|
||||||||
காலிஃப்ளவர் சாப்ஸ் (cauliflower chops) |
||||||||
தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று தேங்காய் (துருவியது) - ஒரு கப் பச்சைமிளகாய் - 4 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 10 பல் சோம்பு - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் தனியா - ஒரு டேபிள்ஸ்பூன் கசகசா - 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் கரம்மசாலா - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1.காலிஃப்ளவரை கொதிக்க வைத்த நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். மற்ற எல்லா பொருட்களையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.. 2.தண்ணீரை வடித்து விட்டு மசாலாவில் காலிஃப்ளவரை பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும். 3.பிறகு கடாயில் நல்லெண்ணெயை காய வைத்து காலிஃபிளவரை போட்டு வதக்கவும். சிறிய தீயில் பொன்னிறாமாக வறுக்கவும். காலிஃப்ளவர் சாப்ஸ் ரெடி. |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|