்கிறவளைப்போல் நடந்து போய்த் தாரிணியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.தாரிணியின் தாயார் அந்த வீட்டின் பின்கட்டில் அப்போது இருப்பது, அவள் கையில் கத்தியுடன்வந்தது, இரத்தம் தோய்ந்த கைக்குட்டையை அலம்பியது எல்லாம் அவளுக்கு நினைவு வந்தன.ஏதாவது பேசாவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போலத் தோன்றியது. "அக்கா! இது என்னசமாசாரம்? எதற்காகப் போலீஸைக் கூப்பிடுகிறார்?" என்று சீதா கேட்டது கீச்சுக் குரலில்'கிறீச்' என்று ஒலித்தது. அப்போதும் தாரிணி ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் பிரமை பிடித்தவள் போலக் காணப்பட்டாள். ராகவன் குறுக்கிட்டு, "சீதா! சற்று நேரம் வாயை மூடிக்கொண்டிரு! எல்லாம் தானே தெரியும். இந்தச் சமயம் 'ஹிஸ்டீரியா; வரவழைத்துக்கொள்ளாதே! அப்படி ஏதாவது ரகளை செய்தாயோ, நானே இன்றைக்கு ஒரு கொலைசெய்தாலும் செய்து விடுவேன்!" என்று கூறினான், சீதா நடுநடுங்கினாள். ராகவன் சூரியாவைப்பார்த்து, "வா! சூரியா! நாம் வாசலில் போய் நிற்போம்! போலீஸ்காரர்கள் வந்துவிடுவார்கள்!"என்றான்.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.