LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-48

2.048.திருவெண்காடு 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர். 
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை. 
1982 கண்காட்டு நுதலானுங் 
கனல்காட்டுங் கையானும் 
பெண்காட்டு முருவானும் 
பிறைகாட்டுஞ் சடையானும் 
பண்காட்டு மிசையானும் 
பயிர்காட்டும் புயலானும் 
வெண்காட்டி லுறைவானும் 
விடைகாட்டுங் கொடியானே.
2.048.1
வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்; கையில் கனல் ஏந்தியவன்; உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன் பிறையணிந்த சடைமுடியினன்; பண்ணில் இறைவடிவானவன்; பயிரை வளர்க்கும் மேகமானவன்; விடைஏந்திய கொடியை உடையவன். 
1983 பேயடையா பிரிவெய்தும் 
பிள்ளையினோ டுள்ளநினை 
வாயினவே வரம்பெறுவ 
ரையுறவேண் டாவொன்றும் 
வேயனதோ ளுமைபங்கன் 
வெண்காட்டு முக்குளநீர் 
தோய்வினையா ரவர்தம்மைத் 
தோயாவாந் தீவினையே.
2.048.2
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா. 
1984 மண்ணொடுநீ ரனல்காலோ 
டாகாய மதியிரவி 
எண்ணில்வரு மியமான 
னிகபரமு மெண்டிசையும் 
பெண்ணினொடாண் பெருமையொடு 
சிறுமையுமாம் பேராளன் 
விண்ணவர்கோன் வழிபடவெண் 
காடிடமா விரும்பினனே.
2.048.3
மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை, எண்திசை, பெண், ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாகக்கி கொண்டு எழுந்தருளியுள்ளான். 
1985 விடமுண்ட மிடற்றண்ணல் 
வெண்காட்டின் றண்புறவின் 
மடல்விண்ட முடத்தாழை 
மலர் நிழலைக் குருகென்று 
தடமண்டு துறைக்கெண்டை 
தாமரையின் பூமறையக் 
கடல்விண்ட கதிர்முத்தம் 
நகைகாட்டுங் காட்சியதே.
2.048. 4
நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது. 
1986 வேலைமலி தண்கானல் 
வெண்காட்டான் றிருவடிக்கீழ் 
மாலைமலி வண்சாந்தால் 
வழிபடுநன் மறையவன்றன் 
மேலடர்வெங் காலனுயிர் 
விண்டபினை நமன் றூதர் 
ஆலமிடற் றானடியா 
ரென்றடர வஞ்சுவரே.
2.048. 5
கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர். 
1987 தண்மதியும் வெய்யரவுந் 
தாங்கினான் சடையினுடன் 
ஒண்மதிய நுதலுமையோர் 
கூறுகந்தா னுறைகோயில் 
பண்மொழியால் அவன்நாமம் 
பலவோதப் பசுங்கிள்ளை 
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் 
வீற்றிருக்கும் வெண்காடே.
2.048. 6
தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக் கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும். 
1988 சக்கரமாற் கீந்தானுஞ் 
சலந்தரனைப் பிளந்தானும் 
அக்கரைமே லசைத்தானும் 
அடைந்தயிரா வதம்பணிய 
மிக்கதனுக் கருள்சுரக்கும் 
வெண்காடும் வினைதுரக்கும் 
முக்குளநன் குடையானு 
முக்கணுடை யிறையவனே.
2.048. 7
திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான். 
1989 பண்மொய்த்த வின்மொழியாள் 
பயமெய்த மலையெடுத்த 
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா 
னுறைகோயில் 
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் 
கடன் முழங்க 
விண்மொய்த்த பொழில்வரிவண் 
டிசைமுரலும் வெண்காடே.
2.048. 8
பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும். 
1990 கள்ளார்செங் கமலத்தான் 
கடற்கிடந்தா னெனவிவர்கள் 
ஒள்ளாண்மை கொளற்கோடி 
யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான் 
வெள்ளானை தவஞ்செய்யு 
மேதகுவெண் காட்டானென் 
றுள்ளாடி யுருகாதா 
ருணர்வுடைமை யுணரோமே.
2.048. 9
தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ் செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம். 
1991 போதியர்கள் பிண்டியர்கள் 
மிண்டுமொழி பொருளென்னும் 
பேதையர்க ளவர்பிறிமின் 
அறிவுடையீ ரிதுகேண்மின் 
வேதியர்கள் விரும்பியசீர் 
வியன்றிருவெண் காட்டானென் 
றோதியவர் யாதுமொரு 
தீதிலரென் றுணருமினே.
2.048.10
போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோக மரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரை களைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின். 
1992 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் 
றமிழ்ஞான சம்பந்தன் 
விண்பொலிவெண் பிறைச்சென்னி 
விகிர்தனுறைவெண்காட்டைப் 
பண்பொலிசெந் தமிழ்மாலை 
பாடியபத் திவைவல்லார் 
மண்பொலிய வாழ்ந்தவர்போய் 
வான் பொலியப் புகுவாரே.
2.048. 11
குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த் தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறை மதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர். 
திருச்சிற்றம்பலம்

2.048.திருவெண்காடு 
பண் - சீகாமரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர். தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை. 

1982 கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.2.048.1
வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்; கையில் கனல் ஏந்தியவன்; உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன் பிறையணிந்த சடைமுடியினன்; பண்ணில் இறைவடிவானவன்; பயிரை வளர்க்கும் மேகமானவன்; விடைஏந்திய கொடியை உடையவன். 

1983 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.2.048.2
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா. 

1984 மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும் பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.2.048.3
மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை, எண்திசை, பெண், ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாகக்கி கொண்டு எழுந்தருளியுள்ளான். 

1985 விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.2.048. 4
நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும் கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது. 

1986 வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன் மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர் ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.2.048. 5
கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர். 

1987 தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில் பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.2.048. 6
தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான், உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்களை ஓதிக் கொண்டு வெண்முகில் சேரும் உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும். 

1988 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.2.048. 7
திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவனும், சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறையவனே ஆவான். 

1989 பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில் கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.2.048. 8
பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள் இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும். 

1990 கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள் ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான் வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென் றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.2.048. 9
தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ் செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம். 

1991 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின் வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென் றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.2.048.10
போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள், அசோக மரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரை களைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக. அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின். 

1992 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறைவெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலியப் புகுவாரே.2.048. 11
குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த் தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறை மதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர், மண்பொலிய வழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.