LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-77

4.077.தனித் திருநேரிசை 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
746 கடும்பக னட்ட மாடிக்
கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக்கில்லந் தோறு
முழிதரு மிறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை
நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்
கோவண மரைய தேயோ.
4.077.1
நடுப்பகலிலே கூத்தாடிக்கொண்டு கையில் ஒரு மண்டையோட்டினை ஏந்தி வழங்கப்படும் பிச்சைக்காக வீடுகள் தோறும் உலாவித்திரிகின்ற பெருமானே! இமவான் மகளாகிய சிறந்த அணிகலன்களையும் சுருண்ட மெல்லிய கூந்தலையும், வளைந்த காதணியையும் உடைய பார்வதி உமக்கு மனைவியாக வந்தபோதும், இடுப்பில் கோவணத்துடன்தான் இருந்தீரோ?
747 கோவண முடுத்த வாறுங்
கோளர வசைத்த வாறும்
தீவணச் சாம்பர் பூசித்
திருவுரு விருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப்
புலியுரி யரைய னாரை
ஏவணச் சிலையி னாரை
யாவரே யெழுது வாரே.
4.077.2
கோவணத்தை உடுத்து, கொடிய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி, தீப்போன்ற செந்நிற உடம்பில் சாம்பலைப் பூசி, அழகிய வடிவினராய், செந்தாமரைக் காடு அனைய நிறத்தை உடையவராய், புலித்தோலை இடையில் அணிந்தவராய், அம்புக்கு ஏற்ற அழகிய வில்லை உடையவருமான பெருமானின் வடிவழகினை ஓவியத்தில் எழுதவல்ல ஆற்றல் உடையவர் யாவர்?
748 விளக்கினாற் பெற்ற வின்ப
மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கினன் மலர்தொ டுத்தாற்
றூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின்
மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க்
கடிகடா மருளு மாறே. 
4.077.3
திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால், தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும். கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர். எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன.
749 சந்திரற் சடையில் வைத்த
சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மா
னானல்வெள் ளூர்தி யான்றன்
மந்திர நமச்சி வாய
வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையு நோயும்
வெவ்வழல் விறகிட் டன்றே.
4.077.4
பிறையைச் சடையில் சூடி, எல்லோருக்கும் நன்மை செய்யும் பெருமானாய், சாம வேதம் ஓதுபவனாய் வானத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவனாய், பெரிய வெண்ணிறக் காளை வாகனனாய் உள்ள பெருமானுடைய திருவைந்தெழுத்தை ஓதி, திருநீற்றை அணிந்தால்கொடிய நெருப்பில் இடப்பட்ட விறகு போல நம்முடைய நோய்களும், வினைகளும் வெந்து சாம்பலாகும்.
750 புள்ளு வரைவர் கள்வர்
புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்
தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்க டம்மை
முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்
குணர்வினா லெய்ய லாமே.
4.077.5
வேடர்களும், திருடர்களும் போன்ற ஐம்பொறிகளும் என் உள்ளத்தில் புகுந்து நின்று மகிழ்வோடு துள்ளிக் கொண்டு, அடியேன் தூய வழியிலே செயற்பட ஒட்டாமல் என்னைக் கொள்ளையடிக்கின்றன. தீமைபுரிவதில் நுண்மை உடைய அவற்றைச் சிவபெருமானுடைய திருவடி நிழலிலே, அவை காணாதபடி மறைந்து நின்று சிவஞானம் என்னும் அம்பினால் எய்து அழித்து விடலாம்.
751 தொண்ட னேன்பிறந்து வாளாத்
தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்
பெரியதோ ரவாவிற் பட்டேன்
அண்டனே யமரர் கோவே
யறிவனே யஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந்
திகழ்தரு சடையி னானே.
4.077.6
தேவனே! தேவர்தலைவனே! முக்காலமும் அறிபவனே! தௌந்த அலைகளை உடைய கங்கையைச் சூடிய செவ்வொளி விளங்கும் சடையனே! உன் அடியவனாகிய யான், மனிதனாகப் பிறந்து வீணாகப் பழைய வினைகளாகிய குழியிலே விழுந்துஇந்த உடம்பைச் சுமந்து கொண்டு நாள்தோறும் பெரிய ஆசையில் அகப்பட்டுத் தடுமாறுகின்றேன். அடியேனை அஞ்சேல்! என்று அருளுவாயாக. 
752 பாறினாய் பாவி நெஞ்சே
பன்றிபோ லளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயிற்
சிவகதி திண்ண மாகும்
ஊறலே யுவர்ப்பு நாறி
யுதிரமே யொழுகும் வாசல்
கூறையான் மூடக் கண்டு
கோலமாக் கருதி னாயே.
4.077.7
தீவினையை உடைய நெஞ்சமே! பன்றியைப் போல இந்த உலகவாழ்வாகிய சேற்றில் அகப்பட்டு, பல திசைகளிலும் ஓடுகின்றாய். உப்பு நீர் ஊறி நாற்றமெடுத்துக் குருதி ஒழுகும் துவாரங்கள் மேற்கூரையாகிய தோலாலே மூடப்பட்டு உள்ள உடம்பின் நிலையை நீ அழகாகக் கருதுகிறாய். இதன் புன்மையைத் தௌந்து நீ இறைவனை விருப்புற்று நினைப்பாயானால் உனக்கு நிச்சயமாகச் சிவகதி கிட்டும்.
753 உய்த்தகா லுதயத் தும்ப
ருமையவ ணடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன்
வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கண்
மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று
வாடிநா னொடுங்கி னேனே.
4.077.8
இராவணன், கயிலை மலையை எடுக்கத் தொடங்கிய காலத்தில், பார்வதிக்கு ஏற்பட்ட அச்சம் தீர, பெருமான் தன்னுடைய கால் விரலை வைத்து அழுத்த அதற்கு இலக்காக இராவணன், தன் பெரிய தலைகளைக்கொடுத்தான். பிறை சூடிய மூர்த்தியாகிய பெருமானுடைய, வண்டுகள் மொய்க்கும் நறுமணம் உடைய மலர் போன்ற திருவடிகளை அப்பெருமான் கரடுமுரடான என் தலைமீது வைத்தால் அத்திருவடிகள் வருந்துமென்று அவை என் தலையைச் சாராதவாறு நான் தாழ்ந்து ஒடுங்கினேன்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.