LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-44

2.044.திருஆமாத்தூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர். 
தேவியார் - அழகியநாயகியம்மை. 
1939 துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை 
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி 
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன் 
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 2.044.1
தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும், யானைத் தோலைமேல் ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா? 
1940 கைம்மாவின் றோல்போர்த்த காபாலி வானுலகில் 
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி 
அம்மா மலர்ச்சோலை யாமாத்தூ ரம்மானெம் 
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 2.044.2
யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும், வானுலகில் திரிந்து இடம் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும், முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின் புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம் தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர். 
1941 பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர் 
தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான் 
ஆம்பலம்பூம் பொய்கை யாமாத்தூ ரம்மான்றன் 
சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 2.044.3
பாம்பை இடையில் கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை. 
1942 கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள் 
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும் 
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூ ரம்மானைக் 
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. 2.044. 4
வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதி தேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும். 
1943 பாடனெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூடனெறிநின்றான் சூலஞ்சேர் கையினான் 
ஆடனெறிநின்றா னாமாத்தூ ரம்மான்றன் 
வேடநெறிநில்லா வேடமும் வேடமே. 2.044.
பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும். 
1944 சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால் 
காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான் 
யாவருஞ் சென்றேத்து மாமாத்தூ ரம்மானத் 
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 2.044. 6
பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்டு அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய மும்மதில்களை எய்து அழித்தவனும், நெற்றிக்கண்ணனும் எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான் தேவர்கள் தலை வணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன். 
1945 மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை 
வேறாக நில்லாத வேடமே காட்டினான் 
ஆறாத தீயாடி யாமாத்தூ ரம்மானைக் 
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. 2.044. 7
யாவராலும் ஒழிக்கப் படாத கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொரு பாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக் கருதப்படுவர். 
1946 தாளா லரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன் 
நாளா திரையென்றே நம்பன்ற னாமத்தால் 
ஆளானார் சென்றேத்து மாமாத்தூ ரம்மானைக் 
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 2.044.8
தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நாள் திருவாதிரையாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும். 
1947 புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர் 
உள்ளு மவன்பெருமை யொப்பளக்குந் தன்மையதே 
அள்ளல் விளைகழனி யாமாத்தூ ரம்மானெம் 
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 2.044. 9
கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கை யாமோ? 
1948 பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக் 
கொச்சை புலானாற வீருரிவை போர்த்துகந்தான் 
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்ற னாமாத்தூர் 
நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே. 2.044. 10
மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன்தலைமைத்தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத் தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?. 
1949 ஆட லரவசைத்த வாமாத்தூ ரம்மானைக் 
கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன் 
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன் 
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 2.044. 11
படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய புகழை உடைய ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

2.044.திருஆமாத்தூர் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர். தேவியார் - அழகியநாயகியம்மை. 

1939 துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன் பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 2.044.1
தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும், யானைத் தோலைமேல் ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா? 

1940 கைம்மாவின் றோல்போர்த்த காபாலி வானுலகில் மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி அம்மா மலர்ச்சோலை யாமாத்தூ ரம்மானெம் பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 2.044.2
யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும், வானுலகில் திரிந்து இடம் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும், முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின் புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம் தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர். 

1941 பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர் தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான் ஆம்பலம்பூம் பொய்கை யாமாத்தூ ரம்மான்றன் சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 2.044.3
பாம்பை இடையில் கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை. 

1942 கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள் பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும் ஆணாகங் காதல்செய் ஆமாத்தூ ரம்மானைக் காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. 2.044. 4
வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதி தேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும். 

1943 பாடனெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரேசூடனெறிநின்றான் சூலஞ்சேர் கையினான் ஆடனெறிநின்றா னாமாத்தூ ரம்மான்றன் வேடநெறிநில்லா வேடமும் வேடமே. 2.044.
பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும். 

1944 சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால் காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான் யாவருஞ் சென்றேத்து மாமாத்தூ ரம்மானத் தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 2.044. 6
பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்டு அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய மும்மதில்களை எய்து அழித்தவனும், நெற்றிக்கண்ணனும் எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான் தேவர்கள் தலை வணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன். 

1945 மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான் ஆறாத தீயாடி யாமாத்தூ ரம்மானைக் கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. 2.044. 7
யாவராலும் ஒழிக்கப் படாத கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொரு பாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக் கருதப்படுவர். 

1946 தாளா லரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன் நாளா திரையென்றே நம்பன்ற னாமத்தால் ஆளானார் சென்றேத்து மாமாத்தூ ரம்மானைக் கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 2.044.8
தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நாள் திருவாதிரையாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும். 

1947 புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர் உள்ளு மவன்பெருமை யொப்பளக்குந் தன்மையதே அள்ளல் விளைகழனி யாமாத்தூ ரம்மானெம் வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 2.044. 9
கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கை யாமோ? 

1948 பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக் கொச்சை புலானாற வீருரிவை போர்த்துகந்தான் அச்சந்தன் மாதேவிக் கீந்தான்ற னாமாத்தூர் நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே. 2.044. 10
மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன்தலைமைத்தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால் மணம் வீசும் யானைத் தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?. 

1949 ஆட லரவசைத்த வாமாத்தூ ரம்மானைக் கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன் நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன் பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 2.044. 11
படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய புகழை உடைய ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.