LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-43

4.043.திருக்காஞ்சிமேற்றளி 
திருநேரிசை : பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர். 
தேவியார் - திருமேற்றளிநாயகி. 
424 மறையது பாடிப் பிச்சைக்
கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமு டிமேற்
பெய்வளை யாள்த னோடும்
கறையது கண்டங் கொண்டார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
இறையவர் பாட லாட
லிலங்குமேற் றளிய னாரே.
4.043.1
காஞ்சிமா நகரிலே தலைவராய்ப் பாடல் ஆடல் விளங்கும் மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான் வேதங்களைப் பாடிக்கொண்டு பிச்சை எடுப்பதற்காக வீடுதோறும் திரிந்து வாழ்பவராய், பிறையை அணிந்த சடையிலே கங்கையைச் சூடியவராய்க் கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் உள்ளார்.
425 மாலன மாயன் றன்னை
மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார்
பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் றந்தை
யிலங்குமேற் றளிய னாரே.
4.043.2
முருகனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான் மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலைத் தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய், எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய், ஆன்மாக்களுக்குத் தலைவராய், பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார்.
426 விண்ணிடை விண்ண வர்கள்
விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
பண்ணிடைச் சுவையின் மிக்க
கின்னரம் பாடல் கேட்பார்
கண்ணிடை மணியி னொப்பார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணிடை யெழுத்து மானா
ரிலங்குமேற் றளிய னாரே.
4.043.3
எண்ணும் எழுத்துமாய் விளங்கும் காஞ்சி மேற்றளியனார் வானத்திலுள்ள தேவர்கள் விருப்பத்துடன் வந்து வணங்கி வாழ்த்தப் பண் இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைக் கேட்பவராய்க் கண்மணிபோல அடியவர்களுக்கு ஞானஒளி வழங்குபவராய் உள்ளார்.
427 சோமனை யரவி னோடு
சூழ்தரக் கங்கை சூடும்
வாமனை வான வர்கள்
வலங்கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏமநின் றாடு மெந்தை
யிலங்குமேற் றளிய னாரே.
4.043.4
மன்மதனை வெகுண்ட நெற்றிக் கண்ணராய், இரவில் யாமத்தில் கூத்து நிகழ்த்தும் எந்தையாராய், பிறையைப் பாம்பினோடும் கங்கையோடும் சூடும் அழகராய்த் தேவர்கள் வலப்புறமாகச் சுற்றி வந்து துதிக்குமாறு காஞ்சி மேற்றளியனார் அமர்ந்துள்ளார்.
428 ஊனவ ருயிரி னோடு
முலகங்க ளூழி யாகித்
தானவர் தனமு மாகித்
தனஞ்சய னோடெ திர்ந்த
கானவர் காள கண்டர்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏனமக் கோடு பூண்டா
ரிலங்குமேற் றளிய னாரே.
4.043.5
நீலகண்டராய், எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய், அருச்சுனனோடு எதிர்த்துப் போரிட்ட வேடராய், உலகங்களிலும், ஊழிகளிலும், உடம்பினுள்ளும், உயிரினுள்ளும் உடனாய்க் கலந்து இருப்பவராய்த் தானம் செய்பவராய்ச் செல்வ வடிவினராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார்.
429 மாயனாய் மால னாகி
மலரவ னாகி மண்ணாய்த்
தேயமாய்த் திசையெட் டாகித்
தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
காயமாய்க் காயத் துள்ளார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏயமென் றோளி பாக
ரிலங்குமேற் றளிய னாரே.
4.043.6
தமக்குப் பொருந்திய மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய், திருமாலாகவும், இந்திரனாகவும், பிரமனாகவும், நிலமாகவும், நாடாகவும் எண் திசைகளாகவும் புனித நீர்களாகவும் இயங்குதிணைகளுக்கு உரிய உடல்களாகவும், அவ்வுடல்களின் உள் இருப்பவராகவும் காஞ்சிமேற்றளியனார் கரந்து எங்கும் பரந்து உள்ளார்.
430 மண்ணினை யுண்ட மாயன்
றன்னையோர் பாகங் கொண்டார்
பண்ணினைப் பாடி யாடும்
பத்தர்கள் சித்தங் கொண்டார்
கண்ணினை மூன்றுங் கொண்டார்
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எண்ணினை யெண்ண வைத்தா
ரிலங்குமேற் றளிய னாரே.
4.043.7
உலகை விழுங்கிய திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவராய், இன்னிசைகளைப் பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய், முக் கண்ணராய், அடியார்களுடைய எண்ணத்திலே தம்மையே தியானிக்குமாறு வைத்தவராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார்.
431 செல்வியைப் பாகங் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றா
ரிலங்குமேற் றளிய னாரே.
4.043.8
பார்வதிபாகராய், முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சிநகரிலே, சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார்.
432 வேறிணை யின்றி யென்றும்
விளங்கொளி மருங்கி னாளைக்
கூறியல் பாகம் வைத்தார்
கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்
அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை
யிலங்குமேற் றளிய னாரே.
4.043.9
தனக்கு இணையில்லாதபடி ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார்.
433 தென்னவன் மலையெ டுக்கச்
சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற
மணிமுடி நெரிய வாயால்
கன்னலின் கீதம் பாடக்
கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தா
ரிலங்குமேற் றளிய னாரே.
4.043.10
காஞ்சியில் இலங்கும் மேற்றளியனார் தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு, என்றும் நிலையாயிருக்கும் அவர் தம் விரலால் அழுத்த, அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப் பின் அவன் வாயினால் கரும்பைப் போன்ற இனிய பாடல்கள் பாட, அவற்றைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு இன்னருள் செய்தவராவர்.
திருச்சிற்றம்பலம்

