LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-45

2.045.திருக்கைச்சினம் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கைச்சினநாதர். 
தேவியார் - வேள்வளையம்மை. 
1950 தையலோர் கூறுடையான் 
தண்மதிசேர் செஞ்சடையான் 
மையுலா மணிமிடற்றான் 
மறைவிளங்கு பாடலான் 
நெய்யுலா மூவிலைவேல் 
ஏந்தி நிவந்தொளிசேர் 
கையுடையான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 1
மாதொருபாகனும், குளிர்ந்த பிறைமதி சூடிய செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும், வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய் பூசப் பெற்ற மூவிலை வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும். 
1951 விடமல்கு கண்டத்தான் 
வெள்வளையோர் கூறுடையான் 
படமல்கு பாம்பரையான் 
பற்றாதார் புரமெரித்தான் 
நடமல்கு மாடலினான் 
நான்மறையோர் பாடலினான் 
கடமல்கு மாவுரியான் 
உறைகோயில் கைச்சினமே.
2.045. 2
விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும், மதயானையை உரித்த தோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் கைச்சினம். 
1952 பாடலார் நான்மறையான் 
பைங்கொன்றை பாம்பினொடும் 
சூடலான் வெண்மதியந் 
துன்று கரந்தையொடும் 
ஆடலா னங்கை 
யனலேந்தி யாடரவக் 
காடலான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 3
பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும், பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி, செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில் அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 
1953 பண்டமரர் கூடிக் 
கடைந்த படுகடல்நஞ் 
சுண்டபிரா னென்றிறைஞ்சி 
யும்பர் தொழுதேத்த 
விண்டவர்கள் தொன்னகர 
மூன்றுடனே வெந்தவியக் 
கண்டபிரான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 4
முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப், பகைவருடைய பழமையான முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவி உறையும் கோவில் கைச்சினம். 
1954 தேய்ந்துமலி வெண்பிறையான் 
செய்யதிரு மேனியினான் 
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் 
மாதினையோர் கூறுடையான் 
சாய்ந்தமரர் வேண்டத் 
தடங்கடனஞ்சுண்டநங்கைக் 
காய்ந்தபிரான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 5
தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும், சிவந்த திருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும், மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப் பெரியகடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 
1955 மங்கையோர் கூறுடையான் 
மன்னு மறைபயின்றான் 
அங்கையோர் வெண்டலையா 
னாடரவம் பூண்டுகந்தான் 
திங்களொடு பாம்பணிந்த 
சீரார் திருமுடிமேல் 
கங்கையினான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 6
மாதொரு கூறனும், நிலையான வேதங்களை ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில் திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 
1956 வரியரவே நாணாக 
மால்வரையே வில்லாக 
எரிகணையான் முப்புரங்க 
ளெய்துகந்த வெம்பெருமான் 
பொரிசுடலை யீமப் 
புறங்காட்டான் போர்த்ததோர் 
கரியுரியான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 7
வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற் பொறியைத் தூவும் சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 
1957 போதுலவு கொன்றை 
புனைந்தான் றிருமுடிமேல் 
மாதுமையா ளஞ்ச 
மலையெடுத்த வாளரக்கன் 
நீதியினா லேத்த 
நிகழ்வித்து நின்றாடும் 
காதலினான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 8
உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதி அவனை முன்போல விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும், இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்பமுடையவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறை கோயில் கைச்சினம். 
1958 மண்ணினைமுன் சென்றிரந்த 
மாலும் மலரவனும் 
எண்ணறியா வண்ண 
மெரியுருவ மாயபிரான் 
பண்ணிசையா லேத்தப் 
படுவான்றன் னெற்றியின்மேல் 
கண்ணுடையான் மேவியுறை 
கோயில் கைச்சினமே.
2.045. 9
மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும், தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 
1959 தண்வயல்சூழ் காழித் 
தமிழ்ஞான சம்பந்தன் 
கண்ணுதலான் மேவியுறை 
கோயில் கைச்சினத்தைப் 
பண்ணிசையா லேத்திப் 
பயின்ற விவைவல்லார் 
விண்ணவரா யோங்கி 
வியனுலகம் ஆள்வாரே.
2.045. 11
குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன் மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓத வல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற அவ்வுலகை ஆட்சிபுரிவர். 
திருச்சிற்றம்பலம்

2.045.திருக்கைச்சினம் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கைச்சினநாதர். தேவியார் - வேள்வளையம்மை. 

1950 தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான் நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர் கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 1
மாதொருபாகனும், குளிர்ந்த பிறைமதி சூடிய செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும், வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய் பூசப் பெற்ற மூவிலை வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும். 

1951 விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான் படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான் நடமல்கு மாடலினான் நான்மறையோர் பாடலினான் கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.2.045. 2
விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும், மதயானையை உரித்த தோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் கைச்சினம். 

1952 பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும் சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும் ஆடலா னங்கை யனலேந்தி யாடரவக் காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 3
பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும், பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி, செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில் அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 

1953 பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ் சுண்டபிரா னென்றிறைஞ்சி யும்பர் தொழுதேத்த விண்டவர்கள் தொன்னகர மூன்றுடனே வெந்தவியக் கண்டபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 4
முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப், பகைவருடைய பழமையான முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவி உறையும் கோவில் கைச்சினம். 

1954 தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினான் வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான் சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடனஞ்சுண்டநங்கைக் காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 5
தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும், சிவந்த திருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும், மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப் பெரியகடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 

1955 மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான் அங்கையோர் வெண்டலையா னாடரவம் பூண்டுகந்தான் திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல் கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 6
மாதொரு கூறனும், நிலையான வேதங்களை ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில் திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 

1956 வரியரவே நாணாக மால்வரையே வில்லாக எரிகணையான் முப்புரங்க ளெய்துகந்த வெம்பெருமான் பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர் கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 7
வரிகளை உடைய பாம்பினை நாணாகவும், பெரிய மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற் பொறியைத் தூவும் சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 

1957 போதுலவு கொன்றை புனைந்தான் றிருமுடிமேல் மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன் நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடும் காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 8
உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதி அவனை முன்போல விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும், இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்பமுடையவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறை கோயில் கைச்சினம். 

1958 மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும் எண்ணறியா வண்ண மெரியுருவ மாயபிரான் பண்ணிசையா லேத்தப் படுவான்றன் னெற்றியின்மேல் கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.2.045. 9
மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும், தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம். 

1959 தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன் கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப் பண்ணிசையா லேத்திப் பயின்ற விவைவல்லார் விண்ணவரா யோங்கி வியனுலகம் ஆள்வாரே.2.045. 11
குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன் மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓத வல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற அவ்வுலகை ஆட்சிபுரிவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.