LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-25

3.025.திருந்துதேவன்குடி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கர்க்கடகேசுவரர். 
தேவியார் - அருமருந்துநாயகியம்மை. 
3063 மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே 3.025.1
திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் (திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும். 
3064 வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே 3.025.2
தேவர்கட்கெல்லாம் தேவனாக, தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவபெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன. தீவினைகளைப் போக்குவன. கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தௌவாக உணரும்படி செய்வன. 
3065 மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே 3.025.3
தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவபெருமானின் சிவவேடங்கள், மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன. முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன. 
3066 செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே 3.025.4
இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து, வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திரு வேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன. நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன. கவிபாடும் ஆற்றலைத் தருவன. சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன. 
3067 விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே 3.025.5
ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம், இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி, தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும். சிவலோகம் செல்லும் நெறிகாட்டும். முக்தி நெறி காட்டும். 
3068 பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே 3.025.6
சந்திரனைத் தொடுமளவு ஓங்கி வளர்ந்துள்ள, நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க. அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக. 
3069 கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே 3.025.7
அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து தேவன்குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின் திருவேடங்கள் முழுதும் குணமேயாகும். குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும். அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர். 
3070 உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே 3.025.8
சிறந்த நந்தவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம், உலகத்தைத் தனக்குக் கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது. எனவே அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது. 
3071 துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன
விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே 3.025.9
வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய நறுமணம் கமழும் நந்தவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில், பிரமனும் திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன. கண்டவர் மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன. அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன. 
3072 செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே 3.025.10
நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர்தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும், சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள். அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா. இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம், உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும். 
3073 சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே 3.025.11
தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவபெருமானைப் பற்றி, ஓங்கிய மாடமாளிகைகளும், சோலைகளும் நிறைந்த, குளிர்ச்சிபொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

3.025.திருந்துதேவன்குடி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கர்க்கடகேசுவரர். தேவியார் - அருமருந்துநாயகியம்மை. 

3063 மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவைபுரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவைதிருந்துதே வன்குடித் தேவர்தே வெய்தியஅருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே 3.025.1
திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் (திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும். 

3064 வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வனஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பனதீதில்தே வன்குடித் தேவர்தே வெய்தியஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே 3.025.2
தேவர்கட்கெல்லாம் தேவனாக, தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவபெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன. தீவினைகளைப் போக்குவன. கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தௌவாக உணரும்படி செய்வன. 

3065 மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வனவானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வனதேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடிஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே 3.025.3
தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவபெருமானின் சிவவேடங்கள், மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன. முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன. 

3066 செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வனகவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பனபுவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடிஅவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே 3.025.4
இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து, வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திரு வேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன. நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன. கவிபாடும் ஆற்றலைத் தருவன. சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன. 

3067 விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறிமண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறிதெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடிஅண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே 3.025.5
ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம், இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி, தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும். சிவலோகம் செல்லும் நெறிகாட்டும். முக்தி நெறி காட்டும். 

3068 பங்கமென் னப்படர் பழிகளென் னப்படாபுங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடிஅங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே 3.025.6
சந்திரனைத் தொடுமளவு ஓங்கி வளர்ந்துள்ள, நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க. அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக. 

3069 கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர்திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடிஅரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே 3.025.7
அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து தேவன்குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின் திருவேடங்கள் முழுதும் குணமேயாகும். குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும். அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர். 

3070 உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலிவிலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தினதிலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடிஅலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே 3.025.8
சிறந்த நந்தவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம், உலகத்தைத் தனக்குக் கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது. எனவே அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது. 

3071 துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தனவிளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே 3.025.9
வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய நறுமணம் கமழும் நந்தவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில், பிரமனும் திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன. கண்டவர் மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன. அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன. 

3072 செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள்உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடிஅருமருந் தாவன அடிகள்வே டங்களே 3.025.10
நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர்தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும், சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள். அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா. இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம், உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும். 

3073 சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனைமாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான்நாடவல் லதமிழ் ஞானசம் பந்தனபாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே 3.025.11
தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவபெருமானைப் பற்றி, ஓங்கிய மாடமாளிகைகளும், சோலைகளும் நிறைந்த, குளிர்ச்சிபொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.