LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-43

2.043.திருப்புள்ளிருக்குவேளூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது 
சுவாமிபெயர் - வைத்தியநாதர். 
தேவியார் - தையல்நாயகியம்மை. 
1928 கள்ளார்ந்த பூங்கொன்றை 
மதமத்தங் கதிர்மதியம் 
உள்ளார்ந்த சடைமுடியெம் 
பெருமானா ருறையுமிடந் 
தள்ளாய சம்பாதி 
சடாயென்பார் தாமிருவர் 
புள்ளானார்க் கரையனிடம் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 1
தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். 
1929 தையலா ளொருபாகஞ் 
சடைமேலா ளவளோடும் 
ஐயந்தேர்ந் துழல்வாரோ 
ரந்தணனா ருறையுமிடம் 
மெய்சொல்லா விராவணனை 
மேலோடி யீடழித்துப் 
பொய்சொல்லா துயிர்போனான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 2
ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர். 
1930 வாசநலஞ் செய்திமையோர் 
நாடோறு மலர்தூவ 
ஈசனெம் பெருமானார் 
இனிதாக வுறையுமிடம் 
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் 
கொருநாளு மொழியாமே 
பூசனைசெய் தினிதிருந்தான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 3
தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறு மலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும், யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். 
1931 மாகாயம் பெரியதொரு 
மானுரிதோ லுடையாடை 
ஏகாய மிட்டுகந்த 
வெரியாடி யுறையுமிடம் 
ஆகாயந் தேரோடு 
மிராவணனை யமரின்கண் 
போகாமே பொருதழித்தான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 4
பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர். 
1932 கீதத்தை மிகப்பாடு 
மடியார்கள் குடியாகப் 
பாதத்தைத் தொழநின்ற 
பரஞ்சோதி பயிலுமிடம் 
வேதத்தின் மந்திரத்தால் 
வெண்மணலே சிவமாகப் 
போதத்தால் வழிபட்டான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 5
வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளி வடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர். 
1933 திறங்கொண்ட வடியார்மேற் 
றீவினைநோய் வாராமே 
அறங்கொண்டு சிவதன்ம 
முரைத்தபிரா னமருமிடம் 
மறங்கொண்டங் கிராவணன்றன் 
வலிகருதி வந்தானைப் 
புறங்கண்ட சடாயென்பான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 6
சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர். 
1934 அத்தியினீ ருரிமூடி 
யழகாக வனலேந்திப் 
பித்தரைப்போற் பலிதிரியும் 
பெருமானார் பேணுமிடம் 
பத்தியினால் வழிபட்டுப் 
பலகாலந் தவஞ்செய்து 
புத்தியொன்ற வைத்துகந்தான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 7
யானையை உரித்த தோலால் உடலை மூடிக்கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப் பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர். 
1935 பண்ணொன்ற இசைபாடு 
மடியார்கள் குடியாக 
மண்ணின்றி விண்கொடுக்கும் 
மணிகண்டன் மருவுமிடம் 
எண்ணின்றி முக்கோடி 
வாணாள துடையானைப் 
புண்ணொன்றப் பொருதழித்தான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 8
பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ் நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர். 
1936 வேதித்தார் புரமூன்றும் 
வெங்கணையால் வெந்தவியச் 
சாதித்த வில்லாளி 
கண்ணாளன் சாருமிடம் 
ஆதித்தன் மகனென்ன 
வகன்ஞாலத் தவரோடும் 
போதித்த சடாயென்பான் 
புள்ளிருக்கு வேளூரே.
2.043. 9
தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும் இடம் புள்ளிருக்குவேளூர். 
1937 கடுத்துவருங் கங்கைதனைக் 
கமழ்சடையொன் றாடாமே 
தடுத்தவரெம் பெருமானார் 
தாமினிதா யுறையுமிடம் 
விடைத்துவரு மிலங்கைக்கோன் 
மலங்கச்சென் றிராமற்காப் 
புடைத்தவனைப் பொருதழித்தான் 
புள்ளிருக்கு வேளூரே. 10
2.043.d
சினந்துவந்த கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர். 
1938 செடியாய வுடல்தீர்ப்பான் 
தீவினைக்கோர் மருந்தாவான் 
பொடியாடிக் கடிமைசெய்த 
புள்ளிருக்கு வேளூரைக் 
கடியார்ந்த பொழிற்காழிக் 
கவுணியன்சம் பந்தன்சொல் 
மடியாது சொல்லவல்லார்க் 
கில்லையாம் மறுபிறப்பே.
2.043. 11
குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர் கட்கு மறு பிறப்பு இல்லை. 

2.043.திருப்புள்ளிருக்குவேளூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது 
சுவாமிபெயர் - வைத்தியநாதர். தேவியார் - தையல்நாயகியம்மை. 

1928 கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.2.043. 1
தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர், கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். 

1929 தையலா ளொருபாகஞ் சடைமேலா ளவளோடும் ஐயந்தேர்ந் துழல்வாரோ ரந்தணனா ருறையுமிடம் மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப் பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 2
ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர். 

1930 வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ ஈசனெம் பெருமானார் இனிதாக வுறையுமிடம் யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 3
தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறு மலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும், யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். 

1931 மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம் ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண் போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 4
பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர். 

1932 கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 5
வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளி வடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர். 

1933 திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம் மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப் புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 6
சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர். 

1934 அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப் பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம் பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 7
யானையை உரித்த தோலால் உடலை மூடிக்கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப் பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர். 

1935 பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம் எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப் புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 8
பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ் நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர். 

1936 வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச் சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம் ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும் போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.2.043. 9
தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும் இடம் புள்ளிருக்குவேளூர். 

1937 கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம் விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப் புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 102.043.d
சினந்துவந்த கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர். 

1938 செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக் கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல் மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.2.043. 11
குணமில்லாத இவ்வுடலொடு பிறக்கும் பிறப்பை நீக்கியருளுவானும், தீவினை காரணமாகவரும் நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்பவனும், மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித்தொண்டு பூண்ட மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய கவுணியர்கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் சொல்மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபடவல்லவர் கட்கு மறு பிறப்பு இல்லை. 

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.