LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-8

3.008.திருக்கடவூர்வீரட்டம் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர். 
தேவியார் - அபிராமியம்மை. 
2878 சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி
கோவண
உடையுடை யானுமை யார்ந்த வொண்கண்
உமைகேள்வனும்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட
வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர
னல்லனே
3.008.1
சடை முடியுடையவனும், பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும், சரிந்த கோவண ஆடையுடையவனும், மை தீட்டிய ஒளி பொருந்திய கண்ணை யுடைய உமாதேவியின் கணவனும், வாயில்களையுடைய நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக்கடவூரில் இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ? 
2879 எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு
தேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்
தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட
வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர
னல்லனே.
3.008.2
நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும், வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும், சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழிபட, அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? 
2880 நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர்
போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு
வேறியும்
காதலர் தண்கட வூரினா னுங்கலந்
தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர
னல்லனே.
3.008.3
எல்லா உலகங்கட்கும் தலைவனும், மகாசங்கார காலத்தில் நடனம் புரிபவனும், அடியவர்களின் இதயத்தாமரையில் வீற்றிருப்பவனும், புலித்தோலாடை உடையவனும், இடபவாகனனும், அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் சய்த வீரட்டானத்து அரன் அல்லனோ? 
2881 மழுவமர் செல்வனும் மாசிலாதபல
பூதமுன்
முழவொலி யாழ்குழன் மொந்தைகொட்டமுது
காட்டிடைக்
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட
வூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர
னல்லனே
3.008.4
மழுப்படையேந்திய செல்வனும், குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க, யாழும் குழலும் இசைக்க, மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட, சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ? 
2882 சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல்
வாயதோர்
படமணி நாகம் ரைக்கசைத் தபர
மேட்டியும்
கடமணி மாவுரித் தோலினா னுங்கட
வூர்தனுள் 
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர
னல்லனே
3.008.5
சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம் அணிந்துள்ளவனும், வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள வனும், அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள கடவுளும், மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? விடமணிகண்டன்-“நீலமணி மிடற்று ஒருவன் போல” (அவ்வையார், புறநானூறு) நினைவுகூர்க. 
2883 பண்பொலி நான்மறை பாடியா டிப்பல
வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி
மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட
வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர
னல்லனே
3.008.6
நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும், நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை உடையவனும், வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும், திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து அரன் அல்லனோ? 
2884 செவ்வழ லாய்நில மாகிநின் றசிவ
மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி
கேள்வனும்
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட
வூர்தனுள்
வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தர
னல்லனே
3.008.7
செந்நிற நெருப்பாகவும், நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும், ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்ற மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும், ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும், கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும், வெப்ப முடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும், திருக் கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ? 
2885 அடியிரண் டோருடம் பைஞ்ஞான்கி ருபது 
தோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதன்
மூர்த்தியும்
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட
வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர
னல்லனே
3.008.8
ஓர் உடம்பில் இரண்டு கால்களும், இருபது தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும், முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ? 
2886 வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர்
போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந்
தேத்தவே
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட
வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர
னல்லனே
3.008.9
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்து ஆக்களையும், ஆயர்களையும் காத்த திருமாலும், குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க, பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன், திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? 
2887 தேரரும் மாசுகொள் மேனியா ரும்தௌ
யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம
தாதியான்
காரிளங் கொன்றைவெண்டிங்களா னுங்கட
வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர
னல்லனே
3.008.10
புத்தர்களும், அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் தௌந்தறிதற்கரிய சொல்லும், பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான், கார்காலத்தில்மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும், வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடியுள்ளவனும், வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய, திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ? 
2888 வெந்தவெண் ணீரணி வீரட்டா னத்துறை
வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னைஅணி
காழியான் 
சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறை
ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும்
பாவமே
3.008.11
விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய், அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை, அழகிய சீகாழியில்அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும். 
திருச்சிற்றம்பலம்

3.008.திருக்கடவூர்வீரட்டம் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர். தேவியார் - அபிராமியம்மை. 

