LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-46

2.046.திருநாலூர்த்திருமயானம் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பலாசவனேசுவரர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
1960 பாலூரு மலைப்பாம்பும் 
பனிமதியு மத்தமும் 
மேலூருஞ் செஞ்சடையான் 
வெண்ணூல்சேர் மார்பினான் 
நாலூர் மயானத்து 
நம்பான்ற னடிநினைந்து 
மாலூருஞ் சிந்தையர்பால் 
வந்தூரா மறுபிறப்பே.
2.046. 1
பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப் பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது. 
1961 சூடும் பிறைச்சென்னிச் 
சூழ்கா டிடமாக 
ஆடும் பறைசங் 
கொலியோ டழகாக 
நாடுஞ் சிறப்போவா 
நாலூர் மயானத்தைப் 
பாடுஞ் சிறப்போர்பாற் 
பற்றாவாம் பாவமே.
2.046. 2
பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா. 
1962 கல்லா னிழன்மேவிக் 
காமுறுசீர் நால்வர்க்கன் 
றெல்லா வறனுரையும் 
இன்னருளால் சொல்லினான் 
நல்லார் தொழுதேத்தும் 
நாலூர் மயானத்தைச் 
சொல்லா தவரெல்லாஞ் 
செல்லாதார் தொன்னெறிக்கே.
2.046.3
கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர். 
1963 கோலத்தார் கொன்றையான் 
கொல்புலித்தோ லாடையான் 
நீலத்தார் கண்டத்தான் 
நெற்றியோர் கண்ணினான் 
ஞாலத்தார் சென்றேத்தும் 
நாலூர் மயானத்தில் 
சூலத்தா னென்பார்பாற் 
சூழாவாந் தொல்வினையே.
2.046. 4
அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர் மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா. 
1964 கறையார் மணிமிடற்றான் 
காபாலி கட்டங்கன் 
பிறையார் வளர்சடையான் 
பெண்பாக னண்பாய 
நறையார் பொழில்புடைசூழ் 
நாலூர் மயானத்தெம் 
இறையானென் றேத்துவார்க் 
கெய்துமா மின்பமே.
2.046. 5
விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும். 
1965 கண்ணார் நுதலான் 
கனலா டிடமாகப் 
பண்ணார் மறைபாடி 
ஆடும் பரஞ்சோதி 
நண்ணார் புரமெய்தான் 
நாலூர் மயானத்தை 
நண்ணா தவரெல்லாம் 
நண்ணாதார் நன்னெறியே.
2.046. 6
கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார். 
1966 கண்பாவு வேகத்தாற் 
காமனைமுன் காய்ந்துகந்தான் 
பெண்பாவு பாகத்தான் 
நாகத்தோ லாகத்தான் 
நண்பார் குணத்தோர்கள் 
நாலூர் மயானத்தை 
எண்பாவு சிந்தையார்க் 
கேலா விடர்தானே.
2.046. 7
நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத் தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறை வதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா. 
1967 பத்துத் தலையோனைப் 
பாதத் தொருவிரலால் 
வைத்து மலையடர்த்து 
வாளோடு நாள்கொடுத்தான் 
நத்தி னொலியோவா 
நாலூர் மயானத்தென் 
அத்த னடிநினைவார்க் 
கல்ல லடையாவே.
2.046. 8
பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா. 
1968 மாலோடு நான்முகனும் 
நேட வளரெரியாய் 
மேலோடு கீழ்காணா 
மேன்மையான் வேதங்கள் 
நாலோடு மாறங்கம் 
நாலூர் மயானத்தெம் 
பாலோடு நெய்யாடி 
பாதம் பணிவோமே.
2.046. 9
திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம். 
1969 துன்பாய மாசார் 
துவராய போர்வையார் 
புன்பேச்சுக் கேளாதே 
புண்ணியனை நண்ணுமின்கள் 
நண்பாற் சிவாயவெனா 
நாலூர் மயானத்தே 
இன்பா யிருந்தானை 
யேத்துவார்க் கின்பமே.
2.046. 10
துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு ‘சிவாய’ என்னும் மந்திரத்தைக் கூறிக்கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்பவடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும். 
1970 ஞாலம் புகழ்காழி 
ஞானசம் பந்தன்றான் 
நாலு மறையோதும் 
நாலூர் மயானத்தைச் 
சீலம் புகழாற் 
சிறந்தேத்த வல்லாருக் 
கேலும் புகழ்வானத் 
தின்பா யிருப்பாரே.
2.046. 11
உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞான சம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும். 
திருச்சிற்றம்பலம்

2.046.திருநாலூர்த்திருமயானம் 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பலாசவனேசுவரர். தேவியார் - பெரியநாயகியம்மை. 

1960 பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும் மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான் நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.2.046. 1
பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப் பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது. 

1961 சூடும் பிறைச்சென்னிச் சூழ்கா டிடமாக ஆடும் பறைசங் கொலியோ டழகாக நாடுஞ் சிறப்போவா நாலூர் மயானத்தைப் பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.2.046. 2
பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா. 

1962 கல்லா னிழன்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன் றெல்லா வறனுரையும் இன்னருளால் சொல்லினான் நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச் சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.2.046.3
கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர். 

1963 கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான் நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான் ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில் சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.2.046. 4
அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர் மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா. 

1964 கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் பிறையார் வளர்சடையான் பெண்பாக னண்பாய நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம் இறையானென் றேத்துவார்க் கெய்துமா மின்பமே.2.046. 5
விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும். 

1965 கண்ணார் நுதலான் கனலா டிடமாகப் பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.2.046. 6
கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார். 

1966 கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான் பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான் நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை எண்பாவு சிந்தையார்க் கேலா விடர்தானே.2.046. 7
நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத் தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறை வதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா. 

1967 பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான் நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென் அத்த னடிநினைவார்க் கல்ல லடையாவே.2.046. 8
பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா. 

1968 மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய் மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள் நாலோடு மாறங்கம் நாலூர் மயானத்தெம் பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.2.046. 9
திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம். 

1969 துன்பாய மாசார் துவராய போர்வையார் புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள் நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.2.046. 10
துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு ‘சிவாய’ என்னும் மந்திரத்தைக் கூறிக்கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்பவடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும். 

1970 ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான் நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச் சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக் கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.2.046. 11
உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞான சம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.