LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-10

3.010.திருஇராமேச்சுரம் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர். 
தேவியார் - பர்வதவர்த்தனி. 
2900 அலைவளர் தண்மதி யோடய லேஅடக் கிஉமை
முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே 3.010.1
கங்கையையும், குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான். 
2901 தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன் 
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே 3.010.2
சீதாப்பிராட்டியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான தசமாமுகனின் பூச்சூடிய முடியையுடைய தலைகளை அறுத்துக் கொன்ற பழி நீங்குமாறு அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினை அழியும். 
2902 மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக் கன் உயில் செற்றவன் 
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின்றதொரு நன்மையே 3.010.3
மான் போன்ற மருண்ட பார்வையையுடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரமானது மன்னுயிர்கட்கு நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையும் தரும். 
2903 உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே 3.010.4
மிகுந்த காமவேட்கையால் பிறன்மனைவியைக் கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை போன்ற தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய, புலவு நாறும் கடற்கரையையுடைய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரையில் பாம்மை கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும் தலைவனான சிவபெருமான் அல்லனோ? 
2904 ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே 3.010.5
கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், வீரமுடைய இடபம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடியுடைய எந்தையாகிய சிவபெருமான் இராமேச்சுரத்தில் வீற்றிருந்தருளுகின்றான். வீடுபேற்றை நல்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும். 
2905 அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே 3.010.6
அலைகளையுடைய கடலில் அன்று அணை கட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இணையற்ற இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத அப்பெருமானின் தூய மலர் போன்ற திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம் நீங்கும். 
2906 சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட 
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே 3.010.7
சனி, புதன், சூரியன், வெள்ளி, சந்திரன் மற்றும் அங்காரகன், குரு, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களால் தீமை வரும் எனச் சோதிடன் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டு அவர்களைச் சிறையில் வைத்த தன் ஆற்றலுக்கு மகிழ்ந்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழி தீர, அருளை வேண்டி அண்ணல் இராமபிரான் வழிபட்ட தலம் இராமேச்சுரம். அங்கு எழுந்தருளியிருப்பவர் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் முழுமுதற் பொருளான சிவபெருமானே ஆவார். 
2907 பெருவரை யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெட
ப அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே 3.010.8
பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனது புகழ் குறைந்து அழியும்படி அவனை அம்மலைக்கீழ் அடர்த்தலும், தன் தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடியபோது அவனுக்கு அருளுதலும் செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும் முழுமுதற்பொருள் சிவன் என்பதை உணர்ந்து வந்து ஏத்தியபோது விளங்கித் தோன்றி, இராமேச்சுரத்திலுள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஒருவனே எல்லாப் பொருள்களிலும் விளங்கித் தோன்றுகின்றான். 
2908 சாக்கியர் வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே 3.010.10
புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற உண்மை யல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப் பற்றி நிற்காது, ஒளிமிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை ஞானத்தால் ஏத்தி வாழுங்கள். அவனருளால் எல்லா நலன்களும் உண்டாகும். 
2909 பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை 
இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம் 
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால் 
அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை யல்லலே 3.010.11
தான் பெற்ற வரத்தின் வலிமையால் சூரியன் தன் நகருக்கு மேலே செல்லக் கூடாது என்று ஆணையிட்ட இலங்கைக் கோனாகிய இராவணனைப் போரில் அழித்த இராமபிரான் வழிபட்ட கோயிலாகிய இராமேச்சுரத்தினை, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்ப் பதிகத்தால் மனம் ஒன்றி இப்பூமியில் எங்கும் ஓதவல்லவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

3.010.திருஇராமேச்சுரம் 
பண் - காந்தாரபஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர். தேவியார் - பர்வதவர்த்தனி. 

2900 அலைவளர் தண்மதி யோடய லேஅடக் கிஉமைமுலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனிஇலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே 3.010.1
கங்கையையும், குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான். 

2901 தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன் பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயறஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே 3.010.2
சீதாப்பிராட்டியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான தசமாமுகனின் பூச்சூடிய முடியையுடைய தலைகளை அறுத்துக் கொன்ற பழி நீங்குமாறு அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினை அழியும். 

2902 மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்கானதில் வவ்விய காரரக் கன் உயில் செற்றவன் ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்ஞானமும் நன்பொரு ளாகிநின்றதொரு நன்மையே 3.010.3
மான் போன்ற மருண்ட பார்வையையுடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரமானது மன்னுயிர்கட்கு நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையும் தரும். 

2903 உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்தியவிரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே 3.010.4
மிகுந்த காமவேட்கையால் பிறன்மனைவியைக் கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை போன்ற தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய, புலவு நாறும் கடற்கரையையுடைய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரையில் பாம்மை கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும் தலைவனான சிவபெருமான் அல்லனோ? 

2904 ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே 3.010.5
கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், வீரமுடைய இடபம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடியுடைய எந்தையாகிய சிவபெருமான் இராமேச்சுரத்தில் வீற்றிருந்தருளுகின்றான். வீடுபேற்றை நல்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும். 

2905 அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கியஇணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே 3.010.6
அலைகளையுடைய கடலில் அன்று அணை கட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இணையற்ற இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத அப்பெருமானின் தூய மலர் போன்ற திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம் நீங்கும். 

2906 சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயனமுனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே 3.010.7
சனி, புதன், சூரியன், வெள்ளி, சந்திரன் மற்றும் அங்காரகன், குரு, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களால் தீமை வரும் எனச் சோதிடன் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டு அவர்களைச் சிறையில் வைத்த தன் ஆற்றலுக்கு மகிழ்ந்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழி தீர, அருளை வேண்டி அண்ணல் இராமபிரான் வழிபட்ட தலம் இராமேச்சுரம். அங்கு எழுந்தருளியிருப்பவர் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் முழுமுதற் பொருளான சிவபெருமானே ஆவார். 

2907 பெருவரை யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெடப அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத்தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே 3.010.8
பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனது புகழ் குறைந்து அழியும்படி அவனை அம்மலைக்கீழ் அடர்த்தலும், தன் தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடியபோது அவனுக்கு அருளுதலும் செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும் முழுமுதற்பொருள் சிவன் என்பதை உணர்ந்து வந்து ஏத்தியபோது விளங்கித் தோன்றி, இராமேச்சுரத்திலுள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஒருவனே எல்லாப் பொருள்களிலும் விளங்கித் தோன்றுகின்றான். 

2908 சாக்கியர் வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார்வாக்கிய லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால்ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே 3.010.10
புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற உண்மை யல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப் பற்றி நிற்காது, ஒளிமிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை ஞானத்தால் ஏத்தி வாழுங்கள். அவனருளால் எல்லா நலன்களும் உண்டாகும். 

2909 பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம் புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால் அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை யல்லலே 3.010.11
தான் பெற்ற வரத்தின் வலிமையால் சூரியன் தன் நகருக்கு மேலே செல்லக் கூடாது என்று ஆணையிட்ட இலங்கைக் கோனாகிய இராவணனைப் போரில் அழித்த இராமபிரான் வழிபட்ட கோயிலாகிய இராமேச்சுரத்தினை, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்ப் பதிகத்தால் மனம் ஒன்றி இப்பூமியில் எங்கும் ஓதவல்லவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.