2878 சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரிகோவணஉடையுடை யானுமை யார்ந்த வொண்கண்உமைகேள்வனும்கடையுடை நன்னெடு மாடமோங் குங்கடவூர்தனுள்விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தரனல்லனே3.008.1
சடை முடியுடையவனும், பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும், சரிந்த கோவண ஆடையுடையவனும், மை தீட்டிய ஒளி பொருந்திய கண்ணை யுடைய உமாதேவியின் கணவனும், வாயில்களையுடைய நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக்கடவூரில் இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ? 

2879 எரிதரு வார்சடை யானும்வெள் ளையெருதேறியும்புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்தேத்தவேகரிதரு காலனைச் சாடினா னுங்கடவூர்தனுள்விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தரனல்லனே.3.008.2
நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும், வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும், சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழிபட, அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? 

2880 நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர்போதின்கண்பாதனும் பாய்புலித் தோலினா னும்பசுவேறியும்காதலர் தண்கட வூரினா னுங்கலந்தேத்தவேவேதம தோதியும் வீரட்டா னத்தரனல்லனே.3.008.3
எல்லா உலகங்கட்கும் தலைவனும், மகாசங்கார காலத்தில் நடனம் புரிபவனும், அடியவர்களின் இதயத்தாமரையில் வீற்றிருப்பவனும், புலித்தோலாடை உடையவனும், இடபவாகனனும், அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் சய்த வீரட்டானத்து அரன் அல்லனோ? 

2881 மழுவமர் செல்வனும் மாசிலாதபலபூதமுன்முழவொலி யாழ்குழன் மொந்தைகொட்டமுதுகாட்டிடைக்கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கடவூர்தனுள்விழவொலி மல்கிய வீரட்டா னத்தரனல்லனே3.008.4
மழுப்படையேந்திய செல்வனும், குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க, யாழும் குழலும் இசைக்க, மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட, சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ? 

2882 சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல்வாயதோர்படமணி நாகம் ரைக்கசைத் தபரமேட்டியும்கடமணி மாவுரித் தோலினா னுங்கடவூர்தனுள் விடமணி கண்டனும் வீரட்டா னத்தரனல்லனே3.008.5
சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம் அணிந்துள்ளவனும், வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள வனும், அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள கடவுளும், மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? விடமணிகண்டன்-“நீலமணி மிடற்று ஒருவன் போல” (அவ்வையார், புறநானூறு) நினைவுகூர்க. 

2883 பண்பொலி நான்மறை பாடியா டிப்பலவூர்கள்போய்உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளிமல்கியகண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கடவூர்தனுள்வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தரனல்லனே3.008.6
நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும், நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை உடையவனும், வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும், திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து அரன் அல்லனோ? 

2884 செவ்வழ லாய்நில மாகிநின் றசிவமூர்த்தியும்முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனிகேள்வனும்கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கடவூர்தனுள்வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தரனல்லனே3.008.7
செந்நிற நெருப்பாகவும், நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும், ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்ற மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும், ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும், கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும், வெப்ப முடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும், திருக் கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ? 

2885 அடியிரண் டோருடம் பைஞ்ஞான்கி ருபது தோள்தசமுடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதன்மூர்த்தியும்கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கடவூர்தனுள்வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தரனல்லனே3.008.8
ஓர் உடம்பில் இரண்டு கால்களும், இருபது தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும், முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ? 

2886 வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர்போதின்கண்புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந்தேத்தவேகரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கடவூர்தனுள்விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தரனல்லனே3.008.9
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்து ஆக்களையும், ஆயர்களையும் காத்த திருமாலும், குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க, பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன், திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? 

2887 தேரரும் மாசுகொள் மேனியா ரும்தௌயாததோர்ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎமதாதியான்காரிளங் கொன்றைவெண்டிங்களா னுங்கடவூர்தனுள்வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தரனல்லனே3.008.10
புத்தர்களும், அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் தௌந்தறிதற்கரிய சொல்லும், பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான், கார்காலத்தில்மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும், வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடியுள்ளவனும், வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய, திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ? 

2888 வெந்தவெண் ணீரணி வீரட்டா னத்துறைவேந்தனைஅந்தணர் தங்கட வூருளா னைஅணிகாழியான் சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறைஞானசம்பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும்பாவமே3.008.11
விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய், அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை, அழகிய சீகாழியில்அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.