LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-42

2.042.திருஆக்கூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர். 
தேவியார் - கட்கநேத்திரவம்மை. 
1917 அக்கிருந்த வாரமும் 
ஆடரவும் ஆமையும் 
தொக்கிருந்த மார்பினான் 
தோலுடையான் வெண்ணீற்றான் 
புக்கிருந்த தொல்கோயில் 
பொய்யிலா மெய்ந்நெறிக்கே 
தக்கிருந்தார் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042.1
என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேர அணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமை யான கோயில், பொய்யில்லாத மெய்ந் நெறியாகிய சைவ சமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும். 
1918 நீரார வார்சடையான் 
நீறுடையா னேறுடையான் 
காரார்பூங் கொன்றையினான் 
காதலித்த தொல்கோயில் 
கூராரல் வாய்நிறையக் 
கொண்டயலே கோட்டகத்தில் 
தாராமல் காக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 2
கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்ட வனும், கார் காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும். 
1919 வாளார்கண் செந்துவர்வாய் 
மாமலையான் றன்மடந்தை 
தோளாகம் பாகமாப் 
புல்கினான் தொல்கோயில் 
வேளாள ரென்றவர்கள் 
வள்ளன்மையான் மிக்கிருக்கும் 
தாளாளர் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 3
ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியை தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும். 
1920 கொங்குசேர் தண்கொன்றை 
மாலையினான் கூற்றடரப் 
பொங்கினான் பொங்கொளிசேர் 
வெண்ணீற்றான் பூங்கோயில் 
அங்கமா றோடும் 
அருமறைகள் ஐவேள்வி 
தங்கினார் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 4
தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும். 
1921 வீக்கினா னாடரவம் 
வீழ்ந்தழிந்தார் வெண்டலையென் 
பாக்கினான் பலகலன்கள் 
ஆதரித்துப் பாகம்பெண் 
ஆக்கினான் தொல்கோயில் 
ஆம்பலம்பூம் பொய்கைபுடை 
தாக்கினார் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 5
ஆடுகின்ற பாம்பைக் கச்சாக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம் ஆகும். 
1922 பண்ணொளிசேர் நான்மறையான் 
பாடலினோ டாடலினான் 
கண்ணொளிசேர் நெற்றியினான் 
காதலித்த தொல்கோயில் 
விண்ணொளிசேர் மாமதியந் 
தீண்டியக்கால் வெண்மாடம் 
தண்ணொளிசேர் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 6
பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். 
1923 வீங்கினார் மும்மதிலும் 
வில்வரையால் வெந்தவிய 
வாங்கினார் வானவர்கள் 
வந்திறைஞ்சுந் தொல்கோயில் 
பாங்கினார் நான்மறையோ 
டாறங்கம் பலகலைகள் 
தாங்கினார் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 7
பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும். 
1924 கன்னெடிய குன்றெடுத்தான் 
தோளடரக் காலூன்றி 
இன்னருளா லாட்கொண்ட 
வெம்பெருமான் தொல்கோயில் 
பொன்னடிக்கே நாடோறும் 
பூவோடு நீர்சுமக்கும் 
தன்னடியார் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 8
கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணை காட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமடம் ஆகும். 
1925 நன்மையா னாரணனும் 
நான்முகனுங் காண்பரிய 
தொன்மையான் தோற்றங்கே 
டில்லாதான் தொல்கோயில் 
இன்மையாற் சென்றிரந்தார்க் 
கில்லையென்னா தீந்துவக்குந் 
தன்மையார் ஆக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 9
நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லை யென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். 
1926 நாமருவு புன்மை 
நவிற்றச் சமண்டேரர் 
பூமருவு கொன்றையினான் 
புக்கமருந் தொல்கோயில் 
சேன்மருவு பைங்கயத்துச் 
செங்கழுநீர் பைங்குவளை 
தாமருவு மாக்கூரிற் 
றான்றோன்றி மாடமே.
2.042. 10
சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடைனினாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். 
1927 ஆட லமர்ந்தானை 
யாக்கூரிற் றான்றோன்றி 
மாட மமர்ந்தானை 
மாடஞ்சேர் தண்காழி 
நாடற் கரியசீர் 
ஞானசம் பந்தன்சொல் 
பாட லிவைவல்லார்க் 
கில்லையாம் பாவமே.
2.042. 11
திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாட வீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

2.042.திருஆக்கூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர். தேவியார் - கட்கநேத்திரவம்மை. 

1917 அக்கிருந்த வாரமும் ஆடரவும் ஆமையும் தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான் புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042.1
என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேர அணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமை யான கோயில், பொய்யில்லாத மெய்ந் நெறியாகிய சைவ சமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும். 

1918 நீரார வார்சடையான் நீறுடையா னேறுடையான் காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில் கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்தில் தாராமல் காக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 2
கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்ட வனும், கார் காலத்தே மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும். 

1919 வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 3
ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியை தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும். 

1920 கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப் பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில் அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 4
தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும். 

1921 வீக்கினா னாடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென் பாக்கினான் பலகலன்கள் ஆதரித்துப் பாகம்பெண் ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடை தாக்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 5
ஆடுகின்ற பாம்பைக் கச்சாக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம் ஆகும். 

1922 பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான் கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில் விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடம் தண்ணொளிசேர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 6
பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும், ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். 

1923 வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில் பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள் தாங்கினார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 7
பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும். 

1924 கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி இன்னருளா லாட்கொண்ட வெம்பெருமான் தொல்கோயில் பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர்சுமக்கும் தன்னடியார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 8
கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணை காட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமடம் ஆகும். 

1925 நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில் இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந் தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 9
நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லை யென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். 

1926 நாமருவு புன்மை நவிற்றச் சமண்டேரர் பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில் சேன்மருவு பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை தாமருவு மாக்கூரிற் றான்றோன்றி மாடமே.2.042. 10
சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடைனினாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும். 

1927 ஆட லமர்ந்தானை யாக்கூரிற் றான்றோன்றி மாட மமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல் பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.2.042. 11
திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய், ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாட வீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.