LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-40

2.040.திருப்பிரமபுரம் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
1895 எம்பிரா னெனக்கமுதம் 
ஆவானுந் தன்னடைந்தார் 
தம்பிரா னாவானுந் 
தழலேந்து கையானுங் 
கம்பமா கரியுரித்த 
காபாலி கறைக்கண்டன் 
வம்புலாம் பொழிற்பிரம 
புரத்துறையும் வானவனே.
2.040. 1
எமக்குத் தலைவன், எனக்கு அமுதம் போல இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான், அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி, இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும் வானவனே யாவான். 
1896 தாமென்றும் மனந்தளராத் 
தகுதியரா யுலகத்துக் 
காமென்று சரண்புகுந்தார் 
தமைக்காக்குங் கருணையினான் 
ஓமென்று மறைபயில்வார் 
பிரமபுரத் துறைகின்ற 
காமன்றன் னுடலெரியக் 
கனல்சேர்ந்த கண்ணானே.
2.040. 2
உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன் இவனேயாம் என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய்த் தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்யாவன் எனில் ஓம் எனக்கூறி நான் மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில் விளங்குகின்ற காமனின் உடலை எரியச் செய்த கண்ணுதலோனே யாவான். 
1897 நன்னெஞ்சே யுனையிரந்தேன் 
நம்பெருமான் றிருவடியே 
உன்னஞ்செய் திருகண்டாய் 
உய்வதனை வேண்டுதியேல் 
அன்னஞ்சேர் பிரமபுரத் 
தாரமுதை யெப்போதும் 
பன்னஞ்சீர் வாயதுவே 
பார்கண்ணே பரிந்திடவே.
2.040. 3
நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபிரான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள்செய்ய அவனையே பார். 
1898 சாநாளின் றிம்மனமே 
சங்கைதனைத் தவிர்ப்பிக்குங் 
கோனாளுந் திருவடிக்கே 
கொழுமலர்தூ வெத்தனையுந் 
தேனாளும் பொழிற்பிரம 
புரத்துறையுந் தீவணனை 
நாநாளு நன்னியமஞ் 
செய்தவன்சீர் நவின்றேத்தே.
2.040. 4
மனமே! சாகும் நாள் இன்றி, இனிது வாழவும் மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய தலைவனின் திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும் தூவி வருவாயாக. நாவே, தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த பிரமபுரத்துறையும் தீவண்ணனை நல்ல நியமத்துடன் இருந்து அவன் புகழை நவின்று ஏத்துவாயாக. 
1899 கண்ணுதலான் வெண்ணீற்றான் 
கமழ்சடையான் விடையேறி 
பெண்ணிதமா முருவத்தான் 
பிஞ்ஞகன்பேர் பலவுடையான் 
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் 
பிரமபுரந் தொழவிரும்பி 
எண்ணுதலாஞ் செல்வத்தை 
யியல்பாக வறிந்தோமே.
2.040.5
நுதல் விழியனும், வெண்ணீறு அணிந்தவனும் மணம் கமழும் சடையினனும், விடையேறி வருபவனும், இனிய பெண்ணொடு கூடிய உருவத்தினனும், பிஞ்ஞகனும், பேர் பல உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றியபுகழ் உடைய பிரமபுரத்தைத் தொழவிரும்பும் நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம் பெற்றுள்ளோம். 
1900 எங்கேனும் யாதாகிப் 
பிறந்திடினுந் தன்னடியார்க் 
கிங்கேயென் றருள்புரியும் 
எம்பெருமா னெருதேறித் 
கொங்கேயு மலர்ச்சோலைக் 
குளிர்பிரம புரத்துறையுஞ் 
சங்கேயொத் தொளிர்மேனிச் 
சங்கரன்றன் றன்மைகளே.
2.040. 6
தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்து தண்ணிதாக விளங்கும் பிரமபுரத்துள் சங்குபோன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன்தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்து எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச்சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும். 
1901 சிலையதுவெஞ் சிலையாகத் 
திரிபுரமூன் றெரிசெய்த 
இலைநுனைவேற் றடக்கையன் 
ஏந்திழையா ளொருகூறன் 
அலைபுனல்சூழ் பிரமபுரத் 
தருமணியை யடிபணிந்தால் 
நிலையுடைய பெருஞ்செல்வம் 
நீடுலகிற் பெறலாமே.
2.040. 7
மேருமலையைக் கொடிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்து அழித்தவனும், மூவிலை வடிவாகக் கூரிய முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும், உமையொரு பாகனும் ஆகிய கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி போல் வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால் வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம். 
1902 எரித்தமயிர் வாளரக்கன் 
வெற்பெடுக்கத் தோளொடுதாள் 
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி 
நீறணிந்த மேனியினான் 
உரித்தவரித் தோலுடையான் 
உறைபிரம புரந்தன்னைத் 
தரித்தமன மெப்போதும் 
பெறுவார்தாந் தக்காரே.
2.040.8
எரிபோலும் தலைமயிரை உடைய, வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவன் தோளையும் தாளையும் நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த மேனியனும், யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை எண்ணுவார் எப்போதும் தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்.
1903 கரியானும் நான்முகனுங் 
காணாமைக் கனலுருவாய் 
அரியானாம் பரமேட்டி 
அரவஞ்சே ரகலத்தான் 
றெரியாதா னிருந்துறையுந் 
திகழ்பிரம புரஞ்சேர 
உரியார்தா மேழுலகும் 
உடனாள வுரியாரே.
2.040. 9
திருமால் பிரமர் காணாதவாறு எரிஉருவாய் நீண்டு அவர்க்கு அரியன் ஆனவனும், மேலான நிலையினனும், பாம்பணிந்த மார்பினனும், காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார் ஏழு உலகங்களையும் அரசாளுதற்கு உரிமை உடையோராவர். 
1904 உடையிலார் சீவரத்தார் 
தன்பெருமை யுணர்வரியான் 
முடையிலார் வெண்டலைக்கை 
மூர்த்தியாந் திருவுருவன் 
பெடையிலார் வண்டாடும் 
பொழிற்பிரம புரத்துறையுஞ் 
சடையிலார் வெண்பிறையான் 
தாள்பணிவார் தக்காரே.
2.040. 10
உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய சமணர் புத்தர்களால் தன்பெருமைகள் உணர இயலாதவனும், நாற்றம் பொருந்திய வெண்ணிறத் தலையோட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி எனப்பெறும் திருவுருவினனும், சடையில் பிறையணிந்தவனும் ஆகிய பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி விளையாடும் பொழில்சூழ்ந்த பிரமபுரத்துப் பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கோர் எனப் பெயர் பெறுவர். 
1905 தன்னடைந்தார்க் கின்பங்கள் 
தருவானைத் தத்துவனைக் 
கன்னடைந்த மதிற்பிரம 
புரத்துறையுங் காவலனை 
முன்னடைந்தான் சம்பந்தன் 
மொழிபத்து மிவைவல்லார் 
பொன்னடைந்தார் போகங்கள் 
பலவடைந்தார் புண்ணியரே.
2.040. 11
தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள் தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும், கல்லாலியன்ற மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின் அருளை மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள், பொன்னையும் போகங்கள் பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

