LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-27

3.027.திருச்சக்கரப்பள்ளி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆலந்துறைஈசுவரர். 
தேவியார் - அல்லியங்கோதையம்மை. 
3085 படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே 3.027.1
சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக உடையவர். பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாகக் கொண்டவர். திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச் சடையிலே தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும். 
3086 பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்எருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.2
சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். மண்டையோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர். திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும். 
3087 மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.3
சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது, ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் அணிந்தவர். உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 
3088 நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே 3.027.4
சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர். நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர். வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர். அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர், வண்டுகள் ஒலிக்கின்ற, தேன்துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச, வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும், மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 
3089 வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே 3.027.5
சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர். கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர், நறுமணம் கமழும் மலர், அகில், பலவகை மணிகள், சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப் பள்ளி என்பதாகும். 
3090 பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே 3.027.6
உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து சாம்பலாகும்படி, கோபத்துடன், வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்தவர். தேவர்களும், அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர். உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 
3091 பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் 
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.7
சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தரும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 
3092 முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய 
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.8
முதிர்வு அடையாத இள வெண்திங்களைச் சிவபெருமான் சடைமுடியில் சூடியவர். முன்பொருநாள் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். கயிலைமலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 
3093 துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.9
கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ பெருமான் அணிந்தவர், மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர். பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். திருமாலும், பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 
3094 உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே 3.027.10
உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும், உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை. மெய்ம்மையானவை அல்ல. அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா. விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சார்த்தியும், குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும் வணங்குவீர்களாக! 
3095 தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
கண்ணுத லவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே 3.027.11
குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும். 
திருச்சிற்றம்பலம்

3.027.திருச்சக்கரப்பள்ளி 
பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆலந்துறைஈசுவரர். தேவியார் - அல்லியங்கோதையம்மை. 

3085 படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரைஉடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே 3.027.1
சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக உடையவர். பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாகக் கொண்டவர். திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச் சடையிலே தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும். 

3086 பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்சூடினார் படுதலை துன்எருக் கதனொடும்நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.2
சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். மண்டையோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர். திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும். 

3087 மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறைதன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.3
சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது, ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் அணிந்தவர். உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 

3088 நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறைமலர்மலி சலமொடு வந்திழி காவிரிசலசல மணிகொழி சக்கரப் பள்ளியே 3.027.4
சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர். நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர். வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர். அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர், வண்டுகள் ஒலிக்கின்ற, தேன்துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச, வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும், மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 

3089 வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர்கந்தமார் மலரொடு காரகில் பல்மணிசந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே 3.027.5
சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர். கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர், நறுமணம் கமழும் மலர், அகில், பலவகை மணிகள், சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப் பள்ளி என்பதாகும். 

3090 பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலைவாங்கினார் வானவர் தானவர் வணங்கிடஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே 3.027.6
உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து சாம்பலாகும்படி, கோபத்துடன், வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்தவர். தேவர்களும், அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர். உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 

3091 பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலிநீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந் தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.7
சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தரும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 

3092 முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.8
முதிர்வு அடையாத இள வெண்திங்களைச் சிவபெருமான் சடைமுடியில் சூடியவர். முன்பொருநாள் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். கயிலைமலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 

3093 துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே 3.027.9
கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ பெருமான் அணிந்தவர், மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர். பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர். குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். திருமாலும், பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும். 

3094 உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள்விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே 3.027.10
உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும், உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை. மெய்ம்மையானவை அல்ல. அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா. விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சார்த்தியும், குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும் வணங்குவீர்களாக! 

3095 தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்கண்ணுத லவனடிக் கழுமல வளநகர்நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே 3.027.11
குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.