LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-36

2.036.திருஇரும்பூளை 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர். 
தேவியார் - ஏலவார்குழலம்மை. 
1852 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் 
வாரார் முலைமங் கையொடும் முடனாகி 
ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே. 2.036.1
சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ? இதனைச் சொல்வீராக. 
1853 தொழலார் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர் 
குழலார் மொழிக்கோல் வளையோடு டனாகி 
எழிலா ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன் 
கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே. 2.036.2
வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால் கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 
1854 அன்பா லடிகை தொழுவீ ரறியீரே 
மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி 
இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 3 2.036.d
அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ! 
1855 நச்சித் தொழுவீர் கணமக் கிதுசொல்லீர் 
கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி 
இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 2.036. 4
சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சி மாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக. 
1856 சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர் 
நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி 
எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
புற்றா டரவோ டென்புபூண் டபொருளே. 2.036. 5
சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக. 
1857 தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர் 
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி 
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
காடார் கடுவே டுவனா னகருத்தே. 2.036. 6
இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? சொல்வீராக. 
1858 ஒருக்கும் மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர் 
பருக்கை மதவே ழமுரித் துமையோடும் 
இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே. 2.036. 8
ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே! நீண்ட கையையும் மதத்தையும் உடைய யானையை உரித்து உமையம்மையோடு இரும்பூளையை இடமாகக் கொண்ட ஈசன் இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது ஏனோ? சொல்வீராக. 
1859 துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர் 
கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி 
இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. 2.036. 9
துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால், பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ? சொல்வீராக. 
1860 துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர் 
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி 
இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. 2.036.10
திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும் தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதி தேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமணபௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக. 
1861 எந்தை யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் 
சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன் 
செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார் 
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. 2.036. 11
எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

2.036.திருஇரும்பூளை 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர். தேவியார் - ஏலவார்குழலம்மை. 

1852 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங் கையொடும் முடனாகி ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன் காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே. 2.036.1
சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ? இதனைச் சொல்வீராக. 

1853 தொழலார் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர் குழலார் மொழிக்கோல் வளையோடு டனாகி எழிலா ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன் கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே. 2.036.2
வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால் கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக. 

1854 அன்பா லடிகை தொழுவீ ரறியீரே மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 3 2.036.d
அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ! 

1855 நச்சித் தொழுவீர் கணமக் கிதுசொல்லீர் கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன் உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 2.036. 4
சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சி மாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக. 

1856 சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர் நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் புற்றா டரவோ டென்புபூண் டபொருளே. 2.036. 5
சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக. 

1857 தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர் சேடார் குழற்சே யிழையோ டுடனாகி ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன் காடார் கடுவே டுவனா னகருத்தே. 2.036. 6
இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? சொல்வீராக. 

1858 ஒருக்கும் மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர் பருக்கை மதவே ழமுரித் துமையோடும் இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன் அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே. 2.036. 8
ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே! நீண்ட கையையும் மதத்தையும் உடைய யானையை உரித்து உமையம்மையோடு இரும்பூளையை இடமாகக் கொண்ட ஈசன் இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது ஏனோ? சொல்வீராக. 

1859 துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர் கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. 2.036. 9
துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால், பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ? சொல்வீராக. 

1860 துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர் பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன் அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. 2.036.10
திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும் தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதி தேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமணபௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக. 

1861 எந்தை யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன் செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார் பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. 2.036. 11
எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.