2.040.திருப்பிரமபுரம் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

1895 எம்பிரா னெனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார் தம்பிரா னாவானுந் தழலேந்து கையானுங் கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன் வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.2.040. 1
எமக்குத் தலைவன், எனக்கு அமுதம் போல இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான், அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி, இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும் வானவனே யாவான். 

1896 தாமென்றும் மனந்தளராத் தகுதியரா யுலகத்துக் காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான் ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.2.040. 2
உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன் இவனேயாம் என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய்த் தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்யாவன் எனில் ஓம் எனக்கூறி நான் மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில் விளங்குகின்ற காமனின் உடலை எரியச் செய்த கண்ணுதலோனே யாவான். 

1897 நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் றிருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல் அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை யெப்போதும் பன்னஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.2.040. 3
நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபிரான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே! அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள்செய்ய அவனையே பார். 

1898 சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங் கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந் தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை நாநாளு நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.2.040. 4
மனமே! சாகும் நாள் இன்றி, இனிது வாழவும் மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய தலைவனின் திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும் தூவி வருவாயாக. நாவே, தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த பிரமபுரத்துறையும் தீவண்ணனை நல்ல நியமத்துடன் இருந்து அவன் புகழை நவின்று ஏத்துவாயாக. 

1899 கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான் விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக வறிந்தோமே.2.040.5
நுதல் விழியனும், வெண்ணீறு அணிந்தவனும் மணம் கமழும் சடையினனும், விடையேறி வருபவனும், இனிய பெண்ணொடு கூடிய உருவத்தினனும், பிஞ்ஞகனும், பேர் பல உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றியபுகழ் உடைய பிரமபுரத்தைத் தொழவிரும்பும் நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம் பெற்றுள்ளோம். 

1900 எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமா னெருதேறித் கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ் சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் றன்மைகளே.2.040. 6
தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்து தண்ணிதாக விளங்கும் பிரமபுரத்துள் சங்குபோன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன்தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்து எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச்சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும். 

1901 சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன் அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை யடிபணிந்தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.2.040. 7
மேருமலையைக் கொடிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்து அழித்தவனும், மூவிலை வடிவாகக் கூரிய முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும், உமையொரு பாகனும் ஆகிய கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி போல் வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால் வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம். 

1902 எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள் நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான் உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத் தரித்தமன மெப்போதும் பெறுவார்தாந் தக்காரே.2.040.8
எரிபோலும் தலைமயிரை உடைய, வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவன் தோளையும் தாளையும் நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த மேனியனும், யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை எண்ணுவார் எப்போதும் தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்.

1903 கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய் அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான் றெரியாதா னிருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர உரியார்தா மேழுலகும் உடனாள வுரியாரே.2.040. 9
திருமால் பிரமர் காணாதவாறு எரிஉருவாய் நீண்டு அவர்க்கு அரியன் ஆனவனும், மேலான நிலையினனும், பாம்பணிந்த மார்பினனும், காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார் ஏழு உலகங்களையும் அரசாளுதற்கு உரிமை உடையோராவர். 

1904 உடையிலார் சீவரத்தார் தன்பெருமை யுணர்வரியான் முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன் பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ் சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.2.040. 10
உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய சமணர் புத்தர்களால் தன்பெருமைகள் உணர இயலாதவனும், நாற்றம் பொருந்திய வெண்ணிறத் தலையோட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி எனப்பெறும் திருவுருவினனும், சடையில் பிறையணிந்தவனும் ஆகிய பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி விளையாடும் பொழில்சூழ்ந்த பிரமபுரத்துப் பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கோர் எனப் பெயர் பெறுவர். 

1905 தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக் கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார் பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.2.040. 11
தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள் தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும், கல்லாலியன்ற மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின் அருளை மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள், பொன்னையும் போகங்கள் பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.