LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-38

2.038.திருச்சாய்க்காடு 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர். 
தேவியார் - குயிலுநன்மொழியம்மை. 
1873 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச் 
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித் 
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே. 2.038. 1
நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும். 
1874 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும் 
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில் 
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித் 
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 2.038. 2
பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும் திருச்சாய்க்காடு ஆகும். 
1875 நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ 
டாறு சூடு மமரர் பிரானுறை கோயில் 
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத் 
தாறு தண்கத லிப்புதன் மேவுசாய்க் காடே. 2.038. 3
மணம்வீசும் வில்வம். மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஓங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும். 
1876 வரங்கள் வண்புகழ் மன்னிய வெந்தை மருவார் 
புரங்கள் மூன்றும் பொடிபட வெய்தவன் கோயில் 
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித் 
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே. 2.038. 4
வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும். பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும். 
1877 ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று 
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில் 
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர்வண்பூந் 
தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க்காடே. 2.038. 5
மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச்செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும் உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும். 
1878 துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில் 
அங்கொர் நீழ லளித்தவெம் மானுறை கோயில் 
வங்க மங்கொளி ரிப்பியு முத்து மணியுஞ் 
சங்கும் வாரித் தடங்கட லுந்துசாய்க் காடே. 2.038.6
உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும். 
1879 வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர் 
ஓத நஞ்சணி கண்ட ருகந்துறை கோயில் 
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத் 
தாது கண்டு பொழின்மறைந் தூடுசாய்க் காடே. 2.038.7
வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண்வண்டோடு புன்னை மலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும். 
1880 இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த 
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில் 
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந் 
தருக்கு லாவிய தண்பொழி னீடுசாய்க் காடே. 2.038. 8
தான்வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும். 
1881 மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த 
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில் 
சேலி னேர்விழி யார்மயி லாலச் செருந்தி 
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே. 2.038. 9
திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும். 
1882 ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும் 
ஆத்த மாக வறிவரி தாயவன் கோயில் 
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே 
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே. 2.038. 10
அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சரய்க்காடாகும். 
1883 ஏனை யோர்புகழ்ந் தேத்திய வெந்தைசாய்க் காட்டை 
ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும் 
ஊன மின்றி யுரைசெய வல்லவர் தாம்போய் 
வான நாடினி தாள்வரிம் மானிலத் தோரே. 2.038.11
சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர் புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம்மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர். 
திருச்சிற்றம்பலம்

2.038.திருச்சாய்க்காடு 
பண் - இந்தளம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர். தேவியார் - குயிலுநன்மொழியம்மை. 

1873 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச் சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித் தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே. 2.038. 1
நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில், மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும் வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும். 

1874 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும் வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில் கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித் தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 2.038. 2
பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும் திருச்சாய்க்காடு ஆகும். 

1875 நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ டாறு சூடு மமரர் பிரானுறை கோயில் ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத் தாறு தண்கத லிப்புதன் மேவுசாய்க் காடே. 2.038. 3
மணம்வீசும் வில்வம். மிக இளையபிறை ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி ஆகியன ஓங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும். 

1876 வரங்கள் வண்புகழ் மன்னிய வெந்தை மருவார் புரங்கள் மூன்றும் பொடிபட வெய்தவன் கோயில் இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித் தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே. 2.038. 4
வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும். பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல் நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும். 

1877 ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில் மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர்வண்பூந் தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க்காடே. 2.038. 5
மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச்செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும், வளையணிந்த கையையும் உடைய நுளைச்சியர் வளமையான தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும். 

1878 துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில் அங்கொர் நீழ லளித்தவெம் மானுறை கோயில் வங்க மங்கொளி ரிப்பியு முத்து மணியுஞ் சங்கும் வாரித் தடங்கட லுந்துசாய்க் காடே. 2.038.6
உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல், மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும். 

1879 வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர் ஓத நஞ்சணி கண்ட ருகந்துறை கோயில் மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத் தாது கண்டு பொழின்மறைந் தூடுசாய்க் காடே. 2.038.7
வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண்வண்டோடு புன்னை மலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும். 

1880 இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில் மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந் தருக்கு லாவிய தண்பொழி னீடுசாய்க் காடே. 2.038. 8
தான்வீற்றிருக்கும் நீண்ட கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள்செய்த சிவபிரானது கோயில், மணம் பொருந்திய மல்லிகை, சண்பகம் ஆகிய வளமான பூக்களைக்கொண்ட மரங்கள் விளங்கும் தண்பொழில்களை உடைய சாய்க்காடாகும். 

1881 மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில் சேலி னேர்விழி யார்மயி லாலச் செருந்தி காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே. 2.038. 9
திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும், ஆகிய சிவபெருமான் உறையும் கோயில், சேல்மீன் போன்றகண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும், தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருந்திமரங்கள் செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும். 

1882 ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும் ஆத்த மாக வறிவரி தாயவன் கோயில் வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே. 2.038. 10
அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சரய்க்காடாகும். 

1883 ஏனை யோர்புகழ்ந் தேத்திய வெந்தைசாய்க் காட்டை ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும் ஊன மின்றி யுரைசெய வல்லவர் தாம்போய் வான நாடினி தாள்வரிம் மானிலத் தோரே. 2.038.11
சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர் புகழ்ந்து ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம்மாநிலத்தோர் வான நாடு சென்று இனிதாக அரசாளுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.