LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-31

2.031.திருக்கருப்பறியலூர் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர். 
தேவியார் - கோல்வளையம்மை. 
1797 சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் 
குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள் 
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் 
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 1
சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக் குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர். 
1798 வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண்மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் 
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால் 
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 2
வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்ய நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும் உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர். 
1799 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப் 
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற 
நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும் 
காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 3
வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர். 
1800 மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன் 
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத் 
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் 
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 4
மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய மையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர். 
1801 ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய 
நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய 
விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும் 
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 5
ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும், அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர். 
1802 விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன் 
பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான் 
எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும் 
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031.6
இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவ வந்த காமனது உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர். 
1803 ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர் 
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத் 
தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக் 
காதின னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 7
உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டுமலையாய் உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர். 
1804 வாய்ந்தபுகழ் விண்ணவரு மண்ணவரு மஞ்சப் 
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற் 
கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள் 
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 8
புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர். 
1805 பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை 
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து 
நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல் 
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031.9
வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடிஅறியாதவாறு எப்போதும்அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும் சிவபிரான்எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர். 
1806 அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக் 
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் 
கற்றென விருப்பது கருப்பறிய லூரே. 2.031. 10
மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன் அறியாதவர்கள்.அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர். 
1807 நலந்தரு புனற்புகலி ஞானசம்பந்தன் 
கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப் 
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று 
வலந்தரு மவர்க்குவினை வாடலௌ தாமே. 2.031. 11
நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில் மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம். 
திருச்சிற்றம்பலம்

2.031.திருக்கருப்பறியலூர் 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர். தேவியார் - கோல்வளையம்மை. 

1797 சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 1
சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக் குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர். 

1798 வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண்மேலேகொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால் கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 2
வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்ய நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும் உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர். 

1799 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப் போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும் காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 3
வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர். 

1800 மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத் தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 4
மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய மையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர். 

1801 ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும் கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 5
ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும், அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர். 

1802 விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன் பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான் எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும் கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031.6
இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவ வந்த காமனது உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர். 

1803 ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர் சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத் தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக் காதின னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 7
உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டுமலையாய் உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர். 

1804 வாய்ந்தபுகழ் விண்ணவரு மண்ணவரு மஞ்சப் பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற் கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள் காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031. 8
புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர். 

1805 பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல் கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.031.9
வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடிஅறியாதவாறு எப்போதும்அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும் சிவபிரான்எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர். 

1806 அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென விருப்பது கருப்பறிய லூரே. 2.031. 10
மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன் அறியாதவர்கள்.அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர். 

1807 நலந்தரு புனற்புகலி ஞானசம்பந்தன் கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப் பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலந்தரு மவர்க்குவினை வாடலௌ தாமே. 2.031. 11
நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில் மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.