LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-41

2.041.திருச்சாய்க்காடு 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர். 
தேவியார் - குயிலுநன்மொழியம்மை. 
1906 மண்புகார் வான்புகுவர் 
மனமிளையார் பசியாலுங் 
கண்புகார் பிணியறியார் 
கற்றாருங் கேட்டாரும் 
விண்புகா ரெனவேண்டா 
வெண்மாட நெடுவீதித் 
தண்புகார்ச் சாய்க்காட்டெந் 
தலைவன்றாள் சார்ந்தாரே.
2.041. 1
வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார். 
1907 போய்க்காடே மறைந்துறைதல் 
புரிந்தானும் பூம்புகார்ச் 
சாய்க்காடே பதியாக 
வுடையானும் விடையானும் 
வாய்க்காடு முதுமரமே 
யிடமாக வந்தடைந்த 
பேய்க்காடல் புரிந்தானும் 
பெரியோர்கள் பெருமானே.
2.041.2
இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான். 
1908 நீநாளு நன்னெஞ்சே 
நினைகண்டா யாரறிவார் 
சாநாளும் வாழ்நாளுஞ் 
சாய்க்காட்டெம் பெருமாற்கே. 
பூநாளுந் தலைசுமப்பப் 
புகழ்நாமஞ் செவிகேட்ப 
நாநாளும் நவின்றேத்தப் 
பெறலாமே நல்வினையே.
2.041.3
நல்லநெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம். 
1909 கட்டலர்த்த மலர்தூவிக் 
கைதொழுமின் பொன்னியன்ற 
தட்டலர்த்த பூஞ்செருந்தி 
கோங்கமருந் தாழ்பொழில்வாய் 
மொட்டலர்த்த தடந்தாழை 
முருகுயிர்க்குங் காவிரிப்பூம் 
பட்டினத்துச் சாய்க்காட்டெம் 
பரமேட்டி பாதமே.
2.041. 4
பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்டவிழ்க்கப்பட்ட மலர்களைத்தூவிக் கைகூப்பி வணங்குமின். 
1910 கோங்கன்ன குவிமுலையாள் 
கொழும்பணைத்தோட் கொடியிடையைப் 
பாங்கென்ன வைத்துகந்தான் 
படர்சடைமேற் பான்மதியந் 
தாங்கினான் பூம்புகார்ச் 
சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ் 
ஓங்கினா ரோங்கினா 
ரெனவுரைக்கு முலகமே.
2.041. 5
கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார். 
1911 சாந்தாக நீறணிந்தான் 
சாய்க்காட்டான் காமனைமுன் 
தீந்தாக மெரிகொளுவச் 
செற்றுகந்தான் றிருமுடிமேல் 
ஓய்ந்தார மதிசூடி 
யொளிதிகழு மலைமகடோள் 
தோய்ந்தாகம் பாகமா 
வுடையானும் விடையானே.
2.041.6
சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன். 
1912 மங்குல்தோய் மணிமாட 
மதிதவழு நெடுவீதிச் 
சங்கெலாங் கரைபொருது 
திரைபுலம்புஞ் சாய்க்காட்டான் 
கொங்குலா வரிவண்டின் 
னிசைபாடு மலர்கொன்றைத் 
தொங்கலா னடியார்க்குச் 
சுவர்க்கங்கள் பொருளலவே.
2.041. 7
மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா. 
1913 தொடலரிய தொருகணையாற் 
புரமூன்று மெரியுண்ணப் 
படவரவத் தெழிலாரம் 
பூண்டான்பண் டரக்கனையுந் 
தடவரையாற் றடவரைத்தோ 
ளூன்றினான் சாய்க்காட்டை 
இடவகையா வடைவோமென் 
றெண்ணுவார்க் கிடரிலையே.
2.041. 8
தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக் கருதி அடைவோர்க்கு இடர் இல்லை. 
1914 வையநீ ரேற்றானு 
மலருறையு நான்முகனும் 
ஐயன்மா ரிருவர்க்கு 
மளப்பரிதா லவன்பெருமை 
தையலார் பாட்டோவாச் 
சாய்க்காட்டெம் பெருமானைத் 
தெய்வமாப் பேணாதார் 
தௌவுடைமை தேறோமே.
2.041. 9
இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர் பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார். 
1915 குறங்காட்டு நால்விரலிற் 
கோவணத்துக் கோலோவிப்போய் 
அறங்காட்டுஞ் சமணருஞ் 
சாக்கியரு மலர்தூற்றுந் 
திறங்காட்டல் கேளாதே 
தௌவுடையீர் சென்றடைமின் 
புறங்காட்டி லாடலான் 
பூம்புகார்ச் சாய்க்காடே.
2.041. 10
தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக் கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச்ர்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக. 
1916 நொம்பைந்து புடைத்தொல்கு 
நூபுரஞ்சேர் மெல்லடியார் 
அம்பந்தும் வரிக்கழலு 
மரவஞ்செய் பூங்காழிச் 
சம்பந்தன் றமிழ்பகர்ந்த 
சாய்க்காட்டுப் பத்தினையும் 
எம்பந்த மெனக்கருதி 
யேத்துவார்க் கிடர்கெடுமே.
2.041. 11
பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற் சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக் கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்து வார்க்கு இடர்கள் கெடும். 
திருச்சிற்றம்பலம்

2.041.திருச்சாய்க்காடு 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர். தேவியார் - குயிலுநன்மொழியம்மை. 

1906 மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங் கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும் விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.2.041. 1
வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார். 

1907 போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக வுடையானும் விடையானும் வாய்க்காடு முதுமரமே யிடமாக வந்தடைந்த பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.2.041.2
இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான். 

1908 நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே. பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.2.041.3
நல்லநெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம். 

1909 கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய் மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.2.041. 4
பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்டவிழ்க்கப்பட்ட மலர்களைத்தூவிக் கைகூப்பி வணங்குமின். 

1910 கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பான்மதியந் தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ் ஓங்கினா ரோங்கினா ரெனவுரைக்கு முலகமே.2.041. 5
கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார். 

1911 சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன் தீந்தாக மெரிகொளுவச் செற்றுகந்தான் றிருமுடிமேல் ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழு மலைமகடோள் தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.2.041.6
சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன். 

1912 மங்குல்தோய் மணிமாட மதிதவழு நெடுவீதிச் சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான் கொங்குலா வரிவண்டின் னிசைபாடு மலர்கொன்றைத் தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.2.041. 7
மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா. 

1913 தொடலரிய தொருகணையாற் புரமூன்று மெரியுண்ணப் படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந் தடவரையாற் றடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை இடவகையா வடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.2.041. 8
தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக் கருதி அடைவோர்க்கு இடர் இல்லை. 

1914 வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும் ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தௌவுடைமை தேறோமே.2.041. 9
இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர் பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார். 

1915 குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் கோலோவிப்போய் அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரு மலர்தூற்றுந் திறங்காட்டல் கேளாதே தௌவுடையீர் சென்றடைமின் புறங்காட்டி லாடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.2.041. 10
தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக் கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச்ர்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக. 

1916 நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச் சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே.2.041. 11
பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற் சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக் கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்து வார்க்கு இடர்கள் கெடும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.