|
||||||||
கருப்பட்டி இட்லி (karupatti idly) |
||||||||
தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், தூளாக்கிய கருப்பட்டி - ஒரு கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை. செய்முறை: 1.முதலில் அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள். 2.உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள். 3.பிறகு மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள். 4.கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில்சேர்க்கவும். 5.இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|