LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-37

2.037.திருமறைக்காடு 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். 
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 
1862 சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும் 
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா 
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன் 
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 2.037. 1
இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்லவண்ணம் விடை அருள்வாயாக. 
1863 சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும் 
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா 
மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல் 
கங்கை சடைமே லடைவித் தகருத்தே. 2.037.2
சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ? 
1864 குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல் 
மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா 
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல் 
அரவம் மதியோ டடைவித் தலழகே. 2.037.3
குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள் பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாதோ? 
1865 படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம் 
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா 
உடலம் முமைபங் கமதாகியு மென்கொல் 
கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே. 2.037.4
படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ? 
1866 வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட 
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா 
ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல் 
கானார் கடுவே டுவனா னகருத்தே. 2.037. 5
தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக்காட்டில் உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ? 
1867 பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி 
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா 
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல் 
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. 2.037.6
பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ளவனே! நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக. 
1868 வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும் 
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா 
மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல் 
காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே. 2.037.7
விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின் அயலே உள்ள திருமா மறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில் திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ? 
1869 கலங்கொள் கடலோ தமுலாவு கரைமேல் 
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா 
இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த 
அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே. 2.037. 8
மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரைமீது வலம் வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ? 
1870 கோனென் றுபல்கோ டியுருத் திரர்போற்றும் 
தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா 
ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல் 
வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே. 2.037.9
பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும், தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ? 
1871 வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற 
ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய் 
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல் 
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 2.037. 10
வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ? 
1872 காழிந் நகரான் கலைஞான சம்பந்தன் 
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த 
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார் 
வாழி யுலகோர் தொழவா னடைவாரே. 2.037.11
காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞான சம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர் தொழவான் அடைவர். 
திருச்சிற்றம்பலம்

2.037.திருமறைக்காடு 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 

1862 சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 2.037. 1
இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்லவண்ணம் விடை அருள்வாயாக. 

1863 சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும் வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல் கங்கை சடைமே லடைவித் தகருத்தே. 2.037.2
சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ? 

1864 குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல் மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல் அரவம் மதியோ டடைவித் தலழகே. 2.037.3
குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள் பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாதோ? 

1865 படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம் மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா உடலம் முமைபங் கமதாகியு மென்கொல் கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே. 2.037.4
படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ? 

1866 வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல் கானார் கடுவே டுவனா னகருத்தே. 2.037. 5
தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக்காட்டில் உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ? 

1867 பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல் தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. 2.037.6
பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ளவனே! நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக. 

1868 வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும் சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல் காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே. 2.037.7
விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின் அயலே உள்ள திருமா மறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில் திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ? 

1869 கலங்கொள் கடலோ தமுலாவு கரைமேல் வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே. 2.037. 8
மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரைமீது வலம் வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ? 

1870 கோனென் றுபல்கோ டியுருத் திரர்போற்றும் தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல் வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே. 2.037.9
பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும், தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ? 

1871 வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய் ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல் ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 2.037. 10
வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ? 

1872 காழிந் நகரான் கலைஞான சம்பந்தன் வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார் வாழி யுலகோர் தொழவா னடைவாரே. 2.037.11
காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞான சம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர் தொழவான் அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.