4.043.திருக்காஞ்சிமேற்றளி 

திருநேரிசை : பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர். 

தேவியார் - திருமேற்றளிநாயகி. 

424 மறையது பாடிப் பிச்சைக்

கென்றகந் திரிந்து வாழ்வார்

பிறையது சடைமு டிமேற்

பெய்வளை யாள்த னோடும்

கறையது கண்டங் கொண்டார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

இறையவர் பாட லாட

லிலங்குமேற் றளிய னாரே.(4.043.1)

  காஞ்சிமா நகரிலே தலைவராய்ப் பாடல் ஆடல் விளங்கும் மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான் வேதங்களைப் பாடிக்கொண்டு பிச்சை எடுப்பதற்காக வீடுதோறும் திரிந்து வாழ்பவராய், பிறையை அணிந்த சடையிலே கங்கையைச் சூடியவராய்க் கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் உள்ளார்.

425 மாலன மாயன் றன்னை

மகிழ்ந்தனர் விருத்த ராகும்

பாலனார் பசுப தியார்

பால்வெள்ளை நீறு பூசிக்

காலனைக் காலாற் செற்றார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏலநற் கடம்பன் றந்தை

யிலங்குமேற் றளிய னாரே.(4.043.2)

  முருகனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான் மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலைத் தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய், எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய், ஆன்மாக்களுக்குத் தலைவராய், பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார்.

426 விண்ணிடை விண்ண வர்கள்

விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்

பண்ணிடைச் சுவையின் மிக்க

கின்னரம் பாடல் கேட்பார்

கண்ணிடை மணியி னொப்பார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

எண்ணிடை யெழுத்து மானா

ரிலங்குமேற் றளிய னாரே.(4.043.3)

  எண்ணும் எழுத்துமாய் விளங்கும் காஞ்சி மேற்றளியனார் வானத்திலுள்ள தேவர்கள் விருப்பத்துடன் வந்து வணங்கி வாழ்த்தப் பண் இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைக் கேட்பவராய்க் கண்மணிபோல அடியவர்களுக்கு ஞானஒளி வழங்குபவராய் உள்ளார்.

427 சோமனை யரவி னோடு

சூழ்தரக் கங்கை சூடும்

வாமனை வான வர்கள்

வலங்கொடு வந்து போற்றக்

காமனைக் காய்ந்த கண்ணார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏமநின் றாடு மெந்தை

யிலங்குமேற் றளிய னாரே.(4.043.4)

  மன்மதனை வெகுண்ட நெற்றிக் கண்ணராய், இரவில் யாமத்தில் கூத்து நிகழ்த்தும் எந்தையாராய், பிறையைப் பாம்பினோடும் கங்கையோடும் சூடும் அழகராய்த் தேவர்கள் வலப்புறமாகச் சுற்றி வந்து துதிக்குமாறு காஞ்சி மேற்றளியனார் அமர்ந்துள்ளார்.

428 ஊனவ ருயிரி னோடு

முலகங்க ளூழி யாகித்

தானவர் தனமு மாகித்

தனஞ்சய னோடெ திர்ந்த

கானவர் காள கண்டர்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏனமக் கோடு பூண்டா

ரிலங்குமேற் றளிய னாரே.(4.043.5)

  நீலகண்டராய், எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய், அருச்சுனனோடு எதிர்த்துப் போரிட்ட வேடராய், உலகங்களிலும், ஊழிகளிலும், உடம்பினுள்ளும், உயிரினுள்ளும் உடனாய்க் கலந்து இருப்பவராய்த் தானம் செய்பவராய்ச் செல்வ வடிவினராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார்.

429 மாயனாய் மால னாகி

மலரவ னாகி மண்ணாய்த்

தேயமாய்த் திசையெட் டாகித்

தீர்த்தமாய்த் திரிதர் கின்ற

காயமாய்க் காயத் துள்ளார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

ஏயமென் றோளி பாக

ரிலங்குமேற் றளிய னாரே.(4.043.6)

  தமக்குப் பொருந்திய மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய், திருமாலாகவும், இந்திரனாகவும், பிரமனாகவும், நிலமாகவும், நாடாகவும் எண் திசைகளாகவும் புனித நீர்களாகவும் இயங்குதிணைகளுக்கு உரிய உடல்களாகவும், அவ்வுடல்களின் உள் இருப்பவராகவும் காஞ்சிமேற்றளியனார் கரந்து எங்கும் பரந்து உள்ளார்.

430 மண்ணினை யுண்ட மாயன்

றன்னையோர் பாகங் கொண்டார்

பண்ணினைப் பாடி யாடும்

பத்தர்கள் சித்தங் கொண்டார்

கண்ணினை மூன்றுங் கொண்டார்

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

எண்ணினை யெண்ண வைத்தா

ரிலங்குமேற் றளிய னாரே.(4.043.7)

  உலகை விழுங்கிய திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவராய், இன்னிசைகளைப் பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய், முக் கண்ணராய், அடியார்களுடைய எண்ணத்திலே தம்மையே தியானிக்குமாறு வைத்தவராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார்.

431 செல்வியைப் பாகங் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்

மல்லிகைக் கண்ணி யோடு

மாமலர்க் கொன்றை சூடிக்

கல்வியைக் கரையி லாத

காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

எல்லியை விளங்க நின்றா

ரிலங்குமேற் றளிய னாரே.(4.043.8)

  பார்வதிபாகராய், முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சிநகரிலே, சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார்.

432 வேறிணை யின்றி யென்றும்

விளங்கொளி மருங்கி னாளைக்

கூறியல் பாகம் வைத்தார்

கோளரா மதியும் வைத்தார்

ஆறினைச் சடையுள் வைத்தார்

அணிபொழிற் கச்சி தன்னுள்

ஏறினை யேறு மெந்தை

யிலங்குமேற் றளிய னாரே.(4.043.9)

  தனக்கு இணையில்லாதபடி ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார்.

433 தென்னவன் மலையெ டுக்கச்

சேயிழை நடுங்கக் கண்டு

மன்னவன் விரலா லூன்ற

மணிமுடி நெரிய வாயால்

கன்னலின் கீதம் பாடக்

கேட்டவர் காஞ்சி தன்னுள்

இன்னவற் கருளிச் செய்தா

ரிலங்குமேற் றளிய னாரே.(4.043.10)

  காஞ்சியில் இலங்கும் மேற்றளியனார் தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக் கண்டு, என்றும் நிலையாயிருக்கும் அவர் தம் விரலால் அழுத்த, அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப் பின் அவன் வாயினால் கரும்பைப் போன்ற இனிய பாடல்கள் பாட, அவற்றைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு இன்னருள் செய்தவராவர